கிரெடிட் கார்டு பில்லை முழுவதையும் கட்டிவிட சூப்பர் ஐடியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நம்ம நாட்ல கிரெடிட் கார்டு (credit card) பில் கட்டி அழிஞ்சவங்க கணக்கு சொல்லி மாளாது.. கிரெடிட் கார்டில் நாம் வைத்திருக்கும் பேலன்ஸ் நம் நிதி நிலையில் பெரும் பங்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

 

கிரெடிட் கார்டு பேலன்ஸ் தொகைக்கு, வங்கிகள் வருடத்திற்குச் சுமார் 36 முதல் 40 சதவிகித வட்டியை வசூலித்து வருகிறது.

(கேஷ்பேக் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..?)

காலம் முழுக்க வட்டி மட்டும் தான்...

காலம் முழுக்க வட்டி மட்டும் தான்...

நீங்கள் திடீரென்று உங்களுடைய கிரெடிட் கார்டு பாக்கியை செலுத்த முடிக்காமலேயே இருப்பதை உணர்வீர்கள். ஏனென்றால் பேலன்ஸ் வைத்திருக்கும் தொகைக்கான வட்டி மிகவும் அதிகமாக உள்ளதால் காலம் முழுக்க வட்டியை மட்டும் கட்டிக்கொண்டு இருப்போம்.

சூப்பரான வழி

சூப்பரான வழி

இந்த நிலையை அப்படியே தொடர்வது மிகப்பெரிய முட்டாள்தனம் என்று தான் கூற வேண்டும். இதைச் சரி செய்ய வேறொரு வழி உள்ளது.

தனி நபர் கடன்

தனி நபர் கடன்

உங்களுடைய கிரேடிட் கார்டு பேலன்ஸ் தொகையை ஒரு தனிநபர் கடனாக மாற்றுங்கள் (personal loan).

பெரும்பாலான வங்கிகள் உங்கள் கிரெடிட் கார்டு பாக்கியை ஒரு தனிநபர் கடனாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கின்றன.

வங்கியில் இருந்து அழைப்பு
 

வங்கியில் இருந்து அழைப்பு

இன்னும் சொல்லப்போனால் நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு பில்களைச் சரியாகச் செலுத்தி வந்தால் வங்கியிலிருந்து உங்களை அழைத்து உங்கள் பாக்கியை மாதாந்திர தவணையில் செலுத்தும் ஒரு கடனாக மாற்றிக்கொள்ள விருப்பமுள்ளதா என உங்களைக் கேட்கவும் செய்கிறார்கள்.

இந்த அழைப்பு எப்போது வரும்...

இந்த அழைப்பு எப்போது வரும்...

கிரெடிட் கார்டு பேலன்ஸ் தொகை மிகவும் குறைவாக இருக்கும் போது மட்டுமே, வங்கிகள் மேலும் உங்களைக் கடனாளியாக்க பேலன்ஸ் தொகையோடு கூடதல் கடன் அளிப்பதாக ஆசை காட்டி மோசம் செய்வார்கள். கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்.

வட்டி வகிதம்

வட்டி வகிதம்

பெரும்பாலான வங்கிகள் தனி நபர் கடனுக்கு வருடத்திற்கு 14-18 சதவிகிதம் வரையிலான வட்டியை வசூலிக்கின்றன.

அவ்வாறு நீங்கள் மாற்றிக்கொள்ள நினைத்தால் அதற்கான சேவை வரியையும் நீங்கள் செலுத்த நேரிடும்.

மிகவும் குறைவு..

மிகவும் குறைவு..

இது 36 முதல் 40 சதவிகித வட்டியை ஒப்பிடும் போது பல மடங்கு குறைவு.

மாத தவணை

மாத தவணை

நீங்கள் மாத தவணையை உரிய நேரத்தில் செலுத்துபவராகவோ அல்லது கடன் நம்பகத்தன்மைக்கு உரியவராகவோ இருந்தால் மட்டுமே வங்கிகளில் இருந்து இத்தகைய அழைப்பு வரும்.

உஷார் மக்களே

உஷார் மக்களே

ஒருவேளை நீங்கள் ஏற்கனவே ஒரு கடனை வைத்திருந்து மாதாந்திர செலவுகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும் என்றால், அவர்கள் உங்களைக் கடனை நீட்டிக்கச் சொல்லி நிர்பந்தம் செய்யலாம் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

முடிவுரை

முடிவுரை

நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு பாக்கியை செலுத்த முடியாத நிலையில் இருந்தால் மட்டுமே இது போன்ற தனிநபர் கடன்களை நாடுவது நல்லது. எது எப்படி இருந்தாலும் செலவுகளைக் கவனமாகச் செய்யுங்கள்..கஷ்டங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்..

உஷார்

உஷார்

கேஷ்பேக் என்பது ஒரு புதைக்குழி!! உஷார்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Can't Pay Full Credit Card Bill? Here's A Good Cheap Option

You suddenly realise that you never end-up paying your credit card outstanding simply because the interest is so high on outstanding balances, you are just servicing the interest. However, there is another option that you can use.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X