நவம்பர் 30 தான் கடைசி தேதி.. இதை செய்யாவிடில் பென்சன் வராது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பென்சன் வாங்கும் ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை தெரிவிக்க, ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு ஒரு ஆவணத்தினை சமர்பிக்க வேண்டும். இது தான் ஜீவன் பிரமான பத்திரம் அல்லது டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் ஆகும்.

 

இந்த பத்திரத்தினை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் தேதிக்குள் பென்சன் வாங்குவோர் சமர்பிக்க வேண்டும்.

ஆக இந்த காலக்கெடு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மூத்த குடிமக்கள் இந்த பிரமான பத்திரத்தினை கொடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

ரூ.3.45 கோடி கார்பஸ்.. மாதம் ரூ.1.15 லட்சம் பென்சன்.. எவ்வளவு முதலீடு.. எந்த திட்டத்தில் செய்யலாம்!

பென்சன் வாங்க அவசியம்

பென்சன் வாங்க அவசியம்

இந்த லைஃப் சர்டிபிகேட்டினை கொடுப்பது அவசியமாகிறது. இதனை செய்யாவிடில் டிசம்பர் மாதம் முதல் உங்களுக்கு பென்சன் கிடைக்காது. முன்னதாக இதற்காக பென்சன் வாங்குபவர்கள் வங்கிகளுக்கும், அஞ்சலகத்திற்கும் அலைய வேண்டியிருந்தது. ஆனால் இன்று அப்படியில்லை, ஓய்வூதியதாரர்களுக்கு ஏதுவாக வீடு தேடி வந்து சேவை கொடுக்கும் அளவுக்கு சேவை வளர்ந்துள்ளது.

பல ஆப்சன் உண்டு

பல ஆப்சன் உண்டு

குறிப்பாக இந்த லைஃப் சர்டிபிகேட்டினை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்கும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாயிலாக டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் (Digital Life certificate) சமர்ப்பிப்பதற்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஜீவன் பிரமான் ஆப்
 

ஜீவன் பிரமான் ஆப்

டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய ஜீவன் பிரமான் ஆப்பினை (Jeevan Pramaan) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதில் புதிய பதிவு (new registration) என்பதனை கிளிக் செய்து, ஆதார் எண், உங்கள் வங்கிக் கணக்கு எண், பெயர், மொபைல் எண், பென்சன் பேமெண்ட் ஆர்டர் (PPO) ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

எப்படி பதிவு செய்வது?

எப்படி பதிவு செய்வது?

பதிவு செய்த பின்னர், உங்களது பதிவு மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும், அதனை பதிவிட்டு சப்மிட் கொடுக்க வேண்டும்.

இதனையடுத்து ஜீவன் பிரமான் செயலியில் ஓடிபி எண் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.

Generate Jeevan Pramaan என்பதைத் தேர்ந்தெடுத்து ஆதார் எண், மொபைல் எண் ஆகிய விவரங்களைப் பதிவிடவும்.

அதன் பின் generate OTP என்பதை கிளிக் செய்தால், உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்.

என்னென்ன விவரங்கள் கொடுக்க வேண்டும்

என்னென்ன விவரங்கள் கொடுக்க வேண்டும்

PPO எண், பெயர், பென்சன் கொடுக்கும் நிறுவனத்தின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டியிருக்கும்.

அதன் பின்னர் ஆதார் விவரங்களை வைத்து கை ரேகையை ஸ்கேன் செய்தால், ஜீவன் பிரமான் பத்திரம் திரையில் தோன்றும்.

உங்களது லைஃப் சர்டிபிகேட் கிடைப்பது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ்- ஆக வரும்.

 ஆயுள் சான்றிதழை வீட்டில் இருந்தே சமர்ப்பிக்கலாம்

ஆயுள் சான்றிதழை வீட்டில் இருந்தே சமர்ப்பிக்கலாம்

ஆக ஓய்வூதியம் வாங்குவோர் தங்களது லைஃப் சர்டிபிகேட்டினை வீட்டில் இருந்த படியே சமர்ப்பிக்கலாம்.

அஞ்சலகம் மூலமாகவும் இந்த சேவை வழங்கப்படுகிறது. இதில் தபால் காரர்கள் வீடு தேடி வந்து டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் (Digital Life Certificate) வாங்கி கொள்வார்கள். இதற்கு 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆக இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் வங்கிக் கிளைகளில் நாள் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை இனி இல்லை.

இருந்த இடத்தில் இருந்த படியே லைஃப் சர்டிபிகேட்டினை சமர்ப்பிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Your pension may stop next month, if don’t submit life certificate

Your pension may stop next month, if don’t submit life certificate/ நவம்பர் 30 தான் கடைசி தேதி.. இதை செய்யாவிடில் பென்சன் வராது..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X