‘தொடர் வைப்பு நிதி’ திட்டத்தில் பணத்தை முதலீடு செய்ய சிறந்த வங்கிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கிகளில் மாதந்தோறும் முதலீடு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து லாபம் பெறக்கூடிய ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் ரெக்கரிங் டெப்பாசிட்.

 

இந்தத் திட்டத்தில் மாத சம்பளம் வாங்குவோர் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறலாம். இது நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை போன்ற ஒரு சேமிப்பு திட்டமாகும்.

தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கும் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை போன்றே 10,000 ரூபாய்க்கும் அதிகமான லாபத்திற்கு டிடிஎஸ் செலுத்த வேண்டும்.

எனவே நாம் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்க கூடிய ஐந்து சிறந்த வங்கிகள் பற்றி இங்குப் பார்ப்போம்.

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கி

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி நிறுவனமான ஆக்ஸிஸ் வங்கியில் 6 மாதம் முதல் 10 வருடம் வரை தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம்.

மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொருத்து 8.25 சதவீதம் முதல் 8.40 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படும். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் போது மாதத் தவணையை காலதாமதமாகச் செலுத்தினால் 1000 ரூபாய்க்கு 10 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

இந்திய பன்னாட்டு வங்கி மற்றும் நிதி சேவைகள் நிறுவனமான ஐசிஐசிஐ வங்கியிலும் ஆக்ஸிஸ் வங்கியைப் போன்று 6 மாதம் முதல் 10 வருடம் வரை தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இந்தக் கால அளவு 6 மாதத்தில் இருந்து 3 பெருக்கல் எண்களாக உங்கள் முதலீட்டுக் கால அளவைத் தேர்வு செய்ய இயலும்.

இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொருத்து 7.75 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படும். அதே நேரம் மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படும். முதலீடு செய்யும் போது மாதத் தவணையை காலதாமதமாக செலுத்தினால் 1000 ரூபாய்க்கு 12 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

எச்டிஎப்சி வங்கி
 

எச்டிஎப்சி வங்கி

எச்டிஎப்சி வங்கியில் ஐசிஐசிஐ வங்கியைப் போன்றே 6 மாதம் முதல் 10 வருடம் வரை தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இந்தக் கால அளவு 6 மாதத்தில் இருந்து 3 பெருக்கல் எண்களாக உங்கள் முதலீட்டுக் கால அளவைத் தேர்வு செய்ய இயலும்.

இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொருத்து 8 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படும். அதே நேரம் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீத வட்டி அளிக்கப்படும். முதலீடு செய்யும் போது மாதத் தவணையை செலுத்த காலதாமதமாகச் செலுத்தினால் 30/360 என்ற நாள் கணக்கில் அபராதம் செலுத்த வேண்டும்.

கோடாக் மகேந்திரா வங்கி

கோடாக் மகேந்திரா வங்கி

கோடாக் மகேந்திரா வங்கியில் குறைந்தது 6 வருடம் முதல் 10 வருடம் வரை தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம்.

இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொருத்து 8.50 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படும். முதலீடு செய்யும் போது மாதத் தவணையை செலுத்த காலதாமதமாகச் செலுத்தினால் தவணையில் இருந்து 2 சதவீதத்தை அபராதம் செலுத்த வேண்டும்.

சிண்டிகேட் வங்கி

சிண்டிகேட் வங்கி

இந்தியாவின் பழமை வாய்ந்த வணிக வங்கிகளில் ஒன்று சிண்டிகேட் வங்கி. இங்குத் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யும் போது 7 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். அதே நேரம் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீத வட்டி அளிக்கப்படும்.

முதலீடு செய்யும் போது மாதத் தவணையை செலுத்த காலதாமதமாகச் செலுத்தினால் முதிர்வு காலத்தின் போது அல்லது நிரந்தரமாகத் திட்டத்தை மூடும் போது முதலீட்டாளருக்குக் கிடைத்துள்ள வட்டியை பொருத்து அபராதம் விதிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best Banks To Open A Recurring Deposit

Here are a list of banks that offer the best interest rate and benefits on recurring deposits in India
Story first published: Tuesday, December 20, 2016, 20:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X