சோமேட்டோ எடுத்த திடீர் முடிவு.. உணவகங்கள் நிம்மதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை துறையில் பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில், இத்துறையில் முன்னோடியாக விளங்கும் சோமேட்டோ நிறுவனம் நீண்ட காலமாக உணவகங்கள் உடனான பிரச்சனையைத் தீர்க்க முடிவு செய்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

தற்போது சோமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்பு மூலம் உணவகங்களுக்கு ஆன்லைன் உணவு டெலிவரி துறையில் ஆதிக்கம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா இறக்குமதி அதிகரிப்பு.. இந்தியா அதிகம் இறக்குமதி செய்த பொருள் எது தெரியுமா..?!

சோமேட்டோ

சோமேட்டோ

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ மற்றும் கூட்டணி உணவகங்கள் மத்தியில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனையைச் சரி செய்யும் விதமாக, இனி உணவகங்கள் சமைத்த உணவைத் தத்தம் உணவகங்களே வாடிக்கையாளருக்கு நேரடியாக டெலிவரி செய்ய விரைவில் அனுமதி அளிக்க உள்ளது.

 நேரடியாக டெலிவரி

நேரடியாக டெலிவரி

அதாவது சோமேட்டோ தளத்தின் மூலம் உணவகங்கள் உணவுக்கான ஆர்டரை பெற்றாலும் அந்த உணவை உணவகங்களே வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய முடியும், இதுநாள் வரையில் சோமேட்டோ டெலிவரி பார்ட்னர் தான் உணவங்களில் உணவைப் பெற்று வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்து வந்தனர்.

 டெலிவரி பார்டனர் பற்றாக்குறை
 

டெலிவரி பார்டனர் பற்றாக்குறை

மழைக்காலம் மற்றும் இதர முக்கியமான காலகட்டத்தில் போதுமான டெலிவரி பார்டனர் இல்லாத காரணத்தால் உணவகங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து வருவதாகச் சோமேட்டோவிடம் நீண்ட காலமாகக் குறை கூறிவந்த வந்த நிலையில் தற்போது சோமேடோட் நிறுவனத்தின் டெலிவரி சேவையில் ஹைப்ரிட் மாடலை கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாகச் சோமேட்டோ நிறுவனத்தின் துணைத் தலைவரான பர்வேஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

 உணவின் தரம் மற்றும் பேக்கிங் தரம்

உணவின் தரம் மற்றும் பேக்கிங் தரம்

இதேபோல் இந்திய தேசிய உணவக சங்கம் நடத்திய முக்கியமான கூட்டத்தில் பேசிய பர்வேஷ் பாண்டே, ஆன்லைன் டெலிவரி சேவையில் உணவின் தரம் மற்றும் பேக்கிங் தரம் தான் அடித்தளம். எனவே ஹைப்ரிட் மாடலை பயன்படுத்தும் உணவகங்கள் ஒருபோதும் இவ்விரு விஷயங்களைக் கைவிடக் கூடாது என அறிவித்துள்ளது.

 வளர்ச்சி வாய்ப்பு

வளர்ச்சி வாய்ப்பு

இந்தியாவில் தற்போது இருக்கும் இண்டர்நெட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் வெறும் 8 சதவீத மக்களுக்கு மட்டுமே ஆன்லைன் உணவு டெலிவரி சேவை பயன்படுத்தி வருகின்றனர், இதனால் இத்துறையில் அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் இன்னும் குவிந்துக்கிடக்கிறது. மேலும் 2020 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021 ஆண்டில் ஆன்லைன் உணவு ஆர்டர்கள் எண்ணிக்கை 143 சதவீதம் அதிகரித்துள்ளது.

 ஸ்விக்கி 10.7 பில்லியன் டாலர் மதிப்பீடு

ஸ்விக்கி 10.7 பில்லியன் டாலர் மதிப்பீடு

சோமேட்டோ நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வந்தாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை இன்னும் நம்பிக்கை அளிக்க முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் சோமேட்டோ நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஸ்விக்கி இன்று 100 மில்வியன் டாலர் அளவிலான முதலீட்டைத் திரட்டி 10.7 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்று அசத்தியுள்ளது.

 700 மில்லியன் டாலர்

700 மில்லியன் டாலர்

ஸ்விக்கி நிறுவனத்தின் இந்த 700 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்காவின் இன்வெஸ்கோ, பேரான் கேப்பிடல் குரூப், சுமேரு வென்சர், IIFL மற்றும் கோட்டாக் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது. ஸ்விக்கி தற்போது உணவு டெலிவரி மட்டும் அல்லாமல் மளிகை பொருட்களையும் நேரடியாக டெலிவரி செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zomato plans to allow a hybrid delivery model to partner restaurants; Swiggy raised $700 million

Zomato plans to allow a hybrid delivery model to partner restaurants; Swiggy raised $700 million சோமேட்டோ எடுத்த திடீர் முடிவு.. உணவகங்கள் நிம்மதி..!
Story first published: Monday, January 24, 2022, 20:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X