ஓஎல்எக்ஸ், குவிக்கர் நிறுவன மோசடிகளில் இருந்து தப்ப இது தான் சரியான வழி!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் ஆன்லைன் பரிமாற்றம் மற்றும் வர்த்தகம் அதிகரித்துள்ள நிலையில், மோசடிகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது, குவிக்கர் மற்றும் ஒஎல்எக்ஸ் தளங்களைப் பயன்படுத்திச் சில மோசடியாளர்கள் மக்கள் ஏமாற்றி வருகிறார்கள்.

 

இத்தளங்களில் நடக்கும் வர்த்தக மோசடிகளில் இருந்து, தப்புவது எளிமை என்றாலும் தொடர்ந்து மோசடிகள் நடந்து வருகிறது. இதில் இருந்து தப்புவதற்குச் சென்னை காவல் துறை மற்றும் குவிக்கர் மற்றும் ஒஎல்எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து சில வழிகளைத் தொகுத்துள்ளது.

இதைப் படித்து மோசடிகளில் இருந்து உங்களின் பணத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும்.

நேரடி சந்திப்பு

நேரடி சந்திப்பு

குவிக்கர் மற்றும் ஒஎல்எக்ஸ் தளங்களைப் பயன்படுத்தவோர், முதலில்பொருட்களை வாங்குவோர், விற்பனையாளரை நேரில் சந்திக்கவேண்டும், இதன் பின் பொருட்களின் தரம் மற்றும் தன்மையை நன்கு சோதித்த பின் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும்.

மோசடியாளர்

மோசடியாளர்

நேரில் சந்திக்க மறுக்கும் விற்பனையாளர் கண்டிப்பாக மோசடியாளராக இருக்க வாயப்புன்று.

எலக்ட்ரானிக் பொருட்கள்

எலக்ட்ரானிக் பொருட்கள்

மேலும் செல்போன், கேமரா, லேப்டாப் மற்றும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் தோற்றத்தை மட்டும் பார்த்து அதன் செயல்பாட்டை உறுதி செய்யக்கூடாது.

இதனை நேரடியாக இயக்கி அதன் செயல் திறனை உறுதி செய்யவேண்டும்.

முன்பணம் மற்றும் மின்னணு பரிமாற்றம் வேண்டாம்
 

முன்பணம் மற்றும் மின்னணு பரிமாற்றம் வேண்டாம்

பொருட்களைப் பெறுவதற்கு முன்பு விற்பனையாளர்களுக்கு முன்பணம் அல்லது, ஆன்லைன் மூலமாகப் பணம் அளித்தால் அதுவே அவர்களை உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்பாக அமையும்.

மாற்று வங்கிக் கணக்கு

மாற்று வங்கிக் கணக்கு

விற்பனையாளர் பெயர் அல்லாமல் வேறொரு பெயர் கொண்ட வங்கிக் கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யக் கோரினால், அது மோசடி பொருட்களை வர்த்தகம் செய்யும் விதமாகும்.

ஸ்கைப் கால்

ஸ்கைப் கால்

ஒரு குறிப்பிட்ட வழக்கில் ஒரு நபர் ஸ்கைப் கால் மூலம் தான் வெளிநாட்டிலுள்ள பிரபல நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறி பொருட்களை விற்க முயன்றால் அது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை என்பதை உணர்ந்து உஷாராக வேண்டும்.

உறுதி செய்ய வேண்டும்

உறுதி செய்ய வேண்டும்

பொருட்களை விற்பனை செய்யும் நபரின் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உறுதி செய்யும் வாய்ப்புகளைத் தேடி படிக்கவும்.இதனைத் தவிர்க்கும் விற்பனையாளர்களை நீங்கள் தவிர்ப்பது மிகவும் சிறந்தது.

ஹய்-டெக் மோசடி

ஹய்-டெக் மோசடி

விமான நிலையம், துறைமுகம் மற்றும் சுங்கவரித் துறையில் பணி செய்வதாகச் கூறி யாராவது பொருட்களை விற்க முயன்றால் அதுகண்டிப்பாகப் போலி பொருட்களாவும் அல்லது திருட்டு பொருட்களாகவும் இருக்கும்.

இதுவும் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது.

ஆசை மற்றும் அறியாமை

ஆசை மற்றும் அறியாமை

சமாணிய மக்களின் அதிகப்படியான ஆசை மற்றும் அறியாமையை மோசடியாளர்கள் சூப்பராகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆன்லைன் பரிவர்த்தனை

ஆன்லைன் பரிவர்த்தனை

முதலில் இத்தகைய வியாபாரத்தில் ஆன்லைன் பரிமாற்றத்தை முற்றிலும் தவிர்க வேண்டும்.

வங்கி விபரங்கள்

வங்கி விபரங்கள்

மேலும் பொருட்களை வாங்குவோர் எந்தக் காரணத்திற்காகவும் விற்பனையாளர்களுக்கு வங்கி விபரங்களை அளிக்க வேண்டாம்.

புகார்

புகார்

மேலும் நீங்கள் ஏதேனும் வகையில் மோசடியில் சிக்கிக் கொண்டால் உடனடியாகச் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பயப்பட வேண்டாம்.

உடனடியாகக் காவல் துறையில் புகார் அளிப்பதன் மூலம் உங்கள் பணம் கிடைக்கலாம் அல்லது பொருட்கள் கிடைக்க 90 சதவீத வாய்ப்புண்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lot of fake sellers in olx and quikr, how to avoid them?

Lot of fake sellers in olx and quikr, how to avoid them?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X