நீங்கள் மாத சம்பளம் வாங்குபவரா..? சிடிசி பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நீங்கள் மாத சம்பளம் பெறுபவரா? உங்களுடைய வேலைக்கான அப்பாயின்ட்மெண்ட் லட்டரில் போட்டுள்ள CTC என்ற மாத சம்பளத்திற்கும், உங்கள் கையில் கிடைக்கும் உண்மையான தொகையை பார்க்கும் போது, சற்று வருத்தப்பட்டதுண்டா??

<strong><em>(இந்திய நிதி அமைப்பில் இத்தனை வரியா..?)</em></strong>(இந்திய நிதி அமைப்பில் இத்தனை வரியா..?)

உங்களின் வேலைக்கான அப்பாயின்ட்மெண்ட் லட்டரில் போட்டுள்ள தொகைக்கும் (CTC), நீங்கள் இறுதியாக கையில் பெறும் தொகைக்கும் உள்ள வித்தியாசம் நிறையவே உங்களை யோசிக்க வைத்திருக்கும்.

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

நிறுவனம்

நிறுவனம்

இந்த ஏமாற்றத்திற்காக உங்களுடைய கம்பெனியை குறை சொல்லி எந்த பலனும் இல்லை. ஆனால், CTC என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாமல் போனது நம்முடைய தவறுதான்.

CTC (cost to company) என்றால் என்ன?

CTC (cost to company) என்றால் என்ன?

CTC என்பது அதன் பெயரைப் பொறுத்தே விளங்கும். அதாவது உங்களை பணிக்கு அமர்த்துவதால் அந்நிறுவனம் எவ்வளவு செலவு செய்கிறது என்பது தான் இதன் விளக்கம். இவை மட்டுமல்லாமல், சில நேரங்களில் போனஸ் போன்றவைகளும் நன்மதிப்பிற்காக சேர்க்கப்படலாம். உங்களுடைய சேமநல நிதி (PF) உட்பட எல்லா வகையான கணக்குகளையும் உள்ளடக்கி இருப்பது தான் CTC ஆகும்.

20 சதவீத சம்பளம்

20 சதவீத சம்பளம்

நீங்கள் புதிய நிறுவனத்தில் அல்லது முதல் முறையாக நிறுவனத்தில் மாத வருமானம் பற்றி விவாதிக்கும் போது 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே வரி, சேமநல நிதி போன்றவைகளுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எப்படி குறைகிறது?

எப்படி குறைகிறது?

ஒரு எடுத்துக்காட்டு மூலம் இதைக் கணக்கிடுவோம். இப்போது அஜய் என்பவரின் ஊதியத்தைக் கணக்கிடுவோம்.
அடிப்படை ஊதியம் (Basic Salary) - ரூ.300,000
வீட்டு வாடகை படி (HRA) - ரூ.60,000
மருத்துவ பதிலீடு (Medical Reimbursement) - ரூ.15,000
போக்குவரத்து படி (Conveyance) - ரூ.8,000
ஆண்டுக்கான மொத்த ஊதியம் (CTC Per Annum) - ரூ.3,83,000

(மாத சம்பளம் ரூ.31,917)

பிடித்தங்கள்

பிடித்தங்கள்

அடிப்படை ஊதியம் மற்றும் வீட்டு வாடகை படியில் வரி - ரூ.11,000
தொழிலாளர் சேமநல நிதி (அடிப்படை ஊதியத்தில் 12%)(EPF) - ரூ.36,000
மருத்துவ காப்பீடு (Medical Insurance) - ரூ.4000
தொழில் வரி (Professional Tax)- ரூ.3600
நிகர வருமானம் (Net Salary per Annum) - ரூ.3,39,400 (நிகர மாதாந்திர வருமானம் (Net Salary Per Month- ரூ.28,283)
இந்த 28,283 ரூபாய் தான் உங்களது takehome salary.

வித்தியாசம்

வித்தியாசம்

மேற்கண்ட எடுத்துக்காட்டிலிருந்து CTC-க்கும் கையில் பெறும் ஊதியத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.

வருமான வரிச் சலுகை

வருமான வரிச் சலுகை

எனவே, நீங்கள் ஒரு வேலைக்காக தேர்ந்தெடுக்கப்படும் போது, எந்தெந்த வகையில் பிடித்தம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உங்களுக்கு சேமநல நிதி வேண்டாம் என்று சொல்ல முடியும். அந்த வகையில் வருமான வரி பிரிவு 80சி-யின் கீழ் பெறும் வரி சலுகைகள் உங்களுக்கு கிடைக்காது.

வரி மற்றும் மருத்துவ காப்பீடு

வரி மற்றும் மருத்துவ காப்பீடு

வரிகளையும் மற்றும் கூட்டு மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்களையும் உங்களால் தவிர்க்க முடியாது. எனவே, உங்களுடைய ஊதியத்தைப் பற்றி மிகவும் கவனமாக விவாதிப்பதும் மற்றும் பல்வேறு வகையான பிடித்தங்களை புரிந்து கொள்வதும் அவசியமானதாகும்.

கூப்பன்கள்

கூப்பன்கள்

சில நிறுவனங்களின் பணியாளர்கள் பணத்திற்கு பதிலாக சலுகை கூப்பன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்களுடைய கையில் கிடைக்கும் ஊதியத்திலிருந்து வரி பிடித்தம் செய்யப்படுவது குறைகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the Difference Between CTC and Takehome Salary

At the outset you can be thrilled that your cost to company in your appointment letter is a very decent sum. But, after a month when you receive your first salary, you are a little disappointed as the sum credit into your account.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X