நாளைய முதலாளிகள் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கான அலுவலக இடத்தைத் தேர்வு செய்யத் துவங்கும் முன்னரே, என்னென்ன தேவை என்பதையும் அவை இல்லாமல் சமாளிக்க முடியுமா என்பதையும் பட்டியலிடுவது நல்லது.

உங்கள் தொழிலுக்கு எந்த மாதிரியான இடம் தேவைப்படும் என்பதை முதலிலேயே முடிவு செய்துவிட்டு வர்த்தக இடங்களைச் சென்று பார்வையிடுவதன் மூலம் நேர விரயத்தைத் தவிர்க்கலாம். இதன் மூலம் தொழிலுக்குச் சரியான இடத்தைக் குறிவைத்துத் தேடலாம்.

உங்கள் அலுவலக இடத்தைத் தேர்வு செய்யும் போது கீழ்க்கண்ட முக்கிய விசயங்களைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

மத்திய தொழில் மாவட்டம் vs புறநகர்

மத்திய தொழில் மாவட்டம் vs புறநகர்

நகர்ப்புறங்களில் தொழில் துவங்குவது என்பது ஸ்டார்ட்அப்களுக்கு நிறைய நன்மைகளைத் தரக்கூடியது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கும் நிலையில், மத்திய தொழில் மாவட்டம் போன்ற நகர்ப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து மற்றும் சிறப்பான பணியாளர்கள் கிடைப்பது மிகவும் எளிது. மேலும் மத்திய தொழில் மாவட்டம் போன்ற பகுதிகளில் அலுவலகம் இருப்பது பணியாளர்கள் எளிதாகவும் விரைவாகவும் பணியாற்ற உதவும்.

புதிய தொழில்

புதிய தொழில்

உங்களுடைய புதிய தொழிலாக இருப்பதால், அதன் வளர்ச்சியை ஊக்குவிக்க ஏராளமான வாடிக்கையாளர்களும், நுகர்வோரும் தேவை. எனவே உங்கள் தொழில் எளிதாக அணுகத்தக்கதாகவும், கண்டிபிடிக்ககூடியதாகவும் இருக்க வேண்டும். மக்கள் வந்து வாங்கிச் செல்லும் தொழிலாக இருந்தால் இது மிகவும் முக்கியம். அலுவலக இடம் நகரின் மையத்தில் ஏற்கனவே பிரபலமான தொழிலங்கள் நடைபெறும் பகுதியாக இருந்தால், கடினமான காலகட்டத்தில் ஏராளமான வாடிக்கையாளர்களைக் கவருவதற்கு உதவும்.

இணைய வழி

இணைய வழி

எப்போதும் நகரின் மையப் பகுதியிலேயே இடம் இருக்கவேண்டும் என்பதில்லை. உங்கள் தொழிலை இணைய வழியில் நடத்துவதாக இருந்தால், உங்கள் தொழிலை வளர்க்க வாடிக்கையாளர்கள் அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டியதில்லை என்றால், புறநகர்ப் பகுதிகளில் கூட அலுவலகத்தை அமைத்துக்கொள்ளலாம்.

 வளர்ச்சிக்கான அறை

வளர்ச்சிக்கான அறை

உங்கள் அலுவலக அறையின் அளவைத் தேர்வுசெய்யும் போது தற்போது உங்களிடம் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை அல்லது வெகுவிரைவில் தேர்வு செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து முடிவெடுக்க வேண்டும்.

ஒரு வேளை உங்களின் நிலையான எண்ணிக்கையில் குழு இருந்து, எடுத்துக்காட்டாக 10 பணியாளர்கள் இருந்து எதிர்காலத்தில் வேறு யாரையும் பணியமர்த்தும் திட்டம் இல்லையென்றால் சிறிய அளவிலான அலுவலக அறையே போதுமானது. கடைசியாகப் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தேவைக்கு அதிகமாக இடவசதி உள்ள இடத்தைத் தேர்வுசெய்தால், காலி இடத்திற்கும் சேர்த்து செலவழிக்க நேரிடும்.

 

கூடுதல் பணியாளர்கள்

கூடுதல் பணியாளர்கள்

உடனடியாகக் கூடுதல் பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டால், அதிக எண்ணிக்கையில் பணியாளர்களைக் கையாளும் வண்ணம் அதற்கேற்றவாறு இடத்தைத் தேடலாம். இடத்தைப் பொறுத்தவரை, உங்களின் தேவைகள் மற்றும் வசதிகளைப் பூர்த்திச் செய்யவேண்டும்.

தொடக்கத்தில் சராசரியான வசதிகள் இருந்தால் போதும் என நினைத்தால், அந்த வசதிகளை மற்ற தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். பிறகு தேவைக்கு ஏற்றவாறு உங்கள் சொந்த அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்து நிதிநிலைக்குத் தக்கவாறு வசதிகளை அளிக்கலாம்.

 

உத்வேகம் மற்றும் தொடர்புகள்

உத்வேகம் மற்றும் தொடர்புகள்

முதல் முதலில் தொழில் துவங்கும் போது, மற்ற தொழிலதிபர்களுடன் பழகும் போது தொழிலில் ஆர்வமும் உத்வேகமும் கூடும். வர்த்தகம் நடக்கும் இடத்தில் இருக்கும் போது உங்கள் துறையின் தொழில்முனைவோர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கருத்துக்களைப் பகிரலாம் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். தொழில்நுட்பத் துறையில் நீங்கள் இருந்தால், தொழில்நுட்ப மையங்களான புதுடெல்லி, மும்பை, ஹைதராபாத் அல்லது இந்தியாவின் சிலிக்கான்வேலியான பெங்களூரு போன்ற இடங்களில் அலுவலகத்தை அமைக்கலாம். உலகம் முழுக உள்ள வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வகையில், வர்த்தகக் கண்காட்சிகள், தொழில் மாநாடுகள் நடைபெறும் இடங்களில் அலுவலகம் அமைத்தால் வர்த்தகத் தொடர்புகளுக்குச் சாதகமாக இருக்கும்.

உற்பத்தித் திறன்

உற்பத்தித் திறன்

நடப்பு நிகழ்வுகள் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அலுவலக இடத்தைத் தேட வேண்டும். சிறப்பான பணியிடத்தை உங்கள் பணியாளர்களுக்கு அமைத்துத் தருவதன் மூலம் அவர்களின் மகிழ்ச்சியும் உற்பத்தித்திறனும் அதிகரிக்கட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Important Factors When Choosing Your Office Location

Important Factors When Choosing Your Office Location
Story first published: Monday, May 21, 2018, 18:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X