10 வருடத்தில் 1 கோடி சம்பாதிக்க வேண்டுமா..? இதை படிங்க..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நம்மில் பலர் குறைந்த காலத்தில் தன்னிடம் உள்ள பணம் இரட்டிப்பாக வேண்டும் என்பதற்காகப் பல முதலீடு திட்டங்களைத் தேடி முதலீடு செய்வார்கள். சிலர் இதில் வெற்றிபெற்றாலும் பலர் தோல்வியையே சந்தித்துள்ளனர்.

 

நாம் தற்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தப் பிஸீயானா வாழ்கையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதிலும் பலர் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.

எனவே அதையெல்லாம் தேர்வு செய்யும் முன்னர் நாம் ஒரு முறை எஸ்ஐபி எனப்படும் முறையான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து பார்த்தால் என்ன.

எதற்காக முதலீடு செய்ய வேண்டும்? எப்படி திட்டமிட வேண்டும்?

எதற்காக முதலீடு செய்ய வேண்டும்? எப்படி திட்டமிட வேண்டும்?

செல்வத்தை அதிகரிக்க ஒருவர் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். குறிக்கோள் இல்லாமல் முதலீடு செய்து வந்தால் சில நேரங்களில் உங்களது பணத்தை இலக்க நேரிடும்

குறைந்த கால முதலீடுகளுக்கு மட்டும் திட்டமிடாமல் நீண்ட கால முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யும் போது நல்ல லாபம் பெற முடியும்.

ரிஸ்க் எடுத்தால் நல்ல லாபம்

ரிஸ்க் எடுத்தால் நல்ல லாபம்

நேரம் பொன் போன்றது, எப்போதும் முதலீடு மட்டுமே செய்யாமல் தேவைப்படும் போது சந்தை ரிஸ்க்கை பொருத்து முதலீடுகளை மாற்றிச் செய்வது, மற்றும் தேவைப்படும் போது பணத்தை எடுப்பது மீண்டும் முதலீடு செய்வது என்பதைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல லாபத்தைப் பார்க்க முடியும்.

எனவே எப்படி முதலீடு செய்தால் வேகமாகக் கோடியை சம்பாதிக்க முடியும் என்று இங்குப் பார்ப்போம்.

நிதி இலக்கு
 

நிதி இலக்கு

எப்போது குறைந்த கால அளவிலான முதலீட்டுத் திட்டங்களை மட்டும் தேர்வு செய்யாமல் நீண்ட கால் இலக்குகளை நிர்னையம் செய்ய வேண்டும்.

நிதி இலக்கு உங்களுக்குத் தொடர்ந்து எவ்வளவு சேமித்து வர வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவும்.

எஸ்ஐபி (SIP)

எஸ்ஐபி (SIP)

எஸ்ஐபி திட்டத்தின் படி முதலீடு செய்வது நீண்டு கால முதலீட்டில் நல்ல லாபத்தைப் பெற உதவும். ரூபாய் செலவு சராசரி மற்றும் கூட்டு முறை சக்தி ஆகியவை உங்களது சிறு சேமிப்பை நீண்ட காலம் முதலீடு செய்யும் போது மில்லியன் கணக்கில் உங்களுக்கு லாபத்தினை அளிக்கும். எனினும் எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்யும் போது நிதி ஆலோசகர்கள் வைத்துக்கொள்வது நல்லது.

முதலீட்டை ஒதுக்குதல்

முதலீட்டை ஒதுக்குதல்

சந்தை ரிஸ்க்கை தவிர்த்து, சரியான முதலீடுகளைச் செய்து சிறப்பாகச் செயல்படச் சரியான நிதி ஆலோசகர் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும் போது செயல்முறை பங்கு கடன் விகிதம் ஒழுங்குபடுத்தப்படும், நீண்ட கால முதலீட்டில் நல்ல வளர்ச்சியை அளிக்கும்.

இந்தச் செயல் முறையால் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு உங்களுக்குச் சராசரியான லாபமும் அவ்வப்போது கிடைத்து வரும். முதலீடு செய்யும் போது எப்போது ஒரே ஃபண்டுகளில் முதலீடு செய்வதை விடப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.

காலத்தை முடிவு செய்தல்

காலத்தை முடிவு செய்தல்

உங்களது சிறு சேமிப்பு மூலமாக அளவில்லா சொலவத்தைப் பெறக் கால அளவை முடிவு செய்ய வேண்டும். எவ்வளவு நீண்ட காலம் நீங்கள் முதலீடு செய்ய விரும்புகின்றீர்களோ அவ்வளவு முதலீட்டுத் தொகையின் அளவு குறைந்து லாபம் அதிகரிக்கும்.

எனவே உங்களுக்காக நாங்கள் இங்கு ஐந்து விதமான நீண்ட கால முதலீடு முறைகளை அளிக்கின்றோம். இது ஒரு உதாரணம் மட்டும் தான். நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 18 சதவீதம் லாபத்துடன் 1 கோடி ரூபாயை எப்படி 10 வருடங்கள் முதல் 30 வருடங்களுக்குள் பெறுவது என்று இங்குப் பார்ப்போம்.

30 வருட முதலீடு

30 வருட முதலீடு

30 வருடத்தில் 1 கோடி ரூபாய் நீங்கள் பெற மாதம் 1000 ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும். எஸ்ஐபி திட்டங்களில் சரியான நிதி ஆலோசகர்களுடன் 30 வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் நீங்கள் சேமித்தால் 97.5 லட்சம் ரூபாய் நீங்கப் பெற முடியும்.

25 வருட முதலீடு

25 வருட முதலீடு

கால அளவு குறையும் போது முதலீடு செய்யும் தொகையும் அதிகரிக்கும். 25 வருடங்களுக்கு மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதாவது 25 வருடத்தில் மொத்தமாக 5 லட்சம் ரூபாய் நீங்கள் முதலீடு செய்திருந்தால் 95 லட்சம் உங்களிடம் இருக்கும்.

20 வருட கால அளவு

20 வருட கால அளவு

20 வருடத்தில் 1 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால் குறைந்தது மாதம் 5000 ரூபாய் எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்து வரும் போது 10 லட்சம் ரூபாய் வரை நீங்கள் முதலீடு செய்தால் 90 லட்சம் உங்கள் கையில் இருக்கும்.

15 வருட கால அளவு

15 வருட கால அளவு

11,000 ரூபாய் மாதம் நீங்கள் 15 வருடத்திற்கு முதலீடு செய்து வரும் போது 20 லட்சம் நீங்கள் முதலீடு செய்தால் 80 லட்சம் ரூபாய் உங்களுக்குக் கிடைக்கும்.

10 வருடம்

10 வருடம்

10 வருடத்தில் 1 கோடி சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் நீங்கள் 30,000 ரூபாய் முதலீடு செய்து வரும் போது 36 லட்சம் நீங்கள் முதலீடு செய்திருந்தால் 64 லட்சம் உங்கள் கையில் இருக்கும்.

ரிலையன்ஸ் க்ரோத்

ரிலையன்ஸ் க்ரோத்

21 வருடங்களுக்கு முன்பு 1995-ம் ஆண்டு முதல் முறையாக 1,000 மதிப்பில் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் கேப்பிட்டல் அசட் மேனேஜ்மெண்ட்டின் ஈக்விட்டி திட்டமான ரிலையன்ஸ் க்ரோத் திட்டத்தில் முதலீடு செய்து இருந்தால் 1 லட்சம் ரூபாய் முதலீடு.. 21 வருடத்தில் 1 கோடியாகி இருக்கும். இப்போதும் இத்திட்டத்தில் முதலீடு செய்யும் போது நல்ல லாபம் பெற முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

விரைவாகத் துவங்குதல் எவ்வளவு

விரைவாகத் துவங்குதல் எவ்வளவு

விரைவாக எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு வேகமாக நீங்கள் கோடீசுவரர் ஆகலாம். எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்ய நீங்கள் எவ்வளவு தாமதம் செய்கிறீர்களோ அவ்வளவு பின்னடைவை சந்திப்பீர்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

உங்கள் எஸ்ஐபி திட்டத்தை தேர்வு செய்யும் முன்

உங்கள் எஸ்ஐபி திட்டத்தை தேர்வு செய்யும் முன்

முதலில் சரியான நிதி நிறுவனம் மற்றும் நிதி மேலாளர்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இவர்கள் தான் உங்கள் முதலீடுகளை சரியாகத் தேர்வு எய்ய உங்களுக்கு உதவுவர், இவர்களை நீங்கள் தேர்வு செய்யும் போது உங்கள் முதலீட்டுக்கான சரியான பயிற்சியை இவர்கள் அளிப்பதைப் பொறுத்தே உங்களால் வாழ்க்கைக்கான பெரும் லாபத்தைப் பெற இயலும்.

கலவையான முதலீடு செய்யுங்கள்

கலவையான முதலீடு செய்யுங்கள்

இந்தியர்கள் எப்போதும் ரிஸ்க் இல்லாத முதளிடையே விரும்புவர், ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளை பொருத்த வரை ஹை ரிஸ்க், லோவ் ரிஸ்க் இரண்டிலும் முதலீடு செய்வதே அதிக லாபத்தை அளிக்கும்.

தோட்டக்காரர் போல செயல்பட வேண்டும்

தோட்டக்காரர் போல செயல்பட வேண்டும்

தோட்டக்காரர் எப்படி ஒரு செடியை நட்ட பிறகு அதற்குத் தினம் தண்ணீர் ஊற்றிக் கவனித்து கொள்வாரோ அவ்வாறு நீங்களும் முதலீடு செய்த திட்டங்களில் உள்ள ஏற்ற இறக்கங்களை கண்காணிக்க வேண்டும்.

கோடியை பெறுவீற்கள்

கோடியை பெறுவீற்கள்

இந்தக் குறிப்பு வரை நீங்கள் சரியாக பின்பற்றி முதலீடு செய்து வந்தால் மட்டும் போதாது. தேவையான போது பணத்தை மீட்டெடுத்து உங்கள் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முறையான திரும்பப் பெறும் திட்டங்கள்(SWA) உங்களுக்கு உதவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

1 crore in 10 years: best ways to investment from 1000 rs per month

1 crore in 10 years: best ways to investment from 1000 rs per month
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X