தொடர் நஷ்டத்திலும் அசராமல் சோமேட்டோ.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடர் நஷ்டத்தினை கண்டு வரும் சோமேட்டோ நிறுவனம், அதனை கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முதலீடுகளையும் செய்து வருகின்றது. இதற்கிடையில் அந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கிட்டதட்ட 1% ஏற்றம் கண்டுள்ளது.

 

இது கடந்த ஆறு மாதங்களில் நான்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 275 மில்லியன் முதலீடினை செய்துள்ளது. இது அடுத்த 1 - 2 ஆண்டுகளில் 1 பில்லியன் டாலரினை செலவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இவ்வாறு செலுத்தப்படவுள்ள முதலீடுகளில் பெரும் பகுதி விரைவான வணிகத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய பொருளாதாரம் 10% மேல் வளர்ச்சி அடையும்: நித்தி அயோக் ராஜீவ் குமார்

சோமேட்டோ முதலீடு

சோமேட்டோ முதலீடு

இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் தீபிந்தர் கோயல், எங்கள் முதலீடுகள் அனைத்தும் கணிதம் மற்றும் வேதியியலின் கலவையாகும். நிறுவனங்களுக்கு பின்னால் நாங்கள் முதலீடு செய்கிறோம். நாங்கள் நிறுவனங்களுக்கு பின்னால் முதலீடு செய்கிறோம். இவ்வளவு பெரிய வணிகத்தினை உருவாக்க முடியும் என நாங்கள் நினைக்கவில்லை.

சோமேட்டோவின் பணி என்ன?

சோமேட்டோவின் பணி என்ன?

சோமேட்டோவின் முக்கிய வணிகம் உணவு விநியோகம், ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்துவது தான். அடுத்ததாக உணவகங்களுக்கு தேவையான உயர்தரமான மூலதன பொருட்களை சப்ளை செய்வதாகவும் தெரிவித்துள்ளது. ஆக உணவு டெலிவரி மற்றும் மூலதன பொருட்கள் சப்ளை, புக்கிங் என மூன்று தரப்பில் இருந்தும் வருமானம் உண்டு.

எங்கெங்கு முதலீடு
 

எங்கெங்கு முதலீடு

Samast Technologies Pvt Ltd நிறுவனத்தில் சோமேட்டோ 50 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 60 மில்லியன் டாலர்களாகும்.
கடந்த ஆகஸ்ட் 2021ல் குரோஃபர்ஸ் நிறுவனத்தில் 100 மில்லியன் டாலர்களையும் முதலீடு செய்துள்ளது.
இதே போல குருகிராமை தளமாகக் கொண்ட Bigfoot Retail Solutions Pvt Ltd நிறுவனத்தில் 8% பங்கிற்காக 75 மில்லியன் டாலரினை முதலீடு செய்துள்ளது. இது மொத்தம் 185 மில்லியன் டாலர் தொகுப்பாகும். மொத்தத்தில் கடந்த ஆறு மாதங்களில் 275 மில்லியன் டாலர்களை கடந்த ஆறு மாதங்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்னும் நஷ்டம் தான்

இன்னும் நஷ்டம் தான்

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இருந்து வரும் இந்த நிறுவனம், கடந்த செப்டம்பர் காலாண்டிலும் 429.6 கோடி ரூபாய் நஷ்டத்தினை எதிர்கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 229.6 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஜூன் காலாண்டில் 356.2 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது. ஒரு தனது வணிகத்தில் நஷ்டத்தினை கண்டு கொண்டிருந்தாலும், அடுத்த கட்டத்தினை நோக்கி சோமேட்டோ நிறுவனம் தனது பயணத்தினை தொடங்கியுள்ளது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யவும், அடுத்தடுத்த புதிய வணிக யுக்திகளை புகுத்தவும் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்தும் வருகின்றது.

இதற்கிடையில் இன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 3% அதிகரித்து 140.10 ரூபாயாக என் எஸ் இ-ல் வர்த்தகமாகி வருகின்றது. இதே பிஎஸ் இ-ல் 1% அதிகரித்து, 136.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zomato invested in $275 in 4 startups in just six months: looking to expand of this investment

Zomato invested in $275 in 4 startups in just six months: looking to expand of this investment/ களத்தில் புகுந்து விளையாடும் சோமேட்டோ.. 4 நிறுவனங்களில் $275 முதலீடு.. ஆனா இதையும் கவனிக்கனும்.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X