சொமேட்டோ: 2 நாளில் 10 ரூபாய் சரிவு.. தமிழும், தமிழர்கள் செய்த சம்பவமும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனமான சொமேட்டோ சமீபத்தில் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு அதிகப்படியான முதலீட்டை திரட்டி அனைத்து முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடத் தூண்டியது.

 

ஆனால் இன்று சொமேட்டோ பங்குச்சந்தைக்கு ஏண்டா வந்தோம் என்று புலம்பும் அளவிற்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

ஆம், ஹிந்தி தேசிய மொழி என்றும் ஹிந்தி மொழியை தெரிந்துகொள்ள வேண்டும் எனச் சொமேட்டோ கஸ்டமர் கேர் ஊழியர் தமிழ் வாடிக்கையாளர் ஒருவருக்கு அறிவுறுத்தியது. இது இந்தியா முழுவதும் பெரும் பிரச்சனையாக வெடித்தது மட்டும் அல்லாமல் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல்-ன் மெத்தனமான டிவீட் ஆகியவை சோமேட்டோ பங்குகளைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

 சொமேட்டோ பங்குகள்

சொமேட்டோ பங்குகள்

சொமேட்டோ பங்குகள் 2வது நாளாக இன்றும் சரிவை சந்தித்து வருகிறது. 18ஆம் தேதி ஒரு சொமேட்டோ பங்கு விலை 145 ரூபாயை அளவில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு பங்கு விலை 133 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

சொமேட்டோ நிறுவன பங்கு மதிப்பு சரிந்துள்ளதன் வாயிலாக இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளனர். இரண்டாவது நாளாக இன்றும் சரிய மிக முக்கியக் காரணம் அவர் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயலுக்கு பிற மொழி பேசுபவர்கள் மீது இருக்கும் மனப்பான்மை தான்.

தீபிந்தர் கோயல் டிவிட்
 

தீபிந்தர் கோயல் டிவிட்

2020 டிசம்பர் மாதம் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் செய்த ஒரு டிவீட்டில் ஹிந்தி தெரியாத ஒகு டெக் ஊழியர் இருந்தால் ஒரு பிரச்சனையைச் சரி செய்ய எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேடிக்கையாக உள்ளது என டிவீட் செய்துள்ளார்.

தென்னிந்தியர்கள்

தென்னிந்தியர்கள்

இதேபோல் 2012 ஜூலை 14ஆம் தேதி சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் செய்த ஒரு டிவீட்டில் தென்னிந்தியர்களைக் கிண்டல் செய்யும் வகையில் பதிவு செய்துள்ளார். இது தற்போது இணையத் தளத்தில் வைரலாகி வருகிறது.

தீபிந்தர் கோயல் ஒரு முட்டாள்

தீபிந்தர் கோயல் ஒரு முட்டாள்

இந்த டீவீட்டை பார்த்த ஒருவர் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் ஒரு முட்டாள் எனவும் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார், மேலும் அவர் சோமேட்டோ-வை நீக்க வேண்டும் என்ற நோக்கில் டிவிட்டரில் டிரெண்டான #RejectZomato ஹேஷ்டேக்-ஐயும் பயன்படுத்தியுள்ளார்.

சிஇஓ-வின் எண்ணம்

சிஇஓ-வின் எண்ணம்

மேலும் ஹிந்தி தெரியாத ஒகு டெக் ஊழியர் பற்றிய சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் டிவீட்டுக்கு பார்சன் என்பவர், பிரச்சனை சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை ஊழியர் இல்லை, சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ-வின் எண்ணம் தான் என டிவீட் செய்துள்ளார்.

நான் தமிழ் அதிகம் பேசும் நிறுவனத்தில் தான் பணியாற்றுகிறேன், ஆனால் நிறுவன மீட்டிங்-ல் யாருக்கேனும் ஒருவருக்குத் தமிழ் தெரியாவிட்டாலும் ஆங்கிலத்தில் பேச துவங்கிடுவோம். இவரைப் போன்ற சிஇஓ-விற்கு அடிப்படை பயற்சி கொடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

Ignorant Mistake என்றால் என்ன..?

Ignorant Mistake என்றால் என்ன..?

இதேபோல் நெமின் ஷா என்பவர் சொமேட்டோவின் செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது. 'Ignorant Mistake' என்பதன் விளக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுமட்டும் அல்லாமல் சொமோட்டோ செயலியை பயன்படுத்துவதை நிறுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zomato shares falling for second day, lost 10 rupees per share in 2 days

Zomato shares falling for second day, lost 10 rupees per share in 2 days
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X