நீண்ட கால மூலதன ஆதாய வரி என்றால் என்ன? முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் 2018-2019-ஐ தாக்கல் செய்த அருண் ஜேட்லி நீண்ட கால மூலதன ஆதாயங்கள் மீது வரியினை விதித்ததை அடுத்து பங்கு சந்தை மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இதனைச் சமன் செய்ய மத்திய அரசு முயன்றும் தொடர்ந்து முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்று வருகின்றனர்.

 

எனவே நீண்ட கால மூலதன ஆதாய வரி என்றால் என்ன? மற்றும் இதனால் முதலீட்டாளர்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்று இந்தக் கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

நீண்ட கால மூலதன ஆதாய வரி என்றால் என்ன?

நீண்ட கால மூலதன ஆதாய வரி என்றால் என்ன?

ரியல் எஸ்டேட், பங்கு சந்தை அல்லது பங்கு சந்தை சார்ந்த முதலீட்டுகள் மூலமாக வரும் லாபத்திற்கு வரி விதிப்பதே நீண்ட கால மூலதன ஆதாய வரியாகும். இது ஒவ்வொரு முதலீடுகளுக்கு ஏற்றாவறு மாறும்.

ஏன் நீண்ட கால மூலதன ஆதாய வரி மீது இவ்வளவு விமர்சனம்?

ஏன் நீண்ட கால மூலதன ஆதாய வரி மீது இவ்வளவு விமர்சனம்?

2004-2005 நிதி ஆண்டுகளில் நீக்கப்பட்ட நீண்ட கால மூலதன ஆதாய வரியானது 2018 பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மீண்டும் அறிமுகம் செய்துள்ளார். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள் என்று கடந்த சில ஆண்டுகளாகத் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ததை அடுத்துப் பல மடங்கு முதலீடுகள் குவிந்துள்ளன. இதனைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் ஓர் அளவிற்கு லாபம் பெற்று வரும் நிலையில் ஒரு வருடத்திற்கு மேல் ஒரு பங்கை வைத்திருந்து அதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என்றால் அதன் மீது வரும் வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் இதற்கு முன்பு இதற்கு வரி கிடையாது. இதனால் பங்குகளை அதிகளவில் விற்றுவிட்டு வெளியேறி வருவதாலும் பங்கு சந்தைக் குறியீடுகள் அதிகளவில் சரிந்துள்ளதாலும் அதிகம் இது குறித்து விமர்சித்து வருகின்றனர்.

நீண்ட கால மூலதன ஆதாய வரியில் ‘கிராண்ட்ஃபாதரிங்’ என்றால் என்ன?
 

நீண்ட கால மூலதன ஆதாய வரியில் ‘கிராண்ட்ஃபாதரிங்’ என்றால் என்ன?

புதிய வரி முறை அறிமுகம் செய்ததற்கு முன்பு செய்யப்பட்டுள்ள முதலீடுகள் மற்றும் அதன் மீது பெற்றுள்ள லாபம் உள்ளிட்டவை மீதான விலக்கு தான் கிராண்ட்ஃபாதரிங் (grandfathering) என்று அழைக்கப்படுகிறது. மத்திய அரசு புதிய வரியினை அறிமுகம் செய்த போது 2018 ஜனவரி 31 வரையில் செய்த முதலீடுகள் மற்றும் லாபத்திற்கு வரி இல்லை என்றும் அறிவித்துள்ளது. அதனால் 2018 ஜனவரி 31 வரையிலான முதலீடுகள் மற்றும் லாபத்திற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியும் (LTCG) கிடையாது.

சரி, யாரெல்லாம் நீண்ட கால மூலதன ஆதாய வரியின் கீழ் வருவார்கள்?

சரி, யாரெல்லாம் நீண்ட கால மூலதன ஆதாய வரியின் கீழ் வருவார்கள்?

2018 மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு புக் செய்யப்படும் லாபத்திற்கு எல்லாம் நீண்ட கால மூலதன ஆதாய வரியினைச் செலுத்த வேண்டும். எனவே மார்ச் 31 வரை விற்கப்படும் பங்குகளுக்கு வரி இல்லை. ஆனால் இந்தப் பங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் நீங்கள் முதலீட்டைத் தொடர்ந்து இருக்க வேண்டும். இதுவே 2018 ஏப்ரல் 1 முதல் நீங்கள் விற்கும் அனைத்துப் பங்குகளின் லாபத்திற்கும் நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சட்டம் பொருந்தும்.

மேலும் நீண்ட கால மூலதன ஆதாய வரியானது ஆண்டுக்கு 1 லட்சத்தினைக் கடந்து செல்லும் போதே வசூலிக்கப்படும். ஒரு வருடத்திற்கு 1,50,000 ரூபாய் லாபத்தினை நீங்கள் பெற்று இருந்தால் 50,000 ரூபாய்க்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியினைச் செலுத்த வேண்டும்.

ஜனவரி 31 வரை நீண்ட கால மூலதன ஆதாய வரி எப்படிக் கணக்கிடப்படுகிறது?

ஜனவரி 31 வரை நீண்ட கால மூலதன ஆதாய வரி எப்படிக் கணக்கிடப்படுகிறது?

தற்போது நிர்வகித்து வரும் ஒரு பங்கை ஏப்ரல் 1க்கு பிறகு விற்கும் போது ஜனவரி 31-ம் தேதி முடிவு விலை எவ்வளவு இருந்ததோ அல்லது எது அதிகமோ அது தான் கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். உதாரணத்திற்கு 2017 ஜனவரி 15 நீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தால் 2018 ஜனவரி 31-ம் தேதி அதன் விலை 200 என்று வைத்துக்கொள்ளுங்கள். மார்ச் 1க்கு பிறகு அந்தப் பங்கை விற்கும் போது ஜனவரி 31 வரை எது அதிக விலையோ அதன் லாபம் தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வகை 1:

வகை 1:

பங்கு வாங்கிய தேதி, மற்றும் விலை: 2017 ஜனவரி 25, ரூ. 100

2018 ஜனவரி 31-ன் இறுதி விலை: ரூ. 200

2018 ஏப்ரல் 1 தேதியின் விலை: ரூ. 250

நீண்ட கால மூலதன ஆதாயம்: ரூ. 50

வரி: ரூ. 5

 வகை 2:

வகை 2:

பங்கு வாங்கிய தேதி, மற்றும் விலை: 2017 ஜனவரி 25, ரூ. 100

2018 ஜனவரி 31-ன் இறுதி விலை: ரூ. 50

2018 ஏப்ரல் 1 தேதியின் விலை: ரூ. 150

நீண்ட கால மூலதன ஆதாயம்: ரூ. 50

வரி: ரூ. 5

வகை 3:

வகை 3:

பங்கு வாங்கிய தேதி, மற்றும் விலை: 2017 ஜனவரி 25, ரூ. 200

2018 ஜனவரி 31-ன் இறுதி விலை: ரூ. 100

2018 ஏப்ரல் 1 தேதியின் விலை: ரூ. 200

நீண்ட கால மூலதன ஆதாயம்: ரூ. 0

வரி: ரூ. 0

வகை 4:

வகை 4:

பங்கு வாங்கிய தேதி, மற்றும் விலை: 2017 ஜனவரி 25, ரூ. 100

2018 ஜனவரி 31-ன் இறுதி விலை: ரூ. 200

2018 ஏப்ரல் 1 தேதியின் விலை: ரூ. 150

நீண்ட கால மூலதன ஆதாயம்: ரூ. 0

நட்டம்: ரூ.50

வகை 5:

வகை 5:

பங்கு வாங்கிய தேதி, மற்றும் விலை: 2017 ஜனவரி 25, ரூ. 200

2018 ஜனவரி 31-ன் இறுதி விலை: ரூ. 100

2018 ஏப்ரல் 1 தேதியின் விலை: ரூ. 50

நீண்ட கால மூலதன ஆதாயம்: ரூ. 0

நட்டம்: ரூ.150

வகை 6:

வகை 6:

பங்கு வாங்கிய தேதி, மற்றும் விலை: 2017 ஜனவரி 25, ரூ. 200

2018 ஜனவரி 31-ன் இறுதி விலை: ரூ. 200

2018 ஏப்ரல் 1 தேதியின் விலை: ரூ. 150

நீண்ட கால மூலதன ஆதாயம்: ரூ. 0

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is long term capital gains tax and grandfathering in LTCG?

What is long term capital gains tax and grandfathering in LTCG?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X