வருமான வரிக் தாக்கல் செய்யும் முன் இதை கொஞ்சம் படிங்க...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது நாம் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கத் தேவை இல்லை, ஆனால், வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது சரியான வருமானத்தை தீர்மானிக்க சில ஆவணங்கள் தயாராக்க வேண்டும்.

 

இந்நிலையில் வரித் தாக்கலுக்கு தேவைப்படும் சில ஆவணங்களும், இதர விவரங்களும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. அதை பற்றி முழுமையாக இங்கு பார்போம்..

நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN card)

நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN card)

நிரந்தர கணக்கு எண்ணை (PAN)அட்டையை தயாராக வைப்பது முக்கியமாகும். இது இருந்தால் தான் வரிதாக்கல் செய்ய முடியும். வரித் தாக்கல் விவரங்களை உள்ளிடும் பொழுது சரியான நிரந்தர கணக்கு எண்ணை உள்ளிட்டீர்களா என்று மறு உறுதி செய்து கொள்ளவும்.

என்ன வழி?

என்ன வழி?

நாம் ஆண்டு முழுவதும் கடுமையாக உழைத்த பணத்தை தவறான முறையில் வரி தாக்கல் செய்வதால் பல ஆயிரங்களை இழக்க வேண்டி வரும்.

சரியான முறையில், சரியான சலுகைகள் பெற்ற வருமான வரியை தாக்கல் செய்ய இங்க பல வழிகள் உண்டு. அதனை தொரிந்துக்கொள்ள கடைசி 10வது ஸ்லைடரை பார்க்கவும்...

நிறுவனங்களால் வழங்கப்பட்ட படிவம் 16
 

நிறுவனங்களால் வழங்கப்பட்ட படிவம் 16

இது உங்களின் சரியான சம்பள வருமானம் மற்றும் 80C பிரிவின் கீழ் வரும் தரவுகள், இதர வரி விலக்குகளை கணிக்க உதவும், நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுவது. சம்பள வருமானம் உள்ளவர்களுக்கு மிகவும் முக்கியான ஆவணம் இது,

வங்கி அறிக்கைகள் / வங்கிக் கணக்குப் புத்தகம்

வங்கி அறிக்கைகள் / வங்கிக் கணக்குப் புத்தகம்

மொத்த வருவாயுடன் சேமிப்புக் கணக்கின் வட்டி வருவாயை சேர்க்க உதவும் ஆவணம் இது. சேமிப்புக் கணக்கின் வட்டி வருமானம் ரூ.10,000 க்குள் இருப்பின் அது வரி விலக்கு செய்யப்படும். எனினும், வரித் தாக்கல் செய்யும் பொழுது அதை அறிவித்தல் வேண்டும்.

வங்கி நிரந்தர வைப்பு

வங்கி நிரந்தர வைப்பு

மொத்த வருவாயுடன், நிரந்தர வைப்புத் தொகையின் வட்டி வருவாயை சேர்க்க, நிரந்தர வைப்புத் தொகை ஆவணங்களை தயாராக வைக்கவும். வரிப் பொறுப்பில் வங்கி வைப்புத் தொகையின் வட்டி வருவாயையும் இணைக்க நினைவு கொள்ளப்பட வேண்டும்.

வங்கியால் வழங்கப்பட்ட TDS சான்றிதழ்

வங்கியால் வழங்கப்பட்ட TDS சான்றிதழ்

வங்கியால் வழங்கப்படும், நிரந்தர வைப்புத் தொகைக்கான சரியான வரி குறிப்பிடப்பட்டுள்ள TDS சான்றிதழ் இருப்பின் மேல் கூறிய மற்ற ஆவணம் தேவை இல்லை.

படிவம் 26

படிவம் 26

முதலாளி அல்லது வங்கியிடமிருந்து பெற்ற வரிச் சலுகையை இது காட்டும், TDS வடிவில் செலுத்திய வரியினை சுருக்கமாக விளக்கும். வரிச் சலுகை பற்றிய கட்டுரையை காண இதை சொடுக்கவும்.

நன்கொடை ரசீது

நன்கொடை ரசீது

தகுதியுடைய நிறுவனத்திற்கு நன்கொடை அளித்திருப்பின், அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்ட ரசீதை வைத்திருந்து 80G பிரிவின் கீழ் வரி விலக்கிற்கு கோரலாம். அந்த ரசீதில் நிறுவனத்தின் நிரந்தர கணக்கு எண் இருத்தல் வேண்டும்.

பிரிவு 80 சி ஆவணங்கள்

பிரிவு 80 சி ஆவணங்கள்

வரி விலக்கிற்கு பிரிவு 80C க்கு தகுதியான ஆவணங்களான LIC, NSC,PPF போன்றவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும். வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்படியும் சேமிக்கலாம்..

இப்படியும் சேமிக்கலாம்..

உங்க வரிப் பணத்தைச் சேமிக்க இங்கே பல வழிகள் உண்டு!

படித்துதான் பாருங்களேன்...

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the documents needed when filing income tax returns?

Just like your shoes or hair dryer, you can now order your train ticket to be sent home on "cash-on-delivery" mode.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X