தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்க சிறந்த வழி - சவரன் தங்கம் பத்திரங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சவரன் தங்கம் பத்திரங்கள் என்பது இந்திய அரசால், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கீழ் வழங்கும் அரசாங்க தங்க முதலீட்டு பத்திரமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் தங்கத்தை நேரடியாக வாங்குவதைப் போலவே கிராம் கணக்கில் பத்திரங்களாக வாங்கலாம்.

இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள் ஆர்பிஐ புதிய விற்பனையை அறிவிக்கும் போது மும்பை பங்குச் சந்தை வாயிலாக பிற முதலீடுகளைப் போலவே தற்போதைய தங்க விலையில் தங்க பத்திரத்தை வாங்கலாம்.

தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்க சிறந்த வழி - சவரன் தங்கம் பத்திரங்கள்

நீங்கள் முதலீடு செய்த தங்க பத்திரங்களின் முதிர்ச்சி காலம் அடைந்தவுடன் முதலீட்டாளர்கள் பணமாகவோ அல்லது திரும்பவும் மும்பை பங்குச் சந்தையில் தற்போதைய விலைக்கு விற்றுக்கொள்ளலாம்.

முக்கிய அம்சங்கள்

  • ஆரம்ப முதலீடு அளவைப் பொறுத்து வருடத்திற்கு 2.75 சதவீதம் நிலையான வட்டி வீதத்தில் இந்தப் பத்திரங்கள் மூலம் வட்டி கிடைக்கும்.
  • இந்த முதலீட்டு பத்திரத்தின் முதிர்ச்சி காலத்தின் கடைசி ஆண்டைத் தவிர மற்ற எல்லா ஆண்டுகளுக்கும், ஆறு மாத்திற்கு ஒருமுறை முதலீடு செய்பவரின் கணக்கில் சேர்க்கப்படும், கடைசி ஆண்டின் வட்டி மட்டும் முதிர்ச்சி காலம் முடியும் போது அசலுடன் சேர்த்து வட்டி தொகையும் திரும்பப் பெறலாம்.
  • இந்தப் பத்திரங்கள் டிமேட் மற்றும் பேப்பர் பத்திரங்கள் என இரண்டு விதமாகவும் கிடைக்கும்.
    தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்க சிறந்த வழி - சவரன் தங்கம் பத்திரங்கள்
  • பத்திரத்தின் குறைந்தபட்ச கால அளவு 8 ஆண்டுகள், இடையில் வெளியேற விரும்பினால் 5 வது வருடத்திற்கு பின் உங்கள் விருப்பத்தின் பெயரில் வெளியேற முடியும்.
  • முதலீடு மற்றும் வட்டி இரண்டிற்கும் இந்தப் பத்திரங்களே உத்திரவாதம் ஆகும்.
  • இந்த பத்திரங்களைப் பயன்படுத்தி வங்கி மற்றும் அரசு அங்கிகாரம் பெற்ற நிதி நிறுவனங்களில் கடன் பெற வாய்ப்புகளும் இதற்கு உண்டு.
  • இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின் படி எந்த மாநில வரியோ அல்லது மூலதன ஆதாயங்கள் வரியோ இல்லை.

சவரன் தங்கம் பத்திரங்களின் நன்மைகள்

  • தங்கமாக இல்லாமல், தங்கத்தைப் போலவே இந்தப் பத்திரத்தை வைத்துக்கொள்வதற்கான ஒரு மாற்று வழி இது.
  • சேமித்து வைப்பதற்கான செலவுகள், இடர்பாடுகளில் இருந்து விடுதலை. முதிர்ச்சி காலம் அடைந்தவுடன் நடப்பு சந்தை மதிப்பில் தங்கம் மற்றும் இந்த கால இடைவெளிகளில் முதலீட்டாளர்களின் வட்டிக்கு உறுதியளிக்கப்படுகிறது.
    தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்க சிறந்த வழி - சவரன் தங்கம் பத்திரங்கள்
  • நகையாக இல்லாமல், சுத்தமான தங்கத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளும் போது செய்கூலி சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் இல்லை.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் புத்தகமாகவோ, டிமேட் வடிவில் வைத்துக்கொள்வது இரசீது அல்லது பத்திரத்தை இழக்கும் அபாயத்தை தவிர்க்க உதவும் .
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sovereign Gold Bonds – Traditional Gold goes Digital to buy

Sovereign Gold Bonds are government securities issued by Reserve Bank of India on behalf of the Government of India. They are denominated in grams of gold and can be purchased instead of physical gold.Investors can buy these bonds through BSE at issue price when RBI announces a fresh sale or they can purchase it immediately through BSE at current price like any other security.Investors can redeem these bonds for cash upon maturity of the bonds or can sell it on BSE at current prices.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X