இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்ய என்ஆர்ஐ-க்கு ஆதார் கார்டு கட்டாயம் வேண்டுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் ஒரு என்ஆர்ஐ ஆக இருக்கிறீர்களா? இந்தியாவில் வரி செலுத்த ஆதார் கார்ட் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

இந்தியாவில் வருமான வரித் தாக்கல் செய்ய என்ஆர்ஐ எனச் சான்றுகளைச் சமர்ப்பித்க்கும் போது ஆதார் கார்டு கட்டாயம் என்பதில் இருந்து விலக்குப் பெறலாம். ஜூலை 1 ம் தேதி, இந்திய அரசின் அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் இதனைத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏன் இது கட்டாயமில்லை?

ஏன் இது கட்டாயமில்லை?

ஆதார் சட்டத்தின் படி, இந்திய குடியிருப்பாளர்கள் மட்டுமே அடையாள எண் பெற தகுதியுடையவர்கள். என்ஆர்ஐகளுக்கு இந்த 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணிற்கு விண்ணப்பிக்கத் தகுதி இல்லை. அதனால் தான் வரி வருவாயைத் தாக்கல் செய்ய ஆதார் அட்டை பெற ஜூலை 31ம் தேதி கால அவகாசம் என்ஆர்ஐ ஆக இருந்தால் பொருந்தாது.

ஆதார் யாருக்குத் தேவை?

ஆதார் யாருக்குத் தேவை?

கடந்த 12 மாதங்களில் 182 நாட்களுக்கு மேலாக இந்தியாவில் வசிக்கின்ற என்ஆர்ஐ ஆக இருந்தால் ஆதார் கட்டாயமாக்கப்படும்.

12 மாதங்களில் 182 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்டால் உடனடியாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் பதிவுசெய்யப்படும். நீங்கள் ஒரு என்ஆர்ஐ ஆக இந்தியாவில் கடந்த 12 மாத காலத்திற்குள் 182 நாட்களில் குறைவாக இருந்திருந்தால், வருமான வரி சட்டத்தின் பிரிவு 139AA படி ஆதாரை நீங்கள் மேற்கோள் காட்ட வேண்டியதில்லை.

2017 நிதி சட்டம்
 

2017 நிதி சட்டம்

2017 நிதிச் சட்டம் படி, இந்தியாவில் வரி வருவாயைத் தாக்கல் செய்ய ஆதார் எண்ணை பான் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் அல்லது ஒரு நிரந்தரக் கணக்கு எண் அல்லது தற்போதைய பான் எண்ணைச் செயலில் வைத்துக்கொள்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும், இது ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆதார் என் வங்கி கணக்கு இணைத்தல்

ஆதார் என் வங்கி கணக்கு இணைத்தல்

2016 ஆதார் சட்டத்தின் படி, ஒரு குடியிருப்பாளர் மட்டுமே ஆதார் என்னைப் பெற உரிமை உண்டு. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து இந்திய வங்கிக் கணக்குதாரர்கள் அவர்களது ஆதார் எண்களை வங்கியுடன் இணைக்க இந்திய அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. அவர்கள் ஆதார் எண் வங்கியுடன் இணைப்பதில் தோல்வி அடைந்தால், கணக்கு இனி செயல்படாது, என்று வருவாய் திணைக்களத்திலிருந்து ஒரு அறிவிப்புக் கூறுகிறது.

புதிய வங்கி கணக்கிற்கான ஆதார்

புதிய வங்கி கணக்கிற்கான ஆதார்

புதிய வங்கிக் கணக்கை திறப்பதற்கு ஆதார் அட்டை எண் வழங்குதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமூகநலத் திட்டங்களின் நன்மைகளைப் பெற ஆதார் அட்டை தேவைப்படுகிறது. உங்கள் பான் ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்படவில்லை எனில், அது டிசம்பர் 31 க்குப் பிறகு செல்லாததாகிவிடும்.

அடையாள சான்றாக ஆதார் அட்டை

அடையாள சான்றாக ஆதார் அட்டை

அனைவருக்கும் தனிப்பட்ட மற்றும் ஒற்றை அடையாள எண் வழங்குவதன் மூலம், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசாங்கத்தால் 12 இலக்க பிரத்தியேக ஆதார் அட்டை எண் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை ஒவ்வொரு குடியிருப்பாளரிடமிருந்தும் மக்கள்தொகை மற்றும் பயோமெட்ரிக் தகவல் அடங்கியுள்ளது. தற்போது எல்பிஜி மானியம், ஈபிஎஃப் திட்டம், ஜன் தன் யோஜனா, ஓட்டுனர் உரிமம் பெற ஆதார் அட்டை கண்டிப்பாகத் தேவை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do NRIs Need Aadhaar Card To File Tax Returns?

Do NRIs Need Aadhaar Card To File Tax Returns?
Story first published: Tuesday, July 4, 2017, 11:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X