எஸ்பிஐ வங்கியின் 5 வகையான கடன் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கி சேவையினைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குப் பல வகையான நிதி சிக்கல்களுக்கு உதவும் வகையில் வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன், சொத்து கடன், கல்விக் கடன் பொன்றவை முக்கியமானவை அவை. இந்தத் திட்டங்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் bank.sbi என்ற இணையத்தில் இருந்து எடுத்து உங்களுக்காகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் வழங்குகிறது.

 

வீட்டு கடன்

வீட்டு கடன்

எஸ்பிஐ-ன் ஹவுசிங் லோன் திட்டத்தின் கீழ் சொந்தமாக வீட்டை வாங்க, பழைய வீட்டை சீரமைக்க மற்றும் ஏற்கனவே உள்ள வீடு மீது கடன் பெற முடியும் என்று எஸ்பிஐ வங்கி குறிப்பிட்டுள்ளது. எஸ்பிஐ வீட்டு கடன் திட்டம் மூலமாகக் கடன் பெறும் போது 8.35 முதல் 8.50 சதவீதம் வரை கடன் பெறலாம். எஸ்பிஐ வீட்டுக் கடனில் சாதரான வீட்டு கடன், பேலான்ஸ் டிரான்ச்ஃபர் ஹோம் லோன், என்ஆர்ஐ ஹோம் லோம் ஆகியவை இதில் உள்ள உட்பிரிவுகள் ஆகும்.

கல்வி கடன்

கல்வி கடன்

எஸ்பிஐ வங்கி மாணவர் கடன், ஸ்காலர் லோன் மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கான கடன் போன்றவற்றையும் அளிக்கிறது. ஸ்காலர் கடன் என்பது ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, எயிம்ஸ் போன்ற பிரீமியம் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாகும். கல்வி கடனானது 20 லட்சம் ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்தியாவில் உயர் கல்வி படிக்க 10 லட்சம் ரூபாயும், வெளிநாட்டில் படிக்க 20 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் அளிக்கப்படுகிறது.

வாகன கடன்
 

வாகன கடன்

வாகன கடன் கீழ் புதிய கார் வாங்குபவர்களுக்குக் கடன் அளிக்கப்படுகிறது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ் அனைத்து பயண வாகனங்கள், மல்டி யூடிலிட்டி வாகனங்கள் எஸ்யூவி என அனைத்து கார்களுக்குக் கடன் பெற முடியும். ஒவர் டிராப்ட் வசதியும் பெற முடியும்.

சொத்துக்கள் மீதான கடன்

சொத்துக்கள் மீதான கடன்

தனிநபர்கள் சொத்துக்கள் மீது எஸ்பிஐ வங்கி கடன் அளிக்கிறது. வாடிக்கையாளர்களுக்குப் பணதட்டுப்பாடு உள்ள நிலையில் சொத்துக்களை அடைமானமாக வைத்துக் கொண்டு எஸ்பிஐ வங்கி பணம் அளித்து வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்கிறது. குறைந்த வட்டியில் எளிமையாகவும் கடனை திருப்பி அளித்துச் சொத்துக்களை மீட்க முடியும். குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் முதல் 7.5 கோடி ரூபாய் வரை சொத்துக்கடனை தனிநபர்கள் எபிஐ வங்கி மூலமாகப் பெற முடியும்.

தனிநபர் கடன்

தனிநபர் கடன்

கடன் தேவைப்படும் போது எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் தனிநபர் கடனை எஸ்பிஐ வங்கி அளிக்கிறது. மாத வருவாயில் 12 மடங்கு வரை தனிநபர் கடனாக எஸ்பிஐ வங்கி அளிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Types of Loans for Individual Persons in SBI

Types of Loans for Individual Persons in SBI
Story first published: Monday, April 30, 2018, 17:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X