இ-வாலெட்டுடன் கேஒய்சி இணைப்பது எப்படி..? இ-வாலெட்டை முறையாகப் பயன்படுத்துவது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழைய 500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நம்மைப் பாடாய் படுத்தி விட்டது. கையில் பணம் இல்லாத நேரத்தில் பெரும் உதவியாய் இருந்தது இந்த இ-வாலெட். இதன் இன்று பெரும்பாலான மக்கள் இ-வாலெட்டை பயன் படுத்துகின்றனர்.

 

எடுத்துக்காட்டாக அனைத்து வகை ரீசார்ஜ், திரைப்படங்கள் புக் செய்வது, உணவகங்கள் எனத் தினசரி செலவுகளை ஸ்மார்ட்போனை கொண்டே முடித்து விடுகின்றனர், இதன் மூலம் சில்லறை பிரச்சினை இல்லை, பணத்தைக் கையில் கொண்டு செல்ல வேண்டியதில்லை, எளிதான பணப்பரிமாற்றம், நேரம் மிச்சம் என நண்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அவ்வாறான பலன்களை அளிக்கும் இ-வாலெட்டுடன் உங்களது கேஒய்சி (நோ யுவர் கஸ்டமர், தமிழில்-உங்களது வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்) அடையாளத்தை இணைக்க ஆர்பிஐ கட்டாயமாக்கி இருந்தது.

இந்நிலையில் இதனை எவ்வாறு செய்வது என்பதைப் பார்க்கலாம்?

முதலில் இ-வாலெட்டுடன் கேஒய்சிஐ ஏன் இணைக்க வேண்டும் எனத் தெரிந்து கொள்ளுங்கள்?

முதலில் இ-வாலெட்டுடன் கேஒய்சிஐ ஏன் இணைக்க வேண்டும் எனத் தெரிந்து கொள்ளுங்கள்?

உங்களது கேஒய்சி ஆவணத்தை இ-வாலெட்டுடன் இணைப்பதன் மூலம் உங்களது பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க முடியும் அதனால் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளைத் தடுக்க முடியும். சரியாக வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பது உண்மை.

 பணப் பரிமாற்றத்திற்கான அனுமதி

பணப் பரிமாற்றத்திற்கான அனுமதி

கடந்த வருடம்(2017) டிசம்பர் மாதம் ஆர்பிஐ வெளியிட்ட செய்தி குறிப்பில் அனைத்து இ-வாலெட் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களின் கணக்குகளைக் கேஒய்சியுடன் இணைப்பதை உறுதி செய்யவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட காலத்திற்குள் இ-வாலெட்டுடன் இணைக்காவிடில் உங்களின் இ-வாலெட்டின் பணப் பரிமாற்றத்திற்கு அனுமதி மறுக்கப்படும்.

இ-வாலெட் கணக்குகளைத் தொடர்ந்து உபயோகப்படுத்துதல்
 

இ-வாலெட் கணக்குகளைத் தொடர்ந்து உபயோகப்படுத்துதல்

நீங்கள் ஏற்கனவே உங்களது கேஒய்சி அடையாளத்தை இ-வாலெட் கணக்குடன் இணைந்திருந்தால் எந்த வித தடங்கலும் இன்றி இ-வாலெட் கணக்கை தொடர்ந்து உபயோகப்படுத்தலாம்.

முதன் முதலாக இ-வாலெட் கணக்கை தொடங்கும் வாடிக்கையாளர் முதலில் குறைந்த பட்ச தேவையான அலைபேசி எண்னை இணைத்து அதனைச் சரிபார்ப்பதன் (ஒரு முறை கடவுச்சொல்) மூலம் தொடங்கலாம். சிறிது காலத்திற்குப் பின்பு எதாவது ஒரு கேஒய்சி அடையாளத்தை (எடுத்துக்காட்டாக ஆதார் அல்லது பாண் எண்) இ-வாலெட் கணக்குடன் இணைப்பதன் மூலம் எந்த வித தடங்கலும் இன்றித் தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். நீங்கள் உங்கள் கேஒய்சி அடையாளத்தை இ-வாலெட் கணக்குடன் இணைக்கும் வரை பணப் பரிமாற்றத்தின் உச்ச வரம்பு குறைவாக இருக்கும் அல்லது ஒரு சில அம்சங்கள் உபயோகப்படுத்த இயலாது என்பதை நினைவில் கொள்ளவும்.

 

கேஒய்சி அடையாளத்தை இ-வாலெட் கணக்குடன் இணைக்கும் வழி முறைகள்

கேஒய்சி அடையாளத்தை இ-வாலெட் கணக்குடன் இணைக்கும் வழி முறைகள்

பொதுவாக எல்லா நிறுவனங்களும் கீழ் கண்ட வழி முறைகளைப் பின்பற்றுகின்றன ஒன்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் நுழைந்து அதில் கூறப்பட்ட செய்முறைகளைப் பின்பற்றி இணைக்கலாம். இரண்டாவது நிறுவனத்தின் ஆப்ஸ் மூலமாக, மூன்றாவது அங்கீரிக்கப்பட்ட மையத்திற்கு (விற்பனைக்கூடம்) சென்று இணைப்பது அல்லது குறுந்தகவல் மூலமாக என எதாவது ஒன்றைப் பின் பற்றலாம்.

கிடைக்கும் நன்மைகள்: கேஒய்சி அடையாளத்தை இ-வாலெட் கணக்குடன் இணைப்பதன் மூலம் இணைப்புச் சலுகைகள், அதிகரிக்கப்பட்ட பணப் பரிமாற்றத்தின் உச்ச வரம்பு மற்றும் அதிகப்படியான கேஷ் பேக் எனப் பல நன்மைகள் கிடைக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Use Ewallets And Complete KYC Process?

How To Use Ewallets And Complete KYC Process?
Story first published: Wednesday, March 28, 2018, 16:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X