ஆபீஸ், ஸ்கூல் திறந்தாச்சு.. இனி Zoomக்கு வேலை இல்ல.. ஓரே நாளில் 17% சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றுக் காரணமாக உலக நாடுகள் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிய போது, பல முன்னணி நிறுவனங்களின் விற்பனை மற்றும் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மோசமான சரிவைச் சந்தித்தது.

 

ஆனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் குறிப்பாக இண்டர்நெட் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் வரலாறு காணாத அளவில் வளர்ச்சி அடைந்தது. இதில் மிகவும் முக்கியமாக Zoom நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது.

ஆனால் தற்போது Zoom நிறுவனத்தின் நிலை மாறியுள்ளது.

கொரோனா காலம்

கொரோனா காலம்

இந்தக் கொரோனா காலத்தில் பள்ளி குழந்தைகளில் துவங்கி அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் வரையில், ஏன் தொலைவில் இருக்கும் உறவினர்களைச் சந்திப்பதற்குக் கூட வீடியோ கான்ஃபிரென்சிங் செயலிகள் தான் முக்கிய ஆதாரமாக விளங்கியது.

 வீடியோ கான்ஃபிரென்சிங் சேவை

வீடியோ கான்ஃபிரென்சிங் சேவை

கொரோனா காலத்தில் மக்களுக்கு உணவு, வேக்சின், எவ்வளவு முக்கியமே அதே அளவிற்கு இந்த வீடியோ கான்ஃபிரென்சிங் சேவை மிகவும் முக்கியமானதாக விளங்கியது. இதனால் Zoom உட்படச் சிஸ்கோ, மைக்ரோசாப்ட் டீம்ஸ், சேல்ஸ்போர்ஸ் ஸ்லாக் ஆகிய சேவை தளத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

Zoom செயலி
 

Zoom செயலி

இந்தக் காலகட்டத்தில் அதிகம் லாபம் அடைந்த மிக முக்கியமான நிறுவனம் Zoom, நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட உடனே Zoom செயலியை டவுன்லோடு செய்வோரின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் இந்நிறுவனத்தில் பெரும் முதலீட்டாளர்களும் முதலீடு செய்தனர்.

Zoom பங்குகள்

Zoom பங்குகள்

இதன் எதிரொலியாக மார்ச் 2020 துவக்கத்தில் வெறும் 100 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட Zoom பங்குகள் உலக நாடுகளில் அடுத்தடுத்து லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காரணத்தால் Zoom பங்குகள் 588.84 டாலர் வரையில் உயர்ந்தது இந்த லாக்டவுன் காலத்தில் மறக்க முடியாத நிகழ்வு.

 மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்

மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்

ஆனால் தற்போது உலக நாடுகள் லாக்டவுன் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகக் குறைத்து வருவது மட்டும் அல்லாமல் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்தும் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் Zoom செயலி மக்களுக்குத் தற்போது அவசியம் இல்லாத ஒன்றாக மாறி வருகிறது.

வாடிக்கையாளர் பயன்பாடு குறைந்து வருகிறது

வாடிக்கையாளர் பயன்பாடு குறைந்து வருகிறது

இந்நிலையில் Zoom செயலியின் நிறுவனமான Zoom வீடியோ கம்யூனிகேஷன்ஸ் தனது காலாண்டு வருவாய் கணிப்புகளை வெளியிட்ட போது, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் கணிக்கப்பட்டத்தை விடவும் வேகமாக வாடிக்கையாளர் பயன்பாடு குறைந்து வருகிறது என அறிவித்தது.

17 சதவீதம் வரையில் சரிவு

17 சதவீதம் வரையில் சரிவு

இதன் ஒரு அறிவிப்பின் காரணமாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் ஜூம் நிறுவனப் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓரே நாளில் 17 சதவீதம் வரையில் சரிந்தது. இதனால் Zoom பங்குகள் விலை 347.50 டாலரில் இருந்து 289.50 டாலர் வரையில் சரிந்துள்ளது.

தொடர் சரிவு பாதை

தொடர் சரிவு பாதை

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஜூம் செயலி 400.58 டாலரில் இருந்து சுமார் 23.61 வரையில் சரிந்துள்ளது, அதேபோல் 6 மாதத்தில் 29.33 சதவீதம் சரிந்தும், 2021ஆம் ஆண்டில் 19.58 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. மேலும் நடப்புக் காலாண்டில் ஜூம் 1.015 முதல் 1.020 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Fine9 நிறுவனம் கைப்பற்றல்

Fine9 நிறுவனம் கைப்பற்றல்

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக Zoom நிறுவனம் தனது வர்த்தகத்தை மாற்று வழியில் விரிவாக்கம் செய்வதற்காக Fine9 என்னும் நிறுவனத்தை ஜூலை மாதத்தில் 14.7 பில்லியன் டாலர் முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் Zoom இனி வரும் காலகட்டத்தில் கான்டெக்ட் சென்டப் பிஸ்னஸ் பிரிவில் சேவை அளிக்க உள்ளது. ஆனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zoom app Shares fall 17 percent on a single day: Worst Day ever post-pandemic effect

Zoom app Shares fall 17 percent on a single day: Worst Day ever post-pandemic effect
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X