வரிவிலக்கு பெற 4 அசத்தலான முதலீடுகள்.. நிச்சயம் படிக்க வேண்டிய ஒன்று..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரிவிலக்கிற்கான முதலீடுகளைத் திட்டமிடும் போது, நீண்ட கால வருமானத்தை அறுவடை செய்யும் விதமாகச் சிறந்த திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

வருமானவரி செலுத்தும் ஒவ்வொருவருக்கும், நல்ல நீண்டகால வருமானத்தைத் தரும் முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வது மிகவும் சவாலான ஒன்று. வரியைச் சேமிக்கப் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இருந்த போதிலும் , சிறந்த நிதி திட்டமிடல் என்பது கடன் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் கலந்த கலவை தான். ஏனெனில், இவற்றில் வரியைச் சேமிப்பது மட்டுமின்றிப் பொருளாதான ரீதியிலும் பலனடையலாம்.

வருமான வரி சட்ட விபரங்கள்

வருமான வரி சட்ட விபரங்கள்

வரி திட்டமிடலின் போது, வருமானவரி சட்டம் 1961, பிரிவு 80C ன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு வரிவிலக்குக் கோரலாம். பொது வருங்கால வைப்பு நிதி, ஆயுள் காப்பீடு திட்டச் சந்தா, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, பங்குகளுடன் இணைந்த பரஸ்பர நிதி சேமிப்புத் திட்டம் (equity linked saving scheme of mutual funds),அலகுகளுடன் இணைந்த காப்பீடு திட்டம் (unit linked insurance plan) போன்ற முதலீட்டுத் திட்டங்களும் இதில் அடக்கம்.

அலகுகளுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் (Unit-linked insurance plans - ULIP)
 

அலகுகளுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் (Unit-linked insurance plans - ULIP)

இணைந்த ஆயுள் காப்பீடு திட்டங்கள், ஆயுள் காப்பீட்டுடன் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்யும் சிறப்பு வசதியையும் கொண்டுள்ளன. இந்த வருட பட்ஜெட்டில், பங்குச்சந்தை மற்றும் பரஸ்பரநிதி திட்டங்களின் நீண்டகால மூலதன வருவாய்க்கு வரி என அறிவித்த பின்பு ULIP வரிச்சலுகைக்கான சிறந்த முதலீட்டுத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதில் இருந்து வருமானம் முற்றிலும் வரியில்லாதது. பொருளாதார ரீதியில், காப்பீடு சீரமைப்பு நிறுவனம் பல மாற்றங்களைச் செய்து, இத்திட்டத்தை முற்றிலும் வெளிப்படையான மற்றும் முதலீட்டாளர்களுக்குப் பலனளிக்கக்கூடியதாக மாற்றியுள்ளது.

ஐந்து வருடத்திற்கான இந்தத் திட்டத்தில், முதலில் கடன்சந்தையுடன் இணைந்த ULIP ஐ தேர்வு செய்து, பின்னர்ச் சந்தை முன்னேற்றம் அடைந்து அதிக வருமானம் தரும் போது பங்குகளுடன் இணைந்த திட்டத்திற்கு மாறலாம். ULIP திட்டத்திற்கான கட்டணங்கள் முதலீட்டாளர்களின் நிகர முதலீடுகளைக் குறைக்கும். ULIP மற்றும் பரஸ்பர நிதி இரண்டும் நீண்ட கால முதலீடாக இருந்தாலும், பரஸ்பர நிதியில் வேறு சில சலுகைகளும் உள்ளன. பரஸ்பர நிதி முதலீட்டில், 1 வருடத்திற்குள் திரும்பப் பெறவேண்டும் என்றால் 15% குறுகியகால முதலீட்டு வருவாயை அளித்துத் திரும்பப் பெறலாம். 1 வருடத்திற்குப் பின்பு என்றால், 10% நீண்டகால முதலீட்டு வருவாயை அளித்துத் திரும்பப் பெறலாம்.(பட்ஜெட்டி அறிவிப்பின்படி ஏப்ரல் 1 முதல் அமலுக்குவருகிறது.) ஆனால், ULIP -ல், முதலீட்டாளர் 5 வருடங்கள் கண்டிப்பாகத் திரும்பப் பெறமுடியாது.

 

பங்குகளுடன் இணைந்த சேமிப்புத் திட்டங்கள் (Equity-linked savings scheme - ELSS)

பங்குகளுடன் இணைந்த சேமிப்புத் திட்டங்கள் (Equity-linked savings scheme - ELSS)

அதிக வருமானம்,வரிச்சலுகைகளைக் கொண்ட ELSS முதலீடு , சிறந்த பயனுள்ள வரி மேலாண்மைக்கு வழிவகுக்கின்றது. பங்குகளுடன் இணைந்த முதலீடான இதில், வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. ஏனெனில் இவை பங்குச்சந்தை வருமானத்தைப் பிரதிபலிப்பவை. இது மிகவும் வெளிப்படையானது. ஆகவே, எப்போது வேண்டுமானாலும் இதில் பணத்தை முதலீடு செய்யலாம். 3 வருடத்திற்கான திட்டம் என்பதால், மற்ற வரிச் சேமிப்பு திட்டங்களான பொது வருங்கால வைப்புநிதி, தேசிய சேமிப்பு பத்திர திட்டம், 5 வருட வங்கி வைப்பு நிதியைக் காட்டிலும் இத்திட்டம் சிறந்தது.

திட்டமிட்ட முதலீட்டுத் திட்டத்தை (Systematic investment plan - SIP)

திட்டமிட்ட முதலீட்டுத் திட்டத்தை (Systematic investment plan - SIP)

இத்திட்டத்தைத் தேர்வு செய்வதன் மூலம் முதலீட்டு அபாயத்தைக் குறைக்கலாம். ELSS திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ500 ஐ கூட முதலீடு செய்யலாம். ஆனால் மற்றவற்றில் குறைந்தபட்ச தொகை ரூ5000. SIP திட்டத்தில் மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை 15 வருடத்திற்கு முதலீடு செய்யலாம்.

தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme)

தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme)

இது ஓய்வூதியம் வழங்கும் மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டமாகும். ரூ50000 கூடுதல் வரிச்சலுகை வழங்கும் இத்திட்டம், 2004ல் அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, 2009 ல் தனியார் துறைக்கும் விரிவுபடுத்தப்பட்ட பின்னர்ச் சந்தாதார்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதில் தனியார் துறை ஊழியர்களுக்கு 3 வித ஆயுள் முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. தீவிர ஆயுள் திட்டத்தில் 75% வரை முதலீடு செய்யலாம். மிதமான ஆயுள் திட்டத்தில் 50%, குறைந்த ஆயுள் திட்டத்தில் 25% வரையும் முதலீடு செய்யலாம்.

வருங்கால வைப்புநிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) நடப்பு பங்கு முதலீட்டை 75% லிருந்து 50%ஆக மாற்றியுள்ளது. மேலும், நடப்பு நிதியில், முதலீட்டாளரே 50% வரை பங்கு முதலீட்டை முடிவு செய்யலாம். ஆனால் இந்தத் திட்டத்தில் உள்ள ஒரே குறை, முதிர்வு காலத்திற்குப் பின் வழங்கப்படும் தொகைக்கு 20% வரி உண்டு என்பதே. மேலும் ஆண்டுசந்தாவிற்கும் வரி உண்டு.

பொது மற்றும் தொழிலாளர்வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், முதலீடு, திரட்டுதல், திரும்பப் பெறுதல் என 3 படிநிலைகளிலும் வரிவிலக்கு உண்டு. NPS முதல் அடுக்கு திட்ட சந்தாதார்கள், 10வருடத்திற்குப் பிறகு 25% திரும்பப் பெறலாம்.

 

பொது வருங்கால வைப்பு நிதி ( Public Provident Fund)

பொது வருங்கால வைப்பு நிதி ( Public Provident Fund)

சிறந்த வரிச்சலுகை தரும் இந்தப் பிரபலமான திட்டத்தில், வட்டி விகிதமானது முதலீட்டுப் பத்திரங்களுடன் தொடர்புடையது. கடந்த வருடத்தில், 10வருட அரசு முதலீட்டுப் பத்திரங்கள் ஈட்டிய வருமானத்தின் 25 புள்ளிகளின் அடிப்படையில், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 அன்று வட்டிவிகிதம் முடிவு செய்யப்படும். தற்போது ஆண்டுக்குக் கூட்டுவட்டியாக 7.6%தரப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ500 முதல் ரூ1.5 லட்சம் வரை 12 தவணையாகவோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ முதலீடு செய்யலாம். ஒவ்வோரு ஆண்டுத் தவணைக்கும் வரிபிடித்தம் செய்யப்படும். ஆனால் இதன் மூலம் வரும் வருமானத்திற்கு வரிவிலக்கு உண்டு மற்றும் திரும்பப்பெறும் முதலீட்டுக்கும் வரிச்சலுகை உண்டு. இந்தத் திட்டமானது, குழந்தைகளின் படிப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கான பிரபலமான சிறு சேமிப்புத் திட்டமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 4 smart tax saving investments

Top 4 smart tax saving investments
Story first published: Thursday, March 8, 2018, 19:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X