16வயதில் உங்கள் குழந்தை கோடீஸ்வரனாக ஆக வேண்டுமென்றால் இதைச் செய்யுங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போது தந்தை பிள்ளைகளைத் தான் வாழும் வாழ்வு நிலையின் அடுத்தத் தரத்திற்குக் கொண்டு செல்லவே விரும்புவார்கள், இதன் காரணமாகவே தற்போது நடுத்தரக் குடும்பங்களில் மேல்தட்டத்தில் அதிகமானோர் உள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் படித்துவிட்டு வெளியூர்களில் பல முக்கியப் பணிகளைச் செய்து தங்கள் வாழ்வாதாரத்தையும் வாழ்வியலையும் தொடர்ந்து மேம்படுத்தும் கடமையில் உள்ளனர்.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு உதவும் வகையில் தங்களது குழந்தையை 16வயதில் கோடீஸ்வரானாகவோ அல்லது மல்ட்டி மில்லியனராகவோ உருவாக்கச் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளை இப்போது பார்க்கப்போகிறோம்.

கனவு..

கனவு..

16வயதில் கோடீஸ்வரானாவது என்பது சற்று வித்தியாசமாக இருந்தாலும், இன்று உலகில் பலர் தொழில்நுட்ப உலகில் வர்த்தகச் சந்தையில் 15 வயதிலேயே ஒரு நிறுவனத்தைக் கட்டியாளும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். இதனைப் பலரும் கவனித்திருக்கக் கூட வாய்ப்புகள் உண்டு.

கனவு காண்பதில் ஏன் அளவீடு வைக்க வேண்டும். கலாம் கூறுவதைப் போலப் பெரிய கனவைக் காண்போம்.

 

மொழிகள்

மொழிகள்

இன்றைய வாழ்வு முறைக்கு மொழிகள் மிகவும் அவசியமாக உள்ளது, ஒவ்வொரு இடத்திலும், ஊரிலும் மொழியின் ஆதிக்கம் மிகவும் அதிகம். மேலும் வர்த்தகம் செய்பவர்களுக்குத் தாய் மொழியில் பேசும்போது வெற்றிவாய்ப்பு சற்று அதிகம். இதைத் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்யும் சேட்கள், மார்வாடிகளிடம் பார்க்கலாம்.

இதன் மூலம் குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே எவ்வளவு மொழி கற்றுக் கொடுக்கிறோம் அவர்களது வெற்றியும் அவ்வளவும் அதிகம். இன்றைய நவீனமயமான உலகில் ஆங்கிலம், மேன்டரின், ஸ்பானீஷ் மற்றும் ஹிந்தி ஆகியவை அவசியமாக உள்ளது.

 

கோடிங்
 

கோடிங்

தற்போது நாம் உபயோகிக்கும் அனைத்தும் பொருட்களும் ஏதோ ஒரு வழியில் கம்பியூட்டர் மற்றும் பிரோகிராமிங் ஆகிவற்றை மையமாக வைத்து இயங்கும் நிலையில், கோடிங் திறனை கண்டிப்பாகக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஆனால் அந்தத் திறன் இன்று அதிநவீன மயமானதாகவும், எதிர்காலத்தில் அதிகத் தேவை கொண்ட ஒரு தொழில்நுட்பமாக இருக்க வேண்டும். உதாரணமாக மெஷின் லேர்னிங்.

 

கணக்கியல்

கணக்கியல்

கோடீஸ்வரனாக வேண்டும் என்றால் முதலில் ஒரு நிறுவனத்தைக் கட்டியாளும் திறனும், பணத்தைக் கையாளும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். எனவே குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே அடிப்படை அக்கவுண்டிங் திறன்களைப் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.

 வரலாறு..

வரலாறு..

கடந்து வந்த பாதை எப்போதும் நமக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுப்பது மட்டும் அல்லாமல் மனதில் கண்டிப்பாக ஒரு உத்வேகம் உருவாகும்.

இந்த வகையில் குழந்தைகள் படிக்கும் திறன் வந்த உடன் அவர்களுக்கு வெற்றிபெற்ற மனிதர்களின் வரலாறு கதைகளை (autobiographies) படிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மல்டி மில்லியனர் ஆகும் கனவு உடன் நாம் இருக்கும் நிலையில், வெற்றிபெற்ற தொழிலதிபர்களின் கதைகளைப் படிப்பது சிறந்தது.

உதாரணமாக ஸ்டீவ் ஜாப்ஸ், திருபாய் அம்பானி, வாரன் பபெட், லேரி எலிசன், எலான் மஸ்க், நாராயணமூர்த்தி, ஆகியோரின் autobiographyகள் உங்களுக்குச் சிறந்த தேர்வாக அமையும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What should learn to become a multi millionaire at 16?

What should learn to become a multi millionaire at 16?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X