பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க சிறந்த 5 வழிகள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் கண்ணிருந்தும் குருடனாய், பணமிருந்தும் ஏழையாய், போன்ற பல பழமொழிகளை கேட்டிருக்கலாம். இந்த பழமொழிகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமெனில், சமீப கால நிகழ்வுகளை சிறிது எண்ணிப் பாருங்கள். உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் இருக்கின்றது.

 

ஆனால் அதை உங்களால் எடுத்து உங்களுடைய தேவையை சமாளிக்க இயலவில்லை. என்ன இப்பொழுது மேலே கூறிய பழமொழிக்கான அர்த்தம் நன்கு புரிந்து விட்டதா. இத்தகைய சூழலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும். இதற்கு ஏதேனும் மாற்று வழி உள்ளதா? இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

1. டெபிட் அல்லது கிரெடிட் கார்டு:

1. டெபிட் அல்லது கிரெடிட் கார்டு:

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் டிஜிட்டல் வழி பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது. மக்களில் பலர் ப்ளாஸ்டிக் கரன்சிகளான டெபிட் அல்லது கிரெடிட் கார்ட்டைஅதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். உங்களுடைய அட்டையின் பண வரம்பைப் பொறுத்து, இத்தகைய சூழலில், நீங்கள் ப்ளாஸ்டிக் அட்டைகளைப் பயன்படுத்தலாம். மேலும் இதில் கண்ணுக்குத் தெரியாத ஒரு முக்கியமான அனுகூலம் இருக்கின்றது. இத்தகைய ப்ளாஸ்டிக் அட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தணைக்கு விதிக்கப்படும் MDR பரிவர்த்தனை கட்டணங்களும் தற்பொழுது வலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

2. ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் வசதி:
 

2. ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் வசதி:

இத்தகைய வசதிகளைப் பயன்படுத்தி உங்களுடைய மாதாந்திர கட்டணங்களைச் செலுத்தலாம். மேலும் ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங்கில், NEFT, RTGS, IMPS போன்ற பல்வேறு பணப் பறிமாற்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதிகளைப் பயன்படுத்தும் பயனாளர், அவர் மேற்கொள்ளும் பரிவர்த்தணைத் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். இது சேவையைப் பொருத்து மாறுபடும்.

NEFT வசதியை ஒரு நாளின் 24 மணி நேரமும் பயன்படுத்த இயலாது. அதே நேரத்தில் RTGS ஐ எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதியில் பணப் பரிமாற்றமானது நிகழ்நேர அடிப்படையில் நடை பெறுகின்றது. இந்த வசதியைப் பயன்படுத்தி குறைந்தபட்சமாக ரூ 2 லட்சம் முதல் அடுத்தவருடைய வங்கிக் கணக்கிற்கு செலுத்தலாம்.

இத்தகைய சேவைகளுக்கு சேவை மற்றும் பிற வரிக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. தற்போது 18 சதவீத GST வரி அனைத்து வங்கி பரிவர்த்தணைகளுக்கும் விதிக்கப்படுகின்றது.

IMPS என்பது ஒரு நிகழ்நேர பணப் பரிவர்த்தணை சேவையாகும். இந்த சேவையில் அதிகபட்சமாக ரூ 2 லட்சம் வரைஅனுப்பலாம். இந்த சேவையை வருடத்தின் 365 நாட்களும், ஒரு நாளின் 24 மணி நேரமும் பயன்படுத்தலாம்.

 

USSD

USSD

Unstructured Supplement Service Data சுருக்கமாக USSD என அழைக்கப்படும் இந்த சேவையை இணையதள வசதியில்லாமல் பயன்படுத்தலாம். உங்களுடைய தொலைபேசி இணைப்பு வாயிலாக பணப் பரிவர்த்தணைகளை மிக எளிதாக முடித்துக் கொள்ளலாம். எனினும் உங்களுடைய தொலைபேசி இணைப்பு வழங்குநர், இந்த சேவைக்கு கட்டணம் வசூலிப்பார். இந்த சேவைக்கு மிகக் குறைந்த அளவாக ஒவ்வொரு பரிவர்த்தணைக்கும் 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

இந்த சேவையைப் பயன்படுத்தி உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம், உங்களுடைய வங்கிக் கணக்கிற்கான சிறிய தகவல் அறிக்கை மற்றும் உங்களூடைய வங்கிக் கணக்கில் உள்ள தற்போதைய இருப்பு போன்ற விபரங்களைப் பெறலாம்.

எனினும், இந்த சேவையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, நீங்கள் உங்களுடைய வங்கியில் USSD மொபைல் பேங்கிங் சேவையைப் பதிவு செய்ய வேண்டும். உங்களுடைய மொபைல் எண்ணை உங்களுடைய வங்கிக் கணக்குடன இணைக்க வேண்டும்.

4. ப்ரீபெய்டு அட்டைகள் மற்றும் பேமெண்ட் வாலட்:

4. ப்ரீபெய்டு அட்டைகள் மற்றும் பேமெண்ட் வாலட்:

இந்தியாவில் பணம் செலுத்துதல் போன்ற பணப்பரிமாற்றங்களைக் கையாளுவதற்கு உங்களுடைய வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் (KYC) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பணத்தட்டுப்பாடு சூழலில், இது எதுவும் வாடிக்கையாளரை இத்தகைய ப்ரீபெய்டு அட்டைகள் மற்றும் பேமெண்ட் வாலட்டை உபயோகிப்பதை தடுக்கவில்லை. மிக அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் இத்தகைய சேவையை பயன்படுத்துகின்றனர். உண்மையில், தற்பொழுது நிழவும் பணத்தட்டுபாட்டான சூழலை, இத்தகைய சேவையை வழங்கும் நிறுவனங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன.

இத்தகைய பேமெண்ட் வாலட்டில் இருந்து, தங்களுடைய வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பொதுவாக இது பரிமாற்றுத் தொகையில் சுமார் 2 சதவீதமாக வசூலிக்கப்படுகின்றது.

 

5. UPI:

5. UPI:

NPCI இன் ஆதரவு பெற்ற ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) என அழைக்கப்படும் இத ஒரு நல்ல நிதி பரிமாற்ற நுட்பமாகக் கருதப்படுகின்றது. இந்த முறையில் பணம் அனுப்புநர் மற்றும் அதைப் பெறுபவர் ஆகிய இருவரும் UPI Id ஐ வைத்திருக்க வேண்டும். வங்கி விவரங்கள் இல்லாமல் நிதிப்பரிமாற்றத்திற்கு இந்த VPA பயன்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Better Options To Manage Cash Crunch Situation

5 Better Options To Manage Cash Crunch Situation - Tamil Goodreturns | பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க சிறந்த 5 வழிகள் - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Saturday, April 28, 2018, 14:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X