2017-ம் ஆண்டு அதிக டிவிடெண்ட் அளிக்கும் பங்குகள்.!

டெவிடெண்ட் என்றால் என்ன? அதிக டிவிடெண்ட் அளிக்கும் நிறுவனங்களில் பங்குகள் எவை என்று இங்குப் பார்ப்போம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் சென்று வரும் நிலையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பலரும் தயங்குவர். ஆனால் இப்படிப் பட்ட சூழல்களில் நீண்ட கால முதலீடுகளில் அதிக லாபம் அளிக்கக் கூடிய டிவிடெண்ட் பங்குகளில் முதலீடு செய்வது நல்லது.

 

எனவே நாம் இங்கு டெவிடெண்ட் என்றால் என்ன? அதிக டிவிடெண்ட் அளிக்கும் நிறுவனங்களில் பங்குகள் எவை என்று இங்குப் பார்ப்போம்.

டிவிடெண்ட் - ஈவுத்தொகை

டிவிடெண்ட் - ஈவுத்தொகை

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு பொதுவாகப் பங்குகளின் விலை உயரும் போது அல்லது முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் டிவிடெண்ட் அளிக்கும் போது என இரண்டு வழிகளில் இருந்து லாபம் கிடைக்கும்.

டிவிடெண்ட் வழங்கும் நிறுவனத்திற்கும் வழங்காத நிறுவனத்திற்கும் என்ன வித்தியாசம்?

டிவிடெண்ட் வழங்கும் நிறுவனத்திற்கும் வழங்காத நிறுவனத்திற்கும் என்ன வித்தியாசம்?

பொதுவாக ஒரு நிறுவனம் டிவிடெண்ட் அளிக்கிறது என்றால் அந்த நிறுவனம் நீங்கள் முதலீடு செய்துள்ள பணத்தை வைத்து தனது வணிகத்தை விரிவுபடுத்தியது மட்டும் இல்லாமல் வளர்ச்சியும் அடைந்துள்ளது என்று அர்த்தம். டிவிடெண்ட் அளிக்கும் போது தான் முதலீட்டாளர்கள் லாபம் பெறுவார்கள் இல்லை என்றால் முதலீட்டாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

டிவிடெண்ட் அளிக்காமல் ஒரு நிறுவனம் தனது நிறுவனத்தை மட்டும் விரிவு படுத்தி செல்கிறது என்றால் அதனால் முதலீட்டாளருக்கு எந்த ஒரு பயனும் இல்லை.

எனவே நாம் இங்குக் கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து டிவிடெண்ட் அளித்து வரும் சில நிறுவனங்களின் பங்குகள் பற்றிப் பார்ப்போம்.

 

இந்தியாபுல்ஸ் ஹவுசிங்
 

இந்தியாபுல்ஸ் ஹவுசிங்

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் நிறுவனம் ஆண்டிற்கு 4 முறை டிவிடெண்ட்களை அளித்து முதலீட்டாளர்களை அசத்துகின்றது. வங்கி முதலீடுகள் 7 சதவீதமாக இருக்கும் நிலையில் இந்த நிறுவனம் ஆண்டுக்கு 8.76 சதவீதம் வரை டிவிடெண்ட் வருவாய் அளிக்கின்றது. இந்த நிறுவனத்தின் தற்போதைய பங்கி விலை 651.45 ரூபாயாக உள்ளது.

கோல் இந்தியா

கோல் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய சுரங்கத்தொழில் நிறுவனமான இதன் பங்குகளின் விலை சரிவை சந்தித்து வந்தாலும் இது உலகளவில் நிலக்கரி சந்தை மந்தமாக இருப்பதன் காரணம் என்று கூறப்படுகின்றது.

கடந்த ஒரு வருடத்தில் என்ன தான் பங்குகளின் விலை சரிந்தாலும் நிலக் கரியின் விலை உயர்வால் காலாண்டு முடிவுகள் லாபத்தையே அளித்துள்ளது. கோல் இந்தியா நிறுவனம் 8.9 சதவீதம் வரை டிவிடெண்ட் வருவாய் மூலம் லாபம் அளிக்கின்றது. இந்த நிறுவனப் பங்கின் விலை 310.60 ரூபாயாக உள்ளது.

 

என்எம்டிசி

என்எம்டிசி

என்எம்டிசி நிறுவனமும் கோல் இந்தியாவைப் போன்று நிலக் கரி மட்டும் இல்லாமல் இரும்பு தாதுகள் எடுக்கும் நிறுவனமாகவும் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் விலை 135.25 ரூபாயில் இருந்து துவங்குகின்றது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 1100 சதவீதம் டிவிடெண்ட் லாபம் குறிப்பிடத்தக்கது.

பவர் ஃபினான்ஸ் கார்ப்ரேஷன்

பவர் ஃபினான்ஸ் கார்ப்ரேஷன்

இதுவும் மற்றோரு அரசு நிறுவனம் இதில் முதலீடு செய்தவர்களுக்கு 139 சதவீதம் அதாவது ஒரு பங்கிற்கு 13.9 ரூபாய் டிவிடெண்ட்டாக கிடைத்தது. இந்த நிறுவனப் பங்குகளின் தற்போதைய சந்தை விலை 128.55 ரூபாய் ஆகும்.

ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்ரேஷன்

ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்ரேஷன்

ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்ரேஷன் அரசு நிறுவனங்களுக்குக் கடன் அளிக்கும் நிறுவனமாகும். இவர்கள் மாநில அரசுகள் நிர்வகிக்கும் மின்சார வாரியங்களுக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான கடனை அளித்துள்ளது. வங்கி முதலீடு திட்டங்கள் பல 7 சதவீதத்திற்கும் அதிகமாக லாபம் அளிக்கும் நிலையில் இதில் முதலீடு செய்தால் 6.2 சதவீதம் டிவிடெண்ட் என்றாலும் தாராளமாக முதலீடு செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

High Yielding Dividend Stocks To Buy In India For 2017

Stocks have fallen a great deal and there are some excellent opportunities for those looking at make money from dividends.
Story first published: Thursday, January 5, 2017, 16:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X