ஐபிஎல் போட்டியில் இதை மிஸ் பண்ணிடா..? ரொம்ப பீல் பண்ணுவீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்க்கையை ஒரு விளையாட்டைப் போல் அணுகி அதிலிருந்து பல்வேறு அனுபவங்களைக் கற்றுக் கொள்வது ஒரு விதம் எனில், விளையாட்டில் இருந்து வாழ்க்கைக்கான அனுபவத்தைப் பெறுவது மற்றொரு வகை.

 

இதில் இரண்டாவது வகை மிகவும் சுவாரஸ்யமானது. ஏனெனில் விளையாட்டு என்பது நம்முடைய மகிழ்ச்சிக்காகச் செய்வது. அந்த மகிழ்ச்சியான தருணங்களில் இருந்து வாழ்க்கைக்கான அனுபவத்தைப் பெறும் பொழுது, அந்த அனுபவம் ஒரு இனிய நிகழ்வாகவே நம்முடைய வாழ்நாள் முழுவதும் பயணப்படுகின்றது.

உதாரணமாக

உதாரணமாக

தற்பொழுது நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே நடைபெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் இருந்து வாழ்க்கைக்கான பாடத்தைப் படிக்க இயலுமா? கண்டிப்பாக இயலும்.

நாங்கள் இங்கே உங்களுக்கு உதவும் பொருட்டு, உங்களுடைய நிதி வாழ்க்கைக்கான வழிமுறைகள் மற்றும் பாடங்களை இந்த ஐபில் போட்டிகளில் இருந்து தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

 T20 கிரிக்கெட் போட்டி

T20 கிரிக்கெட் போட்டி

இந்த T20 கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு விதிகள் மற்றும் ஒழுக்கங்களுக்கு உட்பட்டு விளையாடும் ஒரு விளையாட்டாக இருக்கின்றது. எனினும் இந்த விளையாட்டுகளின் இறுதி குறிக்கோள் என்பது வெற்றி மட்டுமே.

அதே போன்று உங்களுடைய நிதி வாழ்க்கையையும் பல்வேறு விதிமுறைகள் மற்றும் ஒழுக்க முறைகளுக்கு உட்பட்டுக் கட்டமையுங்கள். அதன் மூலம் உங்களுடைய இறுதியான நிதி இலக்கை அடைய முயற்சி செய்திடுங்கள்.

 விதிமுறைகள் மற்றும் ஒழுக்க முறைகள்
 

விதிமுறைகள் மற்றும் ஒழுக்க முறைகள்

அது என்ன விதிமுறைகள் மற்றும் ஒழுக்க முறைகள் என யோசிக்கின்றீர்களா? இதை ஒரு உதாரணம் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இந்தக் கிரிக்கெட்டில் பவர்ப்ளே என்று ஒன்று உண்டு.

அந்த நேரத்தில் 30 அடி வட்டத்திற்கு வெளியே இரண்டு பீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்தப் பவர்ப்ளே என்பது ஆட்டத்தின் ஆரம்ப ஓவர்களில் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பேட்டிங் செய்யும் அணி வீரர்கள் அதிக ரன்களைக் குவிக்கப் பார்ப்பார்கள்.

ஏனெனில் பவர்ப்ளே ஓவர்களில் ரன் எடுப்பது எளிது. பவர்ப்ளே ஓவர்களில் அதிக ரன் சேர்த்தால் வெற்றி எளிதாக வசப்படும். இதை உங்களுடைய வாழ்வுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

 பவர்ப்ளே ஓவர்

பவர்ப்ளே ஓவர்

உங்களுடைய இளம் வயதில் சோம்பேறித்தனம் இல்லாமல் அதிகம் சம்பாதிக்க இயலும். உங்களுடைய சம்பாத்தியத்தில் இருந்து அதிகம் செலவு செய்யாமல் சுமார் 10 முதல் 30 சதவீதம் வரை மிக எளிதாகச் சேமிக்க இயலும். இவ்வாறு அதிகமாகச் சேமித்தால், உங்களுடைய பிற்கால வாழ்வு மிகச் சுகமானதாக இருக்கும். என்ன ஐபில் போட்டிகள் உங்களுடைய நிதி வாழ்வுடன் எவ்வாறு பொருந்திப் போகின்றது என்பதை உணர்ந்து கொண்டீர்களா?

இதேப் போன்று நாங்கள் உங்களுக்கு உதவும் நோக்கில் 10 முதலீட்டு திட்டமிடல் குறிப்புகளை இங்கே வழங்கியுள்ளோம்.

அதிகமாக ஆசைப்படுங்கள்

அதிகமாக ஆசைப்படுங்கள்

ஐபில் கிரிக்கெட்டில் ஆரம்ப ஓவர்களில் ரன் எடுப்பது மிகவும் எளிது. அவ்வாறு ஆரம்ப ஓவர்களில் அதிக ரன் குவித்தால் அது அந்த ஆட்டம் முழுவதும் தொடர்ந்து, இறுதியில் இமாலய ஸ்கோராக மாறி விடும்.

இதைப் போன்று உங்களுடைய வாழ்வின் ஆரம்பக் கட்டங்களில் அதிகமாக முதலீடு செய்தால், அந்தப் பழக்கம் உங்களுடைய வாழ்வின் இறுதி வரை தொடர்ந்து வரும். அதோடு, உங்களிடம் மிகப் பெரிய சேமிப்பும் இருக்கும். எனவே அதிகச் சேமிப்பை உருவாக்க ஆசைப்பட்டால், உங்களுடைய வாழ்வின் ஆரம்பக் கட்டங்களில் இருந்து அதிகமாக முதலீடு செய்யப் பழகுங்கள். நிதி வாழ்வைப் பொருத்த வரை அதிகச் சேமிப்புக்கு ஆசைப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை.

களத்தை நன்கு ஆராய்ந்திடுங்கள்

களத்தை நன்கு ஆராய்ந்திடுங்கள்

ஒரு அணி மற்றும் அதனுடைய கேப்டன் டாஸ்க்குச் செல்லும் முன் பிட்ச் மற்றும் வெளிவட்டத்தைப் பற்றி நன்கு ஆராய்வது மிகவும் முக்கியம். ஏனெனில் அதைப் பொருத்தே அந்த அணி டாஸ் வென்றால் பேட்டிங் அல்லது பவுலிங்கை தேர்ந்தெடுக்கலாமா என்பதை முடிவு செய்ய இயலும். ஆடுகளத்தின் தன்னைக்கேற்ப அந்த அணி உத்தியை வகுக்க வேண்டும்.

இதைப் போன்றே முதலீடு செய்வதற்கு முன்னர், முதலீட்டாளர்கள் சந்தையின் சூழ்நிலையை நன்கு ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் சந்தையின் போக்கைப் பொறுத்தே பங்குகளை வாங்குவதா அல்லது விற்பதா என்பதைத் தீர்மானிக்க இயலும். அதே நேரத்தில் சந்தையின் போக்குகளுக்குத் தகுந்த படி எந்தப் பங்குகளை வாங்குவது அல்லது எந்தப் பங்குகளை விற்பது என்பதைத் தீர்மானிக்க இயலும். ஒரு வேளை சந்தையின் போக்கு மிகவும் மோசமாக இருக்குமானால், பங்குகளைத் தவிர்த்து, பிற துறைகளில் உங்களுடைய முதலீடுகளைத் திருப்பி விடலாம். இவை அனைத்தையும் தீர்மானிக்கச் சந்தையின் போக்கை நன்கு ஆய்வு செய்வது மிகவும் அவசியம்.

பலதுறை முதலீடுகள்

பலதுறை முதலீடுகள்

கிரிக்கெட்டி ஒரு அணியின் ஸ்கோர் ஒரே ஒரு வீரரை மட்டுமே சார்ந்திருப்பது அந்த அணிக்கு நல்லதல்ல. அந்த அணியில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த அணியின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும். இதைப் போன்றே உங்களுடைய முதலீட்டின் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் வருவாய், ஒரே ஒரு முதலீட்டை மட்டுமே சார்ந்திருப்பது உங்களுடைய நிதி வாழ்க்கைக்கு நல்லதல்ல.

உங்களுடைய வருவாய் என்பது பல்வேறு துறைகளில் இருந்து கிடைக்க வேண்டும். அதற்கு நீங்கள் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய வேண்டும். அதாவது உங்களுடைய முதலீடு என்பது பல்வேறு துறைகளில் பரந்து விரிந்து இருக்க வேண்டும்.

கவனத்தைச் சிதற விடக்கூடாது

கவனத்தைச் சிதற விடக்கூடாது

கிரிக்கெட்டில் ஒரு அணி கஷ்டமான சூழ்நிலையை எதிர் கொள்ளும் போது, அந்த அணி வீரர்கள் துவண்டு விடாமல், கடுமையாக அந்தச் சூழலை எதிர்த்துப் போராடுவார்கள். அவர்களுடைய போராட்டம் இறுதி வரை தொடரும்.

இதேபோல், சந்தையின் ஏற்றத்தாழ்வு, சந்தையில் நிகழும் திருத்தம் மற்றும் உங்களுடைய முதலீட்டிற்கும் அதனுடைய தற்போதைய மதிப்பிற்கும் இடையே உள்ள ஏற்ற இறக்கம் ஆகிய கடினமான சூழலை நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்த போதிலும் துவண்டு விடாமல், நீங்கள் விரும்பிய நிதி இலக்கை அடைவதில் உங்களுடைய கவனம் மற்றும் முழு ஆற்றலைச் செலுத்த வேண்டும்.

மூலோபாயக் கால இடைவெளியைப் பயன்படுத்துங்கள்

மூலோபாயக் கால இடைவெளியைப் பயன்படுத்துங்கள்

ஒவ்வொரு ஐபில் ஆட்டத்திலும் சீரான இடைவெளியில், மூலோபாய இடைவெளி விடப்படுகின்றது. இந்த இடைவெளியில் அணிகள் தங்களுடைய மூலோபாயத்தைப் பற்றிச் சிந்திக்கின்றார்கள். அடுத்து வரும் ஓவர்களில் தங்களுடைய அணி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முடிவெடுத்து அதைச் செயல்படுத்த முயற்சிக்கின்றார்கள்.

அதேபோல், உங்களுடைய நிதி வாழ்க்கையில் திட்டமிடுவதற்காகச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் முதலீட்டு வல்லுநர்களிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள். வருங்கால முதலீடு பற்றிய முடிவுகளை எடுத்திடுஙக்ள். நீங்கள் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்த முயற்சி செய்திடுங்கள்.

ஆபத்துக்கேற்ற வெகுமதி

ஆபத்துக்கேற்ற வெகுமதி

கிரிக்கெட்டில் நான்கு மற்றும் ஆறு ரன்களை அடிக்க அதிக அபாயங்களை எதிர் கொள்ள வேண்டும். நான்கும் மற்றும் ஆறு ரன்களை அடிக்கும் பொழுது அவுட்டாகும் வாய்ப்பு அதிகம். இருப்பினும் அந்த அபாயங்களை எதிர்கொள்ளும் பொழுது மட்டுமே அதிக ரன்கள் கிடைக்கும்.

இதேபோல், உங்கள் பணத்தை முதலீடு செய்யும் போது அதில் கணிசமான அளவைப் பங்குகளில் முதலீடு செய்திடுங்கள். பங்குச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. எனினும் அதிலிருந்து கிடைக்கும் வருவாயும் மிக அதிகம். எனவே பங்குச் சந்தை முதலீடு என்பது உங்களுடைய நிதி இலக்குகளை மிக எளிதாக அடைய உங்களுக்கு உதவும்.

நிதிக் கலவை

நிதிக் கலவை

ஒரு நன்கு வரையறுக்கப்பட்ட கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மென், பந்து வீச்சாளர்கள் மற்றும் விக்கெட் கீப்பர் ஆகிய அனைவரும் உள்ளனர். இதேபோல், உங்கள் போர்ட்ஃபோலியோவை நீங்கள் கட்டமைக்க வேண்டும். உங்கள் போர்ட்ஃபோலியோவில் பங்கு, கடன் மற்றும் தங்க முதலீடுகள் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் என முதலீட்டு வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஏனென்றால் எந்தத் துறை முதலீடு எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படும் என்பதை யாராலும் கணிக்க இயலாது. எனவே உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் இவை அனைத்தும் சரியான விகிதத்தில் இருக்கும் பொழுது, சந்தை வீழ்ச்சியடைந்தாலும், நீங்கள் ஒரு கணிசமான வருவாயைப் பெற இயலும். எனவே முதலீட்டில் கலப்படம் மிகவும் நல்லது.

இரைச்சலைப் புறக்கணியுங்கள்

இரைச்சலைப் புறக்கணியுங்கள்

பெரும்பாலான நேரம் பார்வையாளர்கள், வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கச் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கின்றனர். எனினும், இது உண்மையில் வீரர்களின் மீது அழுத்தத்தை உருவாக்குகின்றது. இத்தகைய சூழ்நிலையில், நல்ல கிரிக்கெட் வீரர்கள் கூடத் தங்களுடைய கவனத்தை இழக்கக் கூடும். அவர்களின் இலக்கில் அவர்களுடைய கவனம் செல்லாது. எனவே ஒரு நல்ல வீரர் ரசிகர்களின் கூச்சலுக்குச் செவிமெடுக்க மாட்டார்.

அதேபோல, ஒரு முதலீட்டாளராகிய நீங்கள் குறுகியகாலச் சந்தை உயர்வு மற்றும் சந்தை வீழ்ச்சியால் பீதியடையக் கூடாது. நீங்கள் சந்தையில் நிலவும் சத்தத்தைப் புறக்கணித்து, உங்களுடைய நீண்ட கால நிதி இலக்கை அடைவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

உங்களுடைய இலக்காகிய நபரை அடையாளம் காணவும்

உங்களுடைய இலக்காகிய நபரை அடையாளம் காணவும்

நீங்கள் ஒரு பந்து வீச்சாளர் அல்லது ஒரு பேட்ஸ்மேனாக இருக்கலாம். நீங்கள் ஏதுவாக இருந்தாலும் உங்களுடைய எதிர் யார் என்பதை அடையாளம் கண்டு அவர்களுடைய அடுத்த உத்தி என்னவாக இருக்கும் என்பதைக் கணிக்க வேண்டும். அவ்வாறு கணிக்கத் தவறினால், உங்களுக்குத் தோல்வியே மிஞ்சும்.

இதேபோல், உங்கள் பணத்தை முதலீடு செய்யும் போது, உங்களுடைய நிதியைக் கையாளும் நிதி மேலாளரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் நிதி மேலாளர் உங்களுடைய போர்ட்போலியோவை உருவாக்குகின்றார். இதன் மூலம் போர்ட்ஃபோலியோ மூலோபாயத்தை நீங்கள் நன்கு அடையாளம் காணலாம். மேலும், மூலோபாயமானது உங்களுடைய பணத்தைப் பல துறைகளில் முதலீடு செய்ய உங்களுக்கு உதவப் போகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உதவுகிறது.

செயல்திறன் ஆராய்ச்சி

செயல்திறன் ஆராய்ச்சி

ஐபிஎல் என்பது சூப்பர் ஸ்டார்களின் ஆட்டம். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல், ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு சில போட்டிகளில் சொதப்பினால், அவர் வெளியே உட்கார வைக்கப்படுவார். அவருக்குப் பதில் வேறொரு வீரர் களம் காணுவார். இது அனைத்து சூப்பர் ஸ்டார்களுக்கும் பொருந்தும்.

இதேபோல் உங்களுடைய முதலீட்டில் ஒரு துறை தொடந்து உங்களுக்கு நஷ்டத்தையே தந்து கொண்டிருந்தால், அதை வெளியே கடாசி விட்டு வேறொரு துறையில் உங்களுடைய முதலீட்டைத் திசை திருப்புங்கள். இது வருமானத்தை அதிகரிக்க உதவும்.

வாழ்க்கை சுவாரஸ்யமானது

வாழ்க்கை சுவாரஸ்யமானது

வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு மைதானம் போன்றது எனத் தத்துவ ஞானிகள் தெரிவிக்கின்றனர். எனவே நம்முடைய வாழ்வை மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர். வாழ்க்கை என்னும் விளையாட்டில் வெற்றி பெற்ற ஒருவர், தன் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கின்றார்.

ஏனெனில் இந்த வாழ்வு மிகவும் சுவாரஸ்யமானது. ஒவ்வொரு நிமிடத்தின் உள்ளேயும ஒரு ஆச்சர்யம் மறைந்துள்ளது. இந்த ஆச்சர்யத்தை அனுபவமாக மாற்றுபவர்களே வெற்றிக் கோப்பையைக் கைப்பற்ற இயலும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IPL 2018 teaching you great financial lessons: Dont Ever miss it

IPL 2018 teaching you great financial lessons: Dont Ever miss it
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X