கனவு வீட்டிற்காக சேமித்த பணம்.. RICE ATM ஆக உருவெடுத்த கதை.. கொரோனா காலத்தில் நெகிழ்ச்சியான கதை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் உதவி என்பது கேட்டாலும் கிடைப்பது கஷ்டம். ஆனால் மக்களின் கஷ்டத்தினை பார்த்து தானாக தேடி வந்து உதவி செய்தவர்களையும் பார்க்க முடிகிறது.

 

பொதுவாக பலருக்கும் பொதுச் சேவைகளுக்காக உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் தனக்கு போகத் தான் தானமும் தர்மமும் என்ற மன நிலையும் இருக்கும்.

ஆனால் ஹைத்ராபாத்தினை சேர்ந்த ஐடி ஊழியர் ராமு தேசாபதி. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது கனவு வீட்டிற்காகச் சிறுக சிறுக சேர்த்து வைத்த தொகை உள்ளிட்ட 50 லட்சம் ரூபாய் பணத்தை, வெளி மாநில தொழிலாளர்களுக்காகச் செலவு செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

யார் இந்த ராம் தேசாபதி?

யார் இந்த ராம் தேசாபதி?

தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தை சேர்ந்தவர் ராமு தோசாப்தி, இவர் தன் கனவு வீடான 3 பெட்ரூம் கொண்ட பிளாட்டை வாங்கச் சிறிது சிறிதாக சேமித்த தொகையுடன் சேர்த்து, 50 லட்சம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் தான் கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

எதற்காக இவ்வளவு?

எதற்காக இவ்வளவு?

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனது குழந்தைக்காக சிக்கன் வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு இவர் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலராக பணியாற்றும் பெண் ஒருவரும் சிக்கன் வாங்க வந்துள்ளார். அந்த பெண் சுமார் 2000 ரூபாய் மதிப்பிலான சிக்கன் வாங்கியுள்ளார். அந்த பெண்ணிற்கு எதற்காக இவ்வளவு சிக்கன் என்று கேட்டுள்ளார்.

தொழிலாளர்களுக்கு உதவி
 

தொழிலாளர்களுக்கு உதவி

அதற்கு அந்த பெண் தன் வீட்டின் அருகே சில வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் உணவிற்கு மிகப்பெரிய அளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யத் தான், இதை வாங்குவதாகத் தெரிவித்தார். இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த தேசாப்தி, அந்த பெண்ணின் வருமானம் குறித்தும் கேட்டுள்ளார். அந்த பெண் தனக்கு 6,000 ரூபாய் சம்பளம் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

சம்பளம் எவ்வளவு?

சம்பளம் எவ்வளவு?

மாதம் 6,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு பெண்ணே 2,000 ரூபாயினை உதவியாகச் செய்யும் போது நாம் ஏன் செய்யக்கூடாது என தோன்றியுள்ளது. இதனால் அவர் தன்னிடம் உள்ள பணத்தை வைத்துக் குறிப்பிட்ட அந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிக்குச் சென்று அவர்களுக்கு இவரும் உதவி செய்தார்.

அத்தியாவசிய பொருட்கள் உதவி

அத்தியாவசிய பொருட்கள் உதவி

அங்குள்ள 192 பேருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேவைப்பட்டது. இதற்கிடையில் அங்கிருந்த சிலர் சுமார் 400-500 கி.மீ தொலைவில் உள்ள தங்கள் ஊர்களுக்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்கள் அங்கே இருக்கச் சொல்லி அவர்களுக்கு வேண்டிய உதவியைத் தானே செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

கிரானா ஸ்டோர் மூலம் உதவி

கிரானா ஸ்டோர் மூலம் உதவி

பின்னர் மேலும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்யத் திட்டமிட்ட அவர், ஆரம்பத்தில் 1,50 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவி செய்ய தொடங்கினார். ஆனால் அது ஒரு சில நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதன் பின்னர் லோக்கல் கிரானா ஸ்டோர் மூலம் உதவி செய்துள்ளார். ஆனால் தனது வீட்டில் முன் காலை நேரத்தில் கூட்டமாக மக்கள் கூடினர்,

அரிசி ஏடிஎம்

அரிசி ஏடிஎம்

இதனையடுத்து தான் அரிசிக்கான ஏடிஎம் இயந்திரத்தை வாங்கியுள்ளார். அதன் மூலம் அவர் தேவைப்படுபவர்கள் அந்த இயந்திரம் மூலம் தங்களுக்குத் தேவையான அளவு அரிசியை எடுத்துக்கொள்ளலாம் எனவும், மேலும் அரிசி தவிர மற்ற மளிகை சாமான்களும் அங்கு அவர் வைத்துள்ளார்.

கனவு வீட்டுக்கான பணம்

கனவு வீட்டுக்கான பணம்

இதற்காக இவர் இதுவரை தன் சேமிப்பு பணம் 50 லட்சம் ரூபாயினை செலவு செய்துவிட்டார். தன் கனவு வீடானா 3 பெட்ரூம் வீட்டிற்காக வைத்திருந்த பணத்தை வைத்து வெளி மாநில தொழிலாளர்களுக்காக அவர் உதவி செய்தது பலரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அவர் உதவி செய்வதில் தங்கள் பங்கை வைத்துக்கொள்ள பலர் அவருக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிக்கொடுத்து உதவி வருகின்றனர். 250 நாட்களுக்கு மேலாக செய்த இந்த சேவை, தற்போது இதனை நிறுத்தி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: atm ஏடிஎம்
English summary

Young IT man spent almost Rs.50 lakh for Rice ATM for needy amid covid-19 period

Coronavirus impact.. Young IT man spent almost Rs.50 lakh for Rice ATM for needy amid covid-19 period
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X