செல்வத்தைச் சேமிக்க உதவும் முக்கியக் கோட்பாடுகள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்வத்தைச் சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டுமோ அதைவிட அதிகச் சிரமத்தை நாம் அதைச் சேமிப்பதில் படவேண்டிய ஒன்று. பணத்தைச் சம்பாதிக்கப் பல்வேறு வழிகள் இருப்பினும், அதைச் சேமிக்க உதவும் சில விதிகளே உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமாகச் சில கோட்பாடுகள் உள்ளன.

கடந்த மாதம் நோபல் பரிசு வென்ற நடத்தை பொருளாதாரத்தின் தந்தை ரிச்சார்ட் தெலர், தன்னுடைய முழங்காலியல் கோட்பாட்டைப் பற்றிப் பேசினார். நடத்தைப் பொருளாதாரத்தின் (Behavioural Economics) அடிப்படையில், நாம் வெறும் மனிதர்களாக இருப்பதால், நாம் பகுத்தறிவு செயல்களில் ஈடுபடுகிறோம்.

எனவே நம்மைச் சரியான திசையில் திருப்ப ஒரு தட்டு தட்டி வைக்க வேண்டும். எனவே, அதிகமான செல்வத்தைச் சேமிக்க மற்றும் செல்வத்தை உருவாக்க, முதலீட்டாளர்களாகிய நாம் இந்த முழங்காலியல் கோட்பாட்டைக் கவனிக்க வேண்டும்.

வாழ்வின் ஆரம்பத்தில் சேமிக்கவும்:

வாழ்வின் ஆரம்பத்தில் சேமிக்கவும்:

ஒருவர் தன்னுடைய 25ம் வயதில் சேமிக்கத் துவங்கி, அவர் ஆண்டுக்கு 12 சதவீதம் வருமானம் கொடுக்கக்கூடிய ஒரு சேமிப்புத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்தால் அவருடைய 60 வயதில் அவரிடம் சுமார் 1 கோடி ருபாய் இருக்கும். இதுவே அவருடைய சேமிப்பு 10 வருடம் தாமதமாக ஆரம்பித்தால், அவருடைய இலக்கை அடைய அவர் ஒவ்வொரு வருடமும் சுமார் 3.5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இதுவே அவர் தன்னுடைய 45 ம் வயதில் சேமிப்பை ஆரம்பித்தால், அவர் ஒவ்வொரு வருடமும் சுமார் 12 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.

புத்திசாலித்தனமாகச் செலவழிக்கவும்:

புத்திசாலித்தனமாகச் செலவழிக்கவும்:


உங்களுடைய க்ரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். உங்களுக்குப் போனஸ் கிடைத்தால் அதை ஒரு ஒத்திவைக்கப்பட்ட சம்பளமாகக் கருதி மிகக் கவனமாகச் செலவு செய்யவும்.

எதற்காகச் சேமிப்பை அதிகரிக்க வேண்டும்:

எதற்காகச் சேமிப்பை அதிகரிக்க வேண்டும்:

வருடாந்திர முதலீடுகளின் அளவை அதிகரிப்பதன் மூலம், உங்களுடைய சேமிப்பு இலக்கை வேகமாக அடையலாம் அல்லது ஒரு பெரிய தொகையை உருவாக்கலாம். மேலும், பணவீக்க விகதம் ஒவ்வொரு ஆண்டும் உங்களுடைய சேமிப்புகளின் மதிப்பைக் குறைக்கிறது.

உங்களுக்கு உதக்கூடிய திட்டங்கள்:

உங்களுக்கு உதக்கூடிய திட்டங்கள்:

உங்களுடைய தேவை மற்றும் சாத்தியக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு படி நிலை எஸ் ஐ பி களில் முதலீடு செய்ய வேண்டும். ஒருவருடைய ஆண்டு ஊதிய உயர்வு 5 சதவீதமாக இருக்கும் பொழுது அவர் எஸ் ஐ பி களில் ஒவ்வொரு வருடமும் 10 சதவீதத்தை அதிகரிக்க இயலாது என வித்யா பாலா பரஸ்பர நிதி ஆராய்ச்சி பிரிவு நிதி இந்தியா தெரிவிக்கின்றார்.

இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்:

இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்:

ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை இழக்கும் பொழுது ஏற்படும் துன்பமானது அதே அளவு வருமானத்தைப் பெறும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட அதிகமாகும். எனவே முதலீட்டாளர்கள் இழப்பை தவிர்க்க வேண்டும். இதை முதலீட்டாளர்கள் பின்பற்றவில்லை எனில், அவர்களுடைய பணம் முழுவதும் கரைந்து போய்விடும்.

முதலீட்டை எளிமையாக்குங்கள்:

முதலீட்டை எளிமையாக்குங்கள்:

உங்களுடைய போர்ட்போலியோவில் பல முதலீட்டுத் திட்டங்கள் இருப்பதைவிட மிகக் குறைந்த திட்டங்களுடன் போர்ட்போலியோவை வைத்திருங்கள். இது உங்களுடைய வருமானத்தை அதிகரிப்பதுடன், பல்வேறு குழப்பங்களையும் தவிர்த்திடும்.

மிதமான வருவாய் எதிர்பார்ப்புகள்:

மிதமான வருவாய் எதிர்பார்ப்புகள்:

பெரும்பாலான முதலீட்டாளர்கள் செய்யும் மிக முக்கியமான தவறு என்பது அதிக வருவாயை எதிர்பார்ப்பது. எதிர்கால வருமானங்களைப் பார்ப்பதை விட அந்தத் திட்டங்களின் கடந்த கால வருவாய்களைப் பார்ப்பது மிகவும் சிறந்தது.

முதலீட்டு செயல்முறையைத் தானாகத் தொடங்குங்கள்:

முதலீட்டு செயல்முறையைத் தானாகத் தொடங்குங்கள்:

நீண்ட கால எஸ் ஐ பிக்களைத் தொடங்கி உங்களுடைய இடைவெளிகளை வழக்கமான இடைவெளிகளில் மறுகட்டமைக்கவும்.

இலக்குகளை முதலீடுகளுடன் இணைக்க வேண்டும்:

இலக்குகளை முதலீடுகளுடன் இணைக்க வேண்டும்:

குறிப்பிட்ட இலக்குகளைப் பிரித்து அதற்கான முதலீடுகளைத் தனித்தனியாக மேற்கொள்வது முதலீட்டாளர்கள் அதிக அளவு சேமிக்க உதவுகின்றது. மேலும் இது முதலீட்டுத் தொகை முன்கூடியே முடக்குவதைத் தடுக்கிறது.

அவசர நிதிகள்:

அவசர நிதிகள்:

அவசர நிதி ஒன்றை அமைப்பது உங்களுடைய முதலீடுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் மற்றொரு வழி. முதலீட்டாளர்கள் இந்த நிதியை உண்மையான அவசரநிலைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சீரற்ற தேவைகளுக்காக அல்ல. முதலீட்டாளர்கள் இந்த நிதியை திரவ முதலீடாக மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

பூட்டப்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்யவும்:

பூட்டப்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்யவும்:

முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளை முன்கூட்டியே முறித்துக் கொள்வதைத் தடுப்பதற்கான சிறந்த வழி, முதலீட்டாளர்கள் திரவ நிதி திட்டங்களுக்குப் பதில் நீண்ட கால முதலீடு திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது முதலீடுகளைப் பாதுகாக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Basics of wealth creation for common man

Basics of wealth creation for common man
Story first published: Saturday, November 4, 2017, 19:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X