இந்தியாவில் இளம் வயதில் பணக்காரர் ஆவது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைவருக்கு வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் ஒரு இலக்கு இருக்கும். அந்த இலக்கினை அவர்கள் 35 முதல் 40 வயதுக்குள் அடைய வேண்டும் என்று விரும்புவார்கள்.

 

தற்போது உங்கள் வயது 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும் போது நாம் சேமிக்காமல் வாழ்க்கையைக் கொண்டாடி வருகிறோம். சொத்துக்கள் சம்பாதிக்க இது சரியான வழி அல்ல.

பணப் பிரச்சனை இல்லாமல் வாழ நாம் பல விதமான சேமிப்புகளைச் செய்ய வேண்டி உள்ளது. எனவே 30 வயதுக்குள் நீங்கள் செய்ய வேண்டும் முக்கிய முதலீடுகளைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

வரி சேமிக்கும் திட்டங்கள்

வரி சேமிக்கும் திட்டங்கள்

நீங்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் போது வரி சேமிக்கும் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. பல சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யும் போது வருமான வரிச் சட்டம் 80சி-ன் கீழ் வரி விலக்கு பெற முடியும்.

வரிச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யும் போது உங்களால் வரி விலக்கு மட்டும் இல்லாமல் கூடுதலாகச் சேமிக்கவும் முடியும். வரி விலக்கிற்கு ஏற்றச் சேமிப்புத் திட்டங்கள் என்றால் அது ஈக்விட்டி சார்ந்த சேமிப்புத் திட்டங்களே ஆகும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாக்க ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை ஒருவரால் வரி விலக்கு பெற முடியும்.

அவசர தேவைக்கான முதலீடுகள்

அவசர தேவைக்கான முதலீடுகள்

பொதுவாக நாம் அவசர தேவைக்குப் பிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து இருந்தால் தேவைப்படும் போது எளிதாக எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுவாக விபத்துகள், உடல் நலக் குறைப்பாடுகள் நமக்கு ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றால் நாம் அதற்குத் தயாராக இருப்பது நல்லது. எனவே ஆண்டுக்கு 5 முதல் 6 மாத சம்பளத்திற்கு இணையான சேமிப்புகளை நாம் வைத்து இருப்பது அவச தேவையின் போது நமக்குப் பயன்படும்.

 நீண்ட கால இலக்கு
 

நீண்ட கால இலக்கு

திருமணம், வீடு வாங்குவது, சொந்தமாகத் தொழில் துவங்க முதலீடு செய்வது, ஓய்வூதியம் போன்ற உங்களது நீண்ட காலத் திட்டங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொன்றுக்குத் தனித் தனியாகத் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். எவ்வளவு கார்ப்பஸ் என்று முடிவு செய்த பிறகு தொடர்ந்து அதற்கு ஏற்றவாறு நீங்கள் முதலீடு செய்து வர வெண்டும். மியூச்சுவல் ஃபண்டு, எஸ்ஐபி போன்றவை நீண்ட கால இலக்கிற்கு ஏற்ற முதலீடு திட்டங்கள் ஆகும்.

குறுகிய கால இலக்குகள்

குறுகிய கால இலக்குகள்

குறுகிய கால இலக்குகளில் ஆண்டு விடுமுறை பயணம், கார் வாங்குவது, சொத்துக்கள் வாங்குவது போன்றவை இருக்கும். இதுபோன்ற இலகுகளுக்கு லிவிட் ஃபண்டுகள் அல்லது ஆர்பிட்ரேஜ் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

ஹெல்த் மற்றும் லைப் கவர்

ஹெல்த் மற்றும் லைப் கவர்

ஹெல்த் மற்றும் லைப் கவர் காப்பீடுகள் முதலீடுகள் அல்ல. எனினும் இவை இரண்டும் முக்கியமான ஒன்றாகும். உங்கள் வருவாயினை நம்பி தான் குடும்பம் இருக்கின்றது என்ற சூழலில் இந்த ஹெல்த் மற்றும் லைப் கவர் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இவை இரண்டும் உங்களுக்கு ஏற்படும் சம்பாவிதம் மற்றும் அவசரக் காலங்களில் உதவிப்புரியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to become rich fast at a young age in India?

How to become rich fast at a young age in India?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X