ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்ட வேண்டாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரி செலுத்துவது யாருக்கும் ஒரு இனிமையான அனுபவம் அல்ல. உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது உங்கள் வரி வருவாயானது உங்கள் வருமானத்தில் அதிகரிக்கும் என்பதால் இது மேலும் வேதனைக்குரியது.

 

நீங்கள் ஒரு வருடத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் தனிநபர் என்றால், நடப்பு வருமான வரி விகிதங்கள் உங்களைப் பயமுறுத்தும். காரணம் என்னவென்றால் உங்கள் வருமானம் மிக அதிக வரி விகித அடுக்கில் நுழைகிறது.

வரியைக் குறைக்க உள்ள இரண்டு வழிகள்

வரியைக் குறைக்க உள்ள இரண்டு வழிகள்

வருமான வரிச் சட்டம் பல்வேறு வரிச் சேமிப்பு விலக்குகள் மற்றும் கழிவுகளை அனுமதிக்கிறது என்றாலும், அரிதாக ஒரு நபர் அவற்றை உகந்ததாகப் பயன்படுத்த முடியும். "உண்மையைச் சொல்வதென்றால், உங்கள் வரிப்பொறுப்புகளைக் குறைக்க இரண்டு முக்கிய வழிகள் உள்ளன.

முதலாவதாக, உங்கள் சம்பளத்தின் பகுதியாக உள்ள அனைத்துப் படிகள் மற்றும் பணியாளர் நன்மைகளை அதிகபட்ச வரிச் சேமிப்பு விலக்குகள் பெறக்கூடிய வகையில் உங்கள் சம்பளத்தை மறுசீரமைக்க முடியும். இரண்டாவதாக, வருமான வரி சட்டத்தால் வழங்கப்பட்ட அனைத்து வரிச் சேமிப்பு முதலீட்டு விருப்பங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

 

திட்டமிடல்

திட்டமிடல்

உண்மையில், உங்கள் வரிகளை முன்கூடியே கவனமாகத் திட்டமிட்டால், உங்கள் வரி வருவாயைக் குறைக்கலாம் அல்லது உங்கள் வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் கூட அதைப் பூஜ்யமாகச் செய்யலாம்" இவ்வாறு எச் & ஆர் பிளாக் இந்தியா, வரி ஆராய்ச்சி தலைவரான சேதன் சண்டக் கூறுகிறார்.

சம்பள மறுசீரமைப்பு மூலம் வரிச் சேமிப்பு
 

சம்பள மறுசீரமைப்பு மூலம் வரிச் சேமிப்பு

உங்கள் வரிகளைக் குறைக்க எளிதான வழி, உங்களது சம்பளத்தை மறுசீரமைக்க வேண்டும், இதன்மூலம் நீங்கள் முடிந்தவரைக் குறைந்த சம்பளம் வழங்குமிடத்து வரிப் பிடித்தம் (TDS) செலுத்த முடியும். நீங்கள் வரி செலுத்துவதைக் குறைக்க உதவுவது எப்படி என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு தனி நபர் சம்பளத்தின் பல்வேறு பாகங்களைப் பார்ப்போம்.

வீட்டு வாடகை ரூ. 1.2 - ரூ 1.5 லட்சம்

வீட்டு வாடகை ரூ. 1.2 - ரூ 1.5 லட்சம்

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்குச் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருப்பவராக இருந்தால், உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியாக நீங்கள் வீட்டு வாடகைப் படியை (HRA) சேர்க்கலாம். நீங்கள் 12 லட்சம் வரி அடைப்புக்குறிக்குள் வந்துவிட்டால், 1.2 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை வீட்டு வாடகைப் படி (HRA) வரி விலக்கு கிடைக்கும்.

 போக்குவரத்துப் படி : ரூ 19,200

போக்குவரத்துப் படி : ரூ 19,200

இது பெரும்பாலும் நிறுவனத்தின் செலவு பகுதியாகச் சம்பள வரி செலுத்துவோருக்குத் தரப்படும் படி ஆகும். "இந்தப் படிகள் உங்கள் வரிக்குரிய சம்பளத்தை ரூ 19,200 வரை குறைக்கலாம். எனவே, உங்கள் மாத சம்பளத்திலிருந்து போக்குவரத்து படிகளுக்காகக் குறைந்தபட்சம் 1,600 ரூபாய்களை ஒதுக்குமாறு உங்கள் முதலாளியை நீங்கள் கேட்கலாம் "என்று சண்டக் கூறுகிறார்.

மருத்துவச் செலவு ஈடுசெய்தல்: ரூ. 15,000

மருத்துவச் செலவு ஈடுசெய்தல்: ரூ. 15,000

இதே போன்ற வரிச் சலுகைகள் மருத்துவச் செலவினங்களிலிருந்து பெறப்படும். வருமான வரிச் சட்டங்கள் வரிக்கு உட்பட்டு 15,000 ரூபாய்க்கு மருத்துவச் செலவு ஈடுசெய்தல் அளிக்கின்றன. ஒரு வருடத்தில், உங்கள் மருத்துவச் செலவினங்கள் எளிதாக இந்த நுழைவாயிலைக் கடக்கலாம். எனவே, உங்கள் முதலாளியிடம் அத்தகைய செலவினங்களைச் சமர்ப்பித்து முழு நன்மையைக் கோரவும்.

 விடுமுறை பயணப்படிகள்: ரூ 30,000 - ரூ 40,000

விடுமுறை பயணப்படிகள்: ரூ 30,000 - ரூ 40,000

விடுமுறை பயணப் படிகள் (LTA) என்பது சம்பளத்தின் ஒரு பகுதியாகும். இது அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் எந்தவொரு பண அளவையும் தரவில்லை. இருப்பினும், "உள்நாட்டு பயணத்திற்காக நான்கு ஆண்டுகளில் இருமுறை மட்டுமே கோர முடியும். எனவே, இந்தப் படிகள் ஒரு வருடத்திற்கு ரூபாய் 30,000 லிருந்து ரூபாய் 40,000 வரை உங்கள் சம்பளத்தில் எளிதில் சேமிக்க முடியும்." என்கிறார் சண்டக்.

உணவு அடையாளச் சீட்டு / பற்றுச்சீட்டு : ரூ 12,000 - ரூ 26,400

உணவு அடையாளச் சீட்டு / பற்றுச்சீட்டு : ரூ 12,000 - ரூ 26,400

உங்களுடைய முதலாளியிடமிருந்து உணவு மற்றும் மதுபானம் அல்லாத சில உணவு வகைகள் அல்லது உணவு அடையாளச் சீட்டுகளைப் பெறுகிறீர்களானால், உணவுக்குத் தலா 50 ரூபாய் வரை சேமிக்கலாம். உணவு மதிப்பு ரூ 50 ஐ விட அதிகமாக இருந்தால், அதிகப்படியான தொகை வரிக்கு உட்படுத்தப்படும். உங்கள் முதலாளியின் கொள்கையைப் பொறுத்து, ரூபாய் 1,000 முதல் ரூபாய் 2,200 வரை எளிதாகச் சேமிக்க முடியும்.

சுற்றுலா மற்றும் எரிபொருள் செலவு ஈடுசெய்தல்: ரூ. 1.5 லட்சம்

சுற்றுலா மற்றும் எரிபொருள் செலவு ஈடுசெய்தல்: ரூ. 1.5 லட்சம்

இடமாற்றம் அல்லது பயணத்தில் பயணச் செலவைச் சந்திப்பதற்குக் கொடுக்கப்படும் படிகள்; உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் செலவுகளுக்கு விலக்கு. ஆனால் பணியாளர்களின் உண்மையான செலவுகள் மற்றும் செலவு ஈடுசெய்தல் போன்றவை வரி சட்டங்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. இங்கு ரூ .1,5 லட்சம் ஒருவருக்கு ஒரு வருடத்தில் ஏற்படும் நியாயமான செலவினமாக மதிப்பீடு கருதப்படுகிறது.

தொலைப்பேசி செலவினங்கள் ஈடு செய்தல்: ரூ. 24,000

தொலைப்பேசி செலவினங்கள் ஈடு செய்தல்: ரூ. 24,000

ஒரு ஊழியருக்கு வழங்கப்படும் அலைபேசி அல்லது வீட்டில் அளிக்கப்பட்டுள்ள தொலைப்பேசி வசதியின் மூலம் ஏற்படும் செலவுகளும் வரி விலக்குகளுக்கு உகந்ததாகும். "உங்களுடைய முதலாளி இந்த வசதி அளித்தால், மாதக் கட்டணமாக 2,000 ரூபாய்க்குச் செலவழித்தால், உங்களுடைய முதலாளியிடம் உண்மையான கட்டணங்களைச் சமர்ப்பித்து ரூ 24,000 வரை நன்மை பெறலாம்" என்கிறார் சந்தங்க்.

புத்தகங்கள் மற்றும் பருவஇதழ்கள்: ரூ 12,000 - ரூ 24,000

புத்தகங்கள் மற்றும் பருவஇதழ்கள்: ரூ 12,000 - ரூ 24,000

உங்கள் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்கள் தொடர்பான புத்தகங்கள் அல்லது பருவஇதழ்களை வாங்குவீர்களேயானால், அத்தகைய செலவினங்களில் உங்கள் முதலாளியிடமிருந்து செலவினங்களை ஈடு செய்யலாம். மேலும் வரி விலக்கும் கோரலாம்.

 ஆராய்ச்சி படிகள்: ரூ. 25,000 - ரூ .50,000

ஆராய்ச்சி படிகள்: ரூ. 25,000 - ரூ .50,000

ஒரு முதலாளியால் செலவு செய்யப்பட்டுத் தரப்படும் பயிற்சி, குறுகிய கால இணைய வகுப்புகள் போன்றவை, உண்மையான பரிவர்த்தனைப் பற்று அளிப்பதன் மூலம் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இது ஆராய்ச்சி உதவித்தொகை என அறியப்படுகிறது மற்றும் வருமான வரி சட்டத்தின் கீழ் கிடைக்கும் வரி விலக்குக்கு மேல் வரம்பு இல்லை.

பரிசு சீட்டு

பரிசு சீட்டு

முதலாளியால் பணமாகவோ அல்லது பொருளாகவோ தரப்படும் பரிசுக்கு ஒரு வருடத்திற்கு ரூ. 5,000 வரை விலக்கு அளிக்கப்படும். பரிசு பணியாளராலோ அல்லது பணியாளரின் குடும்பத்தினராலோ பெறப்படலாம்.

உங்கள் அடிப்படை சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் பிஎஃ பங்களிப்பு: உங்கள் பிஎஃப் கணக்கில் அடிப்படை சம்பளத்தில் 12% வரை உங்கள் துலாளியின் பங்களிப்பு விரியிலிருந்து விலக்குப் பெறுகிறது மேலும் உங்கள் சுய பங்களிப்பு யு/எஸ் 80சி இன் கீழ் வரிவிலக்கிற்குத் தகுதி பெறுகிறது. ஒட்டுமொத்த வரம்பு ரூ. 1.5 இலட்சத்திற்கு உட்பட்டது. "உங்கள் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் முதலாளியின் வரியற்ற கூறுகளை அதிகரிக்கலாம், அது உங்கள் வரிச்சுமையைக் குறைக்கும். உங்கள் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதால் நீங்கள் வீட்டிற்குக் கொண்டு செல்லும் சம்பளமும் ஹெச்ஆர்ஏ விலக்கும் குறைந்த போதிலும், நீங்கள் சொந்த வீட்டில் வசிக்கும் பட்சத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்," என்று தெரிவிக்கிறார் சந்தக்.

 

வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிச் சேமிப்பு முதலீடுகள்

வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிச் சேமிப்பு முதலீடுகள்

நீங்கள் சம்பள மறுசீரமைப்பின் மூலம் மட்டுமல்லாமல் சாமர்த்தியமான முதலீடுகளினூடாகவும் வரிகளைச் சேமிக்கலாம். உங்கள் வசம் கிடைக்கும் பல்வேறு வரிச் சேமிப்பு முதலீடுகளைப் பார்வையிடுவோம் வாருங்கள்:

 பிரிவு 80சி இன் கீழ் வரிப்பயன்கள்: ரூ. 1.5 இலட்சம்

பிரிவு 80சி இன் கீழ் வரிப்பயன்கள்: ரூ. 1.5 இலட்சம்

இது வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரும் பிரசித்தி பெற்ற வருமான வரிச் சேமிப்பு முதலீடுகளாகும். ஈஎல்எஸ்எஸ், பிபிஎஃப், என்பிஎஸ், வரிச் சேமிப்பு வைப்பு நிதிகள், ஐந்து வருட அஞ்சல் அலுவலக வைப்பு நிதிகள், மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற ஏராளமான திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம். உங்கள் கட்டாயப் பங்களிப்பும் இந்தப் பிரிவின் ஒரு பகுதியாகும். மேலும் உங்கள் ஆயுள் காப்பீட்டு முனைமத் தொகைகள், குழந்தைகளின் பள்ளிக் கல்வி கட்டணங்கள் அத்துடன் வீட்டு கடனின் அசலை திருப்பிச் செலுத்திய தொகை ஆகியவற்றை வரி நிவாரணத்திற்குத் தாக்கல் செய்யலாம். பிரிவு 80 சி உங்கள் வரிவிதிப்பு வருமானத்தை ரூ. 1.5 இலட்சம் வரை குறைக்க உதவுகிறது.

 தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்காகக் கூடுதல் கழித்தல்: ரூ 50,000

தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்காகக் கூடுதல் கழித்தல்: ரூ 50,000

தேசிய ஓய்வூதியத் திட்டம் பிரிவு 80சி மேல் மற்றும் கூடுதலாக வரி விலக்கு அளிக்கிறது. பிரிவு 80 சிசி (1பி) கீழ், நீங்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், 50,000 ரூபாய்க்கு கூடுதல் வரி விலக்குப் பெறலாம்.

முதலாளியின் தேசிய ஓய்வூதியத் திட்ட பங்களிப்பு: ரூ. 80,000

முதலாளியின் தேசிய ஓய்வூதியத் திட்ட பங்களிப்பு: ரூ. 80,000

தேசிய ஓய்வூதியத் திட்டம் உங்களுக்கு மேலும் ஒரு வரி முறிப்பு பெற்றுத் தர முடியும். உங்கள் சார்பாக உங்கள் முதலாளியின் பங்களிப்புகளில் உங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% வரை விலக்குகளை நீங்கள் கோரலாம். நீங்கள் இன்னும் சில வரிகளைச் சேமிக்க இந்த அணுகுமுறைக்கு மாறும்படி உங்கள் முதலாளியைக் கேட்கலாம்.

சுகாதாரக் காப்பீட்டுத் தொகை: ரூ. 40,000

சுகாதாரக் காப்பீட்டுத் தொகை: ரூ. 40,000

சுய, பெற்றோர் மற்றும் நெருங்கிய குடும்பத்திற்காகச் செலுத்தப்பட்ட உடல்நல காப்பீட்டுத் தொகையில் ரூ. 60,000 வரை சேமிக்கலாம். எனினும், வரிகளைச் சேமிப்பதற்கான நோக்கத்துடன் பெரிய அல்லது பல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் இணைவது நல்லதல்ல. உங்கள் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் நோக்கம் மருத்துவமனையின் பரிவர்த்தனை பற்றை ஏற்பதாக இருக்க வேண்டும். நீங்கள் செலுத்திய மொத்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை சுமார் ரூ40,000 என்பதாக எடுத்துக்கொள்வோம்.

வீட்டு கடன் மீதான வட்டி: ரூ. 2 லட்சம்

வீட்டு கடன் மீதான வட்டி: ரூ. 2 லட்சம்

நீங்கள் ஒரு வீட்டுக்கடன் வாங்கி இருந்தால் உங்கள் வரியிலிருந்து பெரிய அளவு சேமிக்க முடியும். "உங்கள் வீட்டுக் கடனில் செலுத்தப்படும் வட்டி, உங்கள் வருடாந்திர வரி வருவாயை பிரிவு 24ன் கீழ் ரூ. 2 லட்சத்திற்குக் குறைக்கலாம். நீங்கள் முதல் முறையாக வீடு வாங்குபவர் என்றால், நீங்கள் வாங்கும் வீட்டின் மதிப்பு 50 லட்சத்திற்கு மிகாமல் உங்கள் கடன் தொகை 35 லட்சத்திற்கும் குறைவானதாக இருந்தால் மேலும் 50,000 ரூபாய் வரிக் கழிவுக் கிடைக்கும். வாடகை குடியிருப்பில் வசிக்கிறவர்கள் பிரிவின் 8ன் கீழ் வீட்டு வாடகைப்படி (ஹெச்.ஆர்.ஏ) சலுகையைப் பெற முடியும். நீங்கள் வீட்டு வாடகைப்படியைப் பெறாவிட்டாலும், பிரிவு 80GG இன் கீழ் செலுத்தப்பட்ட வாடகைக்கு நீங்கள் தள்ளுபடி பெறலாம்" என்று சண்டக் கூறுகிறார்.

கல்வி கடன் மீதான வட்டி

கல்வி கடன் மீதான வட்டி

வீட்டுக் கடன் போன்று, உங்கள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்துவதற்காகச் செலவழிக்கப்பட்ட தொகைக்கு வரிச் சேமிக்கலாம். நீங்கள் பிரிவு 80ஈன் கீழ் கடன் மீது செலுத்தப்படும் வட்டிக்குக் கழிவு பெரும் தகுதி உடையவர் ஆவர். உங்கள் கல்வி, உங்கள் கணவரின்/மனைவியின் கல்வி அல்லது உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு நிதியளிப்பதற்குக் கடன் பயன்படுத்தப்படுமானால், வரி நன்மை பெறலாம்.

அளிக்கப்பட்ட நன்கொடைக்கு

அளிக்கப்பட்ட நன்கொடைக்கு

பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நீங்கள் நன்கொடைகளை வழங்கியிருக்கலாம் ஆனால் பிரிவு 80ஜி இன் கீழான வரி சலுகைகளைக் கவனிக்காமல் விட்டிருக்கலாம். "பல வரி செலுத்துவோர் இவ்வித வரிச்சலுகைகளைத் தெரியாமலோ அல்லது வெறுமனே விட்டுவிடக்கூடும். நெடிய வரி ஈடுசெய்தல் செயல்முறை காரணமாக. நீங்கள் அளித்த நன்கொடை தொகையில் 50% அல்லது 100% ஐ விலக்கக் கோரலாம். நன்கொடை ரசீதுகளைப் பாதுகாத்தல் மற்றும் உங்கள் வரி வருமானத்தில் அனைத்து விவரங்களையும் திரும்ப அளிக்க நேரத்தை எடுத்துக் கொள்வது உங்கள் வரிப் பொறுப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்." சொல்கிறார் சண்டக்.

ஆதலால் நீங்கள் பார்த்தது என்னவென்றால், நிறுவன செலவுகள் மறுசீரமைப்பு மற்றும் வரிச் சேமிப்பு முதலீடுகளின் உகந்த பயன்பாடு மூலம் உங்கள் வரிகளை ஒழுங்காகத் திட்டமிட்டால் உங்கள் வரிக் கடன்களைக் கடுமையாகக் குறைக்கலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax Return (ITR) Filing: How to save tax on salary; Pay no tax on income of over Rs 10 lakh

Income Tax Return (ITR) Filing: How to save tax on salary; Pay no tax on income of over Rs 10 lakh
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X