இதைச் செய்தால் வீட்டுக் கடனுக்கான ஈ.எம்.ஐ செலுத்துவது ரொம்ப ஈசி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுக்கடன் வாங்குவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. உங்கள் கனவு வீட்டை நனவாக்க, சேமிப்பை கரைக்காமல் நன்கு திட்டமிட்டு எடுத்துவைக்கும் சரியான அடி.

ஆனால் இதில் வட்டி கட்டுதல் என்னும் பெரிய சுமையை எப்படிச் சரியாகக் கையாண்டு குறைப்பது என்னும் மிக முக்கியமான விஷயத்தைப் பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ஈ.எம்.ஐ - யை திட்டமிடுதல்

ஈ.எம்.ஐ - யை திட்டமிடுதல்

சம்பளம் வரும் தினமாகப் பார்த்து உங்கள் ஈ.எம்.ஐ (மாதாந்திர தவணைத்தொகை) யை செலுத்துவதற்குத் திட்டமிடுங்கள். வீட்டு வாடகை போன்ற பிற நிரந்தர வருமானங்கள் வருகிறது என்றால், அந்தப் பணம் வரும் நாட்களாகப் பார்த்து உங்கள் ஈ.எம்.ஐ செலுத்தும் தேதியை நிர்ணயிக்கலாம்.

இவற்றை நன்கு திட்டமிடாவிட்டால், பணம் செலுத்தும் தேதியில் பணம் இல்லாமல் அவதிப்பட நேரிடும். மேலும் குறைப்பட்ச பணத்தை அவர்களாகவே எடுத்துக்கொள்வர். இது உங்கள் கிரிடிட் ஸ்கோரை கணக்கிடும் போது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரம் சரியான நேரத்தில் பணம் செலுத்துவது கிரிடிட் மதிப்பை உயர்த்தும்.

 

அதிகப்படியான ஈ.எம்.ஐ-யை செலுத்துவது

அதிகப்படியான ஈ.எம்.ஐ-யை செலுத்துவது

நீங்கள் செலுத்தும் தவணைத்தொகையை அதிகரிப்பதன் மூலம், தவணை காலத்தில் சில மாதம்/ஆண்டுகள் குறைக்கலாம். அதற்கேற்றாற் போல் உங்களுக்கு அதிக வருமானம் வரும் வகையில் பங்குகள் அல்லது இதர முதலீடுகளை மேம்படுத்துங்கள்.

மேலும் கடனில் ஒரு பகுதியை உங்களால் இயலும் போது செலுத்தலாம். உதாரணமாக, போனஸ் அல்லது பாலிசி முதிர்வின் மூலம் அதிகப் பணம் கிடைக்கும் போது கடனை முன்கூட்டியே அடைக்கலாம். இதுவும் உங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தைக் குறைக்கும்.

 

 முதலீடுகளைச் சரியாக மேலாண்மை செய்தல்

முதலீடுகளைச் சரியாக மேலாண்மை செய்தல்

கடனைத் திருப்பிச் செலுத்தும் விதமாக உங்களுக்கு நிரந்தரமான பண வருவாய்த் தேவைப்படும்.

உங்களின் சம்பளம் நிரந்தர வருவாயாக இருந்தாலும், அதை மட்டுமே நம்பியிருக்காமல் மற்ற வழிகளில் வருமானம் பெறுவதன் மூலம் கடன்/வட்டியை எளிதில் அடைக்கலாம். கூடுதல் வழியில் வருமானம் என்பது ஈ.எம்.ஐயை மட்டும் அடைப்பதற்கு உதவாமல், கடனைப் பகுதியாக அடைக்க உதவி செய்து சுமையைக் குறைக்கும்.

 

 வங்கியை மாற்றுதல்

வங்கியை மாற்றுதல்

கடன் வழங்கும் வங்கிகள், வட்டி விகிதத்தை மாற்றும் கால அளவை வேறுபடுத்திக் காட்ட வெவ்வேறு காலத்தில் வட்டிவிகிதத்தைக் குறைப்பர். வட்டி விகிதம் குறைவாக இருப்பதாகத் தோன்றினால், வேறு வங்கிக்குக் கடனை மாற்றிக்கொள்ளலாம். 'பேலன்ஸ் டிரான்ஸ்வர் ஸ்கீம்' மூலம் வாடிக்கையாளர் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்குச் செலுத்தப்படாத வீட்டுக்கடனுடன் மாற்றிக்கொள்ளலாம்.

ஆனாலும், குறைந்த வட்டி விகிதத்திற்காக அடிக்கடி மாற்றம் செய்யாதீர்கள். ஏனெனில், இப்படி மாற்றம் செய்வதற்குக் கடன் பெறும் அனைத்து வழிமுறைகளையும் மீண்டும் பின்பற்ற வேண்டும். இதற்காகக் குறிப்பிட்ட அளவு கட்டணமும் வசூலிக்கப்படலாம்.

பல்வேறு வங்கிகள் அறிவிக்கும் புதிய திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைத் தொடர்ந்து கவனிக்கவேண்டும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Smart Ways to Manage your EMI on Home Loans

Smart Ways to Manage your EMI on Home Loans
Story first published: Wednesday, April 18, 2018, 18:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X