நிலையற்ற வருமானம் பெறுபவர்கள் பணப் பிரச்சனையைத் தீர்க்க சிறந்த வழி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் வருமானம் மற்றும் செலவுகளைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிந்திருந்தால் உங்கள் நிதிகளைத் திட்டமிடுவது மிகவும் எளிது. உங்கள் மொத்த வருமானத்தில் எவ்வளவு செலவு மற்றும் எவ்வளவு சேமிப்புத் தொகை என்பதைக் கணக்கிட்டால் ஒரு வரவு செலவு திட்டத்தை நிர்ணயிப்பது உங்களுக்கு எளிதாகிவிடும்.

 

இருந்தாலும், உங்கள் வருமானம் நிலையானதாக இல்லாவிட்டால் செலவுகளையும் சேமிப்புகளையும் முன்கூட்டி சமாளிப்பது சற்றுக் கடினம். ஊதியம் பெறும் மக்கள் இந்த விஷயத்தில் ஒரு சாதகத்தைப் பெற்றுள்ளனர், அவர்களால் அவர்களுடைய எதிர்காலத்திற்காகத் திட்டமிட முடியும். அதற்கு நேர்மாறாகச் சுய தொழில் மற்றும் பகுதி நேர வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஒழுங்கற்ற சம்பள சூழ்நிலையில் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நிதி நிலைமைகளைச் சமாளிப்பது சற்றுக் கடினமாக இருக்கிறது.

இருந்தாலும், சில எளிய மற்றும் சாமார்த்தியமான யுக்திகளைப் பயன்படுத்தி உங்கள் ஒழுங்கற்ற அல்லது நிலையற்ற வருமானத்தைக் கொண்டு உங்கள் நிதி நிலைகளை உங்களால் சமாளிக்க முடியும். உங்களுக்கு நிலையான வருமானம் இல்லாதபோது நிதி நிலைமையைச் சமாளிக்கும் சில புத்திசாலித்தனமான வழிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

உங்கள் செலவுகளைத் தொடர்ந்து கண்காணியுங்கள்

உங்கள் செலவுகளைத் தொடர்ந்து கண்காணியுங்கள்

கையிலிருக்கும் பணத்தை விட அதிகமாகச் செலவழித்து விடுவது பலருக்கும் பொதுவாகக் காணப்படும் ஒரு பிரச்சனையாகும். உங்கள் செலவழிக்கும் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும் ஒருபோதும் உங்கள் வருமானத்தைத் தாண்டி உங்கள் செலவுகள் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்வதும் சிறந்ததாகும். உங்கள் மொத்த செலவுகளை மதிப்பிட வந்துள்ள சில முன்னேற்றம் அடைந்த பல்வேறு மொபைல் செயலிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

12 மாத செலவுகள்

12 மாத செலவுகள்

நீங்கள் எதிர்பார்க்கும் மாதாந்திர செலவுகளை மதிப்பிடக் கடந்த 12 மாத செலவுகளைக் குறித்து வைத்துக் கொண்டு அதன் சராசரியை கணக்கிட வேண்டும். இது வருங்காலத்தில் செலவுகளைச் சிறப்பாகக் கையாளவும் மற்றும் நிதிகளை முன்கூட்டி ஏற்பாடு செய்யவும் உங்களுக்கு உதவும்.

 கடன் வலை
 

கடன் வலை

உங்கள் கடந்த காலச் செலவழிக்கும் பழக்கங்களை அடிப்படையாக வைத்து உங்கள் செலவுகள் அனைத்தையும் எதிர்கொள்ளப் போதுமான கையிருப்புப் பணத்தைக் கையிருப்பில் நீங்கள் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் நீங்கள் கடன் வலையில் அகப்பட்டுக் கொள்ள நேரிடும்.

போதுமான பண இருப்பைப் பராமரிக்கவும்

போதுமான பண இருப்பைப் பராமரிக்கவும்

உங்கள் சம்பளத்தைப் பெற 15 முதல் 30 நாட்கள் தாமதமாவதாக இருந்தால் நீங்கள் அந்தத் தாமதத்தைச் சரிக்கட்ட வெவ்வேறு கட்டணத் தேதிகளைக் கொண்ட பல்வேறு கடன் அட்டைகளைப் பயன்படுத்தலாம்.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் சம்பளம் வந்துவிடும் என்று தெரிந்து எதிர்பார்த்து இருக்கும் போது கையிருப்பில் பணத்தை வைத்திருக்கக் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவது உங்களுக்கு உதவும்.

 

எதிர்பாரா நிகழ்வுக்கான நிதி

எதிர்பாரா நிகழ்வுக்கான நிதி

கையிருப்புப் பணத்தை உங்கள் எதிர்பாரா நிகழ்வுகளுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் நிதிகளிலிருந்து தனியாகப் பிரித்து வைக்க வேண்டும். கையிருப்புப் பணத்தின் நோக்கம் உங்கள் வருமானம் ஒழுங்கற்று இருக்கும் போது வழக்கமான செலவுகளை எதிர்கொள்வதற்காக இருக்க வேண்டும். நீங்கள் வருங்கால எதிர்பாரா செலவுகளுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் நிதிகளைக் கையிருப்பு பணத்திலிருந்து பிரித்துத் தனித்தனியே பராமரிக்க வேண்டும்.

வழக்கத்திற்கு மாறாக உங்கள் சம்பளம் வர அதிகத் தாமதமானால் நிதிக் கடமைகளைக் கையாள எதிர்பாரா செலுவுகளுக்காக நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம் போதுமானதாக இருக்க வேண்டும்.

 

 அனைத்து வருமானங்களையும் ஒரு வங்கிக் கணக்கில் வைத்திருங்கள்

அனைத்து வருமானங்களையும் ஒரு வங்கிக் கணக்கில் வைத்திருங்கள்

உங்களுடைய அனைத்து பணத்தையும் ஒரு வங்கிக் கணக்கில் போட்டு வைக்க வேண்டும். இதனால் நீங்கள் அஜாக்கிரதையாகப் பணம் செலவழிப்பதை தடுக்கப்படுவதோடு வங்கியிலிருந்து எந்த வகையிலாவது பணம் எடுக்கப்படுகிறதா என்பதையும் உங்களால் கண்காணிக்க முடியும்.

நீங்கள் மனதளவில் ஒரு வரம்பு நிலையை அளவாக வையுங்கள். அப்போது தான் உங்கள் வங்கியில் நிலுவைத் தொகை நீங்கள் அமைத்த வரம்பைத் தாண்டி போகும்போது நீங்கள் அதைக் கண்டறிய முடியும்.

 

 முதலில் சேமியுங்கள் பிறகு செலவழியுங்கள்

முதலில் சேமியுங்கள் பிறகு செலவழியுங்கள்

பண நெருக்கடி ஏற்படுவதைத் தடுப்பதற்கான முதல் முக்கிய விதி முதலில் சேமியுங்கள் பிறகு செலவழியுங்கள். நிறையப் பேருக்கு அவர்கள் கைக்குச் சம்பளம் வருவதற்கு முன்பே கடன் அட்டைகள் போன்ற கடன் திட்டங்களைப் பயன்படுத்திப் பணத்தைச் செலவழிக்கும் பழக்கம் இருக்கும்.

நெருக்கடி

நெருக்கடி

இது பல மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்திக் கடனை திருப்பிக் கட்ட முடியாத நெருக்கடியான நிலைக்கு வழிவகுக்கும். நீங்கள் முதலில் பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தைப் பயிற்சி செய்து வந்தால் அதைப் பயன்படுத்தி உங்கள் நிதி சார்ந்த இலக்குகளில் முதலீடு செய்யவும் பின்னர் மீதமிருக்கும் பணத்தில் செலவழிக்கும் பழக்கம் ஏற்படும். இது நீண்ட கால அடிப்படையில் பண இருப்பை உருவாக்க உங்களுக்கு உதவும்.

காப்பீடு செய்து கொள்ளுங்கள்

காப்பீடு செய்து கொள்ளுங்கள்

ஆரோக்கியப் பிரச்சனைகள் மற்றும் உடல் குறைபாடுகள் அறிவிப்பில்லாத விருந்தாளியாக அடிக்கடி வரும். இதைத் தவிர்க்க முடியாது. இருந்தாலும் உங்கள் நிலையற்ற வருமானம் இத்தகைய சூழ்நிலைகளைக் கையாளும் உங்கள் திறனை குறைத்துவிடும் என்பதால் பொருத்தமான ஒரு காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுவது அத்தகைய அபாயங்களைக் குறைக்கும்.

 ஆயுள் காப்பீடு பயன்கள்

ஆயுள் காப்பீடு பயன்கள்

ஆயுள் காப்பீடு ஒருவேளை காப்பீட்டுதாரர் இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்திற்கு நிதி சார்ந்த ஆதரவைத் தரும். அதே போல மருத்துவக் காப்பீடு உடல்நலம் சார்ந்த அவசரக் காலங்களில் தரமான சிகிச்சையை உறுதி செய்யும். ஆரோக்கியம் சார்ந்த நெருக்கடி நிலைகள் ஏற்பட்டால் உடனடியாகப் பணத்தை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்க நீங்கள் பணமற்ற ஆரோக்கியக் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நிதியியல் ஒழுக்கம்

நிதியியல் ஒழுக்கம்

உங்கள் வருமானம் நிலையற்றதாக இருந்தால் உங்கள் நிதி நிலைமையை ஒரு சிறந்த வழியில் நிர்வகிக்கக் கண்டிப்பான நிதியியல் ஒழுக்கத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற கடன்களைத் தவிருங்கள், திட்டமிடுதல் இல்லாமல் விலையுயர்ந்த பொருட்களுக்காகச் செலவு செய்யாதீர்கள். உங்கள் நிதி சார்ந்த குறிக்கோள்களைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள்.

தொழில் சார்ந்த செலவுகள்

தொழில் சார்ந்த செலவுகள்

உங்கள் தொழில் சார்ந்த செலவுகளைத் தனிப்பட்ட செலவுகளிலிருந்து தனியாக வையுங்கள், அது உங்கள் நிதிகளை எளிதாகக் கையாள உதவும்.

 முக்கியமானது

முக்கியமானது

திட்டமிடுதல் ஒவ்வொரு நபருக்கும் முக்கியமானது. அதிலும் நிலையற்ற வருமானம் கொண்ட நபருக்கு மிக மிக முக்கியமானது. எனவே நிலையற்ற வருமானம் இருந்த போதிலும் நிதி சார்ந்து ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து ஒரு தரமான வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Smart and Easy way manage your finances if your income is erratic

Smart and Easy way manage your finances if your income is erratic
Story first published: Friday, December 15, 2017, 13:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X