பிட் காயின் போன்ற கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் வாங்குவது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் நண்பர்களுடன் தொலை பேசி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பொழுது அல்லது நண்பர்களுடனான காபி உரையாடலின் பொழுது பிட்காயினைப் பற்றிப் பேச்சு திரும்பும். அப்பொழுது, பிட்காயின் மீதான உங்களின் ஆர்வம் கட்டாயம் அதிகரிக்கும்.

தற்பொழுது பிட்காயினின் விலை உச்சத்தில் இருக்கும் பொழுது அனைவரும் பிட்காயினில் முதலீடு செய்வதைப் பற்றியே யோசிக்கின்றார்கள். அவர்களிடம் ஆர்வம் இருக்கும் அளவிற்கு, பிட்காயின்களைப் பற்றிய புரிதல் மற்றும் அதனுடன் இணைந்த அபாயங்களைப் பற்றித் தெரிவதில்லை. எனவே உங்களுக்கு உதவும் நோக்கில், நாங்கள் இங்கே பிட்காயின் பற்றிய பல்வேறு விபரங்களைக் கொடுத்துள்ளோம்.

அங்கே எப்படிச் செல்வது?

அங்கே எப்படிச் செல்வது?

Coinmarketcap.com என்கிற வலைத்தளத்தின் கூற்றுப்படி, மிகவும் பிரபலமான பிட்காயின் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட மெய்நிகர் நாணயங்கள் உள்ளன. இந்த மெய்நிகர் நாணயங்களைப் பெற நான்கு வழிகள் உள்ளன. மைனிங் அதாவது தோண்டி எடுப்பது, பரிசாகப் பெறுவது, நீங்கள் செய்த சேவைக்குப் பண்டமாற்றாகப் பெறுவது அல்லது சந்தையில் இருந்து நேரிடையாக வாங்குவது. இந்த நான்கு வழிகளில் மட்டுமே நாம் நாணயங்களைப் பெற இயலும் எனத் திருப் பென்சன் சாமுவேல் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் இணை நிறுவனர் நாணய பாதுகாப்புக் கூறுகின்றார்.

பிட்காயின் சுரங்கம்

பிட்காயின் சுரங்கம்

பிட்காயின் அமைப்பு இடைத் தரகர் இன்றி வாங்குபவர் மற்றும் விற்பவர் நேரிடையாகப் புழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. எனவே இங்குப் பரிவர்த்தனை என்பது நேரிடையாக நடைபெறுகின்றது. அவ்வாறு நடைபெறும் பரிவர்த்தனைகள் பிளாக்ஹைன் என்று அழைக்கப்படும் பொது நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுப் பல்வேறு முனைகளில் சரிபார்க்கப்படுகின்றன. இதைப் பிட்காயின் மென்பொருளை நிறுவிய கணினியைப் பயன்படுத்தும் எந்தவொரு நபரும் இருக்க முடியும். பயனர்கள் பிட்காயினைப் பரிமாற்றம் செய்தவுடன், அந்தப் பரிவர்த்தனை பயனர்களிடையே ஒளிபரப்பப்பட்டு நெட்வொர்க் மூலம் உறுதி செய்யப்படும். சரிபார்ப்பு முடிந்த உடன் அந்தப் பரிவர்த்தனை பதிவு செய்யப்படும். சரிபார்ப்பு முடிந்த பின்னர்ப் பரிமாற்றம் நிறைவு பெற்று விடும்.

சாவ்ன் மெய்நிகர் நாணயங்கள்

சாவ்ன் மெய்நிகர் நாணயங்கள்

கிரிப்டோகிராஃபி புதிர்களைத் தீர்க்கும் வகையில் பிட்காயின் உருவாக்கப்பட்டுள்ளதால், புதிதாக உருவாக்கப்ப்ட்டுள்ல பிட்காயின்கள் சுரங்கத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் கட்டணங்களைத் தவிர்த்து ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படுகின்றது. எனவே பிட்காயின்கள் ஒரு ஊக்கத்தொகையாக உருவாக்கப்படுகின்றது.

நன்கொடை மற்றும் கட்டணமாகப் பிட்காயின்

நன்கொடை மற்றும் கட்டணமாகப் பிட்காயின்

உங்களுக்குப் பரிசாகப் பிட்காயின் கிடைத்தது எனில், நீங்கள் எந்த ஒரு மெய்நிகர் நாணயத்தளத்திலும் அவற்றை விற்க முடியும். ஆனால் சில நேரங்களில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனை தளங்களில் மட்டுமே பரிவர்த்தனைகளில் ஈடுபடுவீர்கள், அப்பொழுது நீங்கள் பிட்காயினின் முகவரியை வழங்க வேண்டும். நீங்கள் ஒரு கணக்கைத் திறந்து, பிட்கோவின் முகவரியைக் கொடுக்க வேண்டும். அதன் பின்னர்ப் பிட்காயினின் வர்த்தகத்தில் ஈடுபட முடியும்.

பரிமாற்ற தளங்களில் இருந்து பிட்கான்களை வாங்குதல்

பரிமாற்ற தளங்களில் இருந்து பிட்கான்களை வாங்குதல்

மற்றொரு வழி பரிமாற்ற தளங்களில் இருந்து பிட்காயின்களை வாங்குவதாகும். பிட்காயின் பரிமாற்ற தளங்கள் பங்கு சந்தை தளங்களைப் போன்று செயல் படுகின்றன. இந்தத் தளங்கள் பிற மெய்நிகர் நாணயங்களை வாங்குவதற்கும் உதவுகின்றன. இந்தியாவில் காயின்செக்யூர், மற்றும் யுனோகாயின் போன்ற வளைத் தளங்கள் நீங்கள் பிட்காயின்களை வாங்க உதவுகின்றன.

எப்படி வாங்குவது?

எப்படி வாங்குவது?

பிட்காயினை வாங்குவதற்கு நீங்கள் முதலில் வளைத் தளங்களில் பதிவு செய்ய வேண்டும். வழக்கமாக, பெரும்பாலான வலைத்தளங்களில் பரிமாற்றங்களுக்கு உதவுக்கூடிய ஆப்ஸ்களைப் பதிவிறக்கம் செய்யலாம். ஒருமுறை பதிவு செய்தால், உங்களுடைய வங்கி விவரங்களை வழங்க வேண்டும் மற்றும் உங்கள் வாடிக்கையாளர் செயல்முறை (KYC) படிவத்தை வழங்க வேண்டும். எனவே, நீங்கள் உங்களுடைய PAN மற்றும் ஆதார் போன்ற விவரங்களை வழங்க வேண்டும். அதோடு உங்களுடைய புகைப்படம் மற்றும் கையொப்பத்தையும் வழங்க வேண்டும். இந்தச் செயல்முறை முடிந்ததும், நீங்கள் பிட்காயின்களை வாங்கி விற்க இயலும். பிட்காயின் வாங்குவது என்பது இ-வாலட்களில் பணத்தைச் செலுத்துவதைப் போன்றது. இ-வாலட்களுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், நீங்கள் உங்களுடைய நாணயத்தை மெய்நிகர் நாணயங்களாக மாற்ற வலைத்தளங்களில் பணத்தைச் செலுத்த வேண்டும். இந்தச் சேவையை வழங்க வளைத் தளங்கள் சேவைக் கட்டணம் மற்றும் கமிஷன் வசூலிக்கின்றன.

கட்டண விபரங்கள்

கட்டண விபரங்கள்

பிட்காயினை மைனிங் செய்தாலும் அல்லது பரிமாற்ற வலைத்தளங்களில் இருந்து வாங்கினாலும் நீங்கள் சில பல கட்டணங்களைச் செலுத்த வேண்டும். நீங்கள் பிட்காயின்களை வேகமாக மைனிங் செய்ய வேண்டும் எனில் அதிக அளவு கட்டணத்தைச் சுரங்கத் தொழிலாளர்களுக்குச் செலுத்த வேண்டும். ஏனெனில் அவர்கள் மிகவும் விரைவாக உங்களுடைய பரிவர்த்தனையைச் சரிபார்க்க வேண்டும். பிட்காயினை வாங்க மற்றும் விற்க கட்டணங்கள் ஒவ்வொரு தளத்திற்கும் இடையே வேறுபடுகின்றது. நாங்கள் 0.4% லிருந்து 0.6% வரை கட்டணம் வசூலிக்கின்றோம். சில தளங்களில் இது 2% வரை வேறுபடுகின்றது. எனத் திருச் சாமுவேல் தெரிவிக்கின்றார்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்

பிட்காயின்களின் விலைகள் மிகவும் செங்குத்தாக ஏறி வருகின்ற காரணத்தினால், பிட்காயின்களில் முதலீடு செய்வது மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கின்றது. எனினும் நீங்கள் அவற்றில் முதலீடு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலில், நீங்கள் வாங்க விரும்பும் நிறுவனத்தைக் கவனமாகத் தேர்ந்தெடுக் வேண்டும். ஏமாற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்வது தற்கொலைக்குச் சமமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில், போலி மெய்நிகர் நாணயங்களைச் சார்ந்து பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

உங்களுக்கு மெய்நிகர் நாணயங்களைப் பற்றி அதிகம் தெரியாவிட்டால், அதில் அதிகம் ஈடுபடாமல் இருப்பது மிகவும் நல்லது. நீங்கள் அளித்த சேவைக்கு ஈடாக உங்களுக்குப் பிட்காயின் அல்லது வேறு மெய்நிகர் நாணயங்கள் கிடைத்தால், அந்த நாணயங்களை வழங்கிய நிறுவனம் மற்றும் அது உருவான நாட்டின் நம்பகத்தன்மையைப் பரிசோதியுங்கள். அதோடு அந்த மெய்நிகர் நாணயங்களை மாற்றும் வசதி உள்ளதா என்பதையும் அறிந்திடுங்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Different ways to buy cryptocurrencies in India

Different ways to buy cryptocurrencies in India
Story first published: Sunday, November 26, 2017, 18:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X