வீட்டுச்செலவில் 30%க்கு மேல் சேமிக்க 15 தந்திரங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணம்! பணம்! பணம்! இந்த மூன்றெழுத்து மந்திர சொல்லுக்கு உலகமே கட்டுப்பட்டுக் கிடக்கிறது. மக்கள் பணத்தின் பின்னால் அனைத்தையும் மறந்து ஓடிக்கொண்டுள்ளனர். பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உயிர் வாழ்வதற்கு அதுவும் மிகவும் அவசியமாயிற்றே.

 

பணம் சம்பாதிப்பது முக்கியம் என்றால் அதைச் சேமிப்பது அதை விட முக்கியம். குறைந்த வருமானம் அல்லது கட்டுக்கடங்கா செலவுகள் அல்லது செலவுகளை மேலாண்மை செய்யத் தெரியாதது போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், கண்டிப்பாக இதைப் படியுங்கள். பணத்தைச் சேமிக்க 15 தந்திரங்கள்

 கடித உறையைப் பயன்படுத்துதல்

கடித உறையைப் பயன்படுத்துதல்

வீட்டுத்தேவைக்கான செலவுகளில் இந்தத் தந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான பணத்தைச் சேமிக்க முடியும். ஒரு மாதத்தின் வெவ்வேறு வித செலவுகளுக்கு வெவ்வேறு கடித உறைகளைப் பயன்படுத்தவேண்டும்.

எடுத்துக்காட்டாக, பணத்தைச் சேமிப்பதில் பிரச்சனை ஏற்படும் வகைகளைத் தேர்வு செய்த வேண்டும். ஒவ்வொரு வகைக்கும் தேவையான குறைந்தபட்ச பணத்தைத் தனித்தனி கடித உறைகளில் வைக்க வேண்டும். இம்முறையைக் கண்டிப்புடன் பின்பற்றி வந்தால், கண்டிப்பாகப் பணத்தைச் சேமிக்க முடியும். இதை நீங்கள் உண்டியலிலும் சேமிக்கலாம்.

கேஷ்பேக் கிரெடிட் அட்டையைப் பயன்படுத்துதல்

கேஷ்பேக் கிரெடிட் அட்டையைப் பயன்படுத்துதல்

சந்தையில் கிடைக்கும் பல்வேறு கேஷ்பேக் கிரெடிட் அட்டைகள் மூலம் உணவகங்கள், திரையரங்குகள், பெட்ரோல் பாங்க், காய்கறிகடைகளில் பல்வேறு கேஷ்பேக் சலுகைகளைப் பெறமுடியும். கிரெடிட் அட்டை செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றால் இந்த முறை சிறந்தது.

எ.கா: ஸ்டேன்டேர்டு சார்ட்டேட் மான்ஹேட்டன் பிளாட்டினம் கிரெடிட் அட்டையைப் பயன்படுத்திக் காய்கறி வாங்கினால் 5% கேஷ்பேக் என வைத்துக்கொள்வோம்.

நடப்புச் செலவு -ரூ5000

பயன்படுத்திய முறை - கேஷ்பேக் கிரெடிட் அட்டை

சேமித்த பணம்- மாதம் ரூ250

போக்குவரத்துச் செலவுகள்
 

போக்குவரத்துச் செலவுகள்

நம்மில் பெரும்பாலானோர் இருசக்கர/நான்கு சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதால், அதற்கேற்றாற் போல் அதிகமாகச் செலவழிப்பது போக்குவரத்திற்குத் தான். அதிலும் இராக்கெட் போல உயரும் பெட்ரோல் டீசல் விலைதான் அனைவரும் கவலைப்படும் ஒரே விசயம். எனவே இந்த வகைச் செலவில் தான் அதிகம் சேமிக்க முடியும். இதில் பணத்தைச் சேமிக்கப் பொதுப் போக்குவரத்து அல்லது கார்களைப் பகிர்தல் முறையில் பயணம் செய்யலாம். அதிலும் குறிப்பாகக் கார்களைப் பகிரும் முறையில் அதிகமாகப் பணத்தைச் சேமிக்க முடியும்.

எ.கா:

தற்போதைய செலவு- ரூ2300

சேமித்த பணம்- மாதம் ரூ1200

 மொபைல் கட்டணம்

மொபைல் கட்டணம்

நீங்கள் போஸ்ட்-பெய்டு எண்ணைப் பயன்படுத்தினால் உடனடியாக ப்ரீ பெய்டு எண்ணாக மாற்ற வேண்டும். இதன் மூலம் பல்வேறு மதிப்பு கூட்டு சேவைகளைத் தவிர்ப்பதால் அதிகப் பணத்தைச் சேமிக்க உதவிக்கரமாக இருக்கும். போஸ்ட் பெய்டு திட்டத்தையே தொடர விரும்பினால், உங்களின் தேவைக்கு ஏற்ப மலிவுவிலை திட்டமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டாக, தற்போது வோடாபோனில் 84 நாட்களுக்கு ரூ458 திட்டத்தைப் பயன்படுத்தினால், அதே அளவிலான சேவைகளை அதே 84 நாட்களுக்கு வழங்கும் ஜியோவின் ரூ399 திட்டத்திற்கு மாறலாம்.

 ஆன்லைன் ஷாப்பிங்-க்கு மாறுதல்

ஆன்லைன் ஷாப்பிங்-க்கு மாறுதல்

இணையவழியில் கிடைக்கும் பொருட்கள் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. எனவே கீழே உள்ள டிப்ஸ் மூலம் அதிகப் பணத்தைச் சேமிக்கலாம்.

எந்தவொரு பொருளை வாங்கும் முன்பும் விலையை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். அதற்காகவே உள்ள ப்ரைஸ் தேக்கோ, கூகுள் ஷாப்பிங், மை ஸ்மார்ட் ப்ரைஸ் போன்ற இணையக் கருவிகளைப் பயன்படுத்தலாம். மேலும் கூப்பன்கள் மற்றும் பல்வேறு இணையதளங்கள் குறிப்பிட்ட கிரெடிட்கார்டுகளுக்கு வழங்கும் கேஷ்பேக் சலுகைகளையும் பயன்படுத்தலாம்.

மொபிகுவிக், ப்ரீசார்ஜ், பேயூ, பேடிஎம் போன்ற பேமெண்ட வாலட்களையும் பயன்படுத்தலாம். இவற்றின் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி போன்ற சலுகைகள் தரப்படுகின்றன.

2 வாங்கினால் 1 இலவசம் போன்ற சலுகைகளைத் தவிர்த்துவிடுங்கள்.

நடப்புச் செலவு - ரூ3000

வழிமுறை - ஸ்மார்ட் ஷாப்பிங் டிப்ஸ்

சேமிப்பு - ரூ1250

 விவேகமாக மளிகைப் பொருட்கள் வாங்குதல்

விவேகமாக மளிகைப் பொருட்கள் வாங்குதல்

மளிகைப் பொருட்கள் என்பது தவிர்க்க முடியாத அத்தியாவசியமான ஒன்று. ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்க செல்லும் போதும் பட்டியலிட்டு வாங்குங்கள். இதன் மூலம் தேவையில்லாதவற்றை வாங்குவதைத் தவிர்க்கலாம்.

மெட்ரோ போன்ற மொத்தமாகப் பொருட்கள் விற்கும் கடைகளில் பொருட்களை வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் அனைத்தும் கிடைக்கும். ஆனால் மெட்ரோவில் பொருட்கள் வாங்க மெட்ரோ கார்டு தேவைப்படும். அது தொழிலதிபர்கள் மற்றும் சுயதொழில்புரிபவர்களுக்கு மட்டுமே தரப்படும்.

நடப்புச் செலவு - ரூ5000

வழிமுறை - மெட்ரோ கார்டு

சேமிப்பு - ரூ750

பொழுதுபோக்கு செலவுகளைக் குறைத்தல்

பொழுதுபோக்கு செலவுகளைக் குறைத்தல்

செய்தித்தாள் மற்றும் இதழ்கள் தேவைப்படாவிட்டால் அவற்றை நிறுத்தி விடலாம். செய்திகள் மற்றம் இதழ்களைப் படிக்க இலவச செயலிகளைப் பயன்படுத்தலாம். திரைப்படங்களுக்கு முன்பதிவு செய்யப் புக்மைஷோ அல்லது பேடிஎம் போன்ற இணையதளங்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் கேஸ்பேக் மற்றுய் தள்ளுபடியும் கிடைக்கும். கேபிள் டிவி சந்தாவைக் குறைக்க அல்லது நிறுத்த முயற்சிக்கலாம். அப்படி இல்லையெனில் உங்களுக்குத் தேவையான சேனல்களை மட்டுமே தேர்வுசெய்து கட்டணம் செலுத்தலாம்.

நடப்புச் செலவு - ரூ520

வழிமுறை - நாளிதழுக்கு இலவச செயலி

சேமிப்பு - ரூ520

பயன்பாட்டு செலவுகளைக் குறைத்தல்

பயன்பாட்டு செலவுகளைக் குறைத்தல்

சாதாரண விளக்குகளுக்குப் பதிலாகச் சி.எப்.எல் அல்லது எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் பல்வேறு பயன்பாட்டுக் கட்டணங்களைக் குறைக்க முடியும். மேலும் தேவைப்படாத மின்னணு பொருட்களின் மின் இணைப்பைத் துண்டிக்கலாம் அல்லது அவற்றை நீக்கலாம்.

தற்போதைய செலவு- ரூ2000

வழிமுறை - சி.எல்.எப் விளக்குகள்

சேமிப்பு -ரூ500

உணவு செலவை குறைத்தல்

உணவு செலவை குறைத்தல்

இந்தியாவின் பெரும்பாலான வீட்டுப் பட்ஜெட்டில் பிரச்சனையை ஏற்படுத்தும் பொதுவான ஒன்று உணவு செலவுகள்.

வெளியில் சென்று உணவருந்துவதைக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.வீட்டு சாப்பிடுவதன் மூலம் முக்கியமாக வரி மற்றும் டிப்ஸை சேமிக்கலாம்.

இணையவழியில் உணவை வாங்குவதன் மூலம் கேஷ்பேக் மற்றம் தள்ளுபடி கிடைக்கும். இதற்காக ஜோமேட்டோ அல்லது புட்பாண்டா போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம்.

தேவையில்லா பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்தல்

தேவையில்லா பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்தல்

வெயில் செல்லும் போது தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை வாங்குவதைத் தவிர்க்கவேண்டும். மேலும் பிராண்டேட் பொருட்கள், திரையரங்கில் உணவு மற்றும் பானங்கள், குறுந்தகடுகள், உடற்பயிற்சி உறுப்பினர் அட்டை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

சுகாதாரமற்ற பழக்கங்களைத் தவிர்த்தல்

சுகாதாரமற்ற பழக்கங்களைத் தவிர்த்தல்

புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற சுகாதாரமற்ற பழக்கங்கள் அதிகப் பணத்தைச் செலவழிக்கச் செய்யும். இவற்றைத் தவிர்ப்பது இரு வழிகளில் பலனளிக்கும். ஒன்று செலவுகளைக் குறைக்கும். மற்றொன்று உடல் நலத்தைக் கெடுப்பதால் ஏற்படும் செலவுகள், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் செலவுகளைத் தவிர்க்கலாம்.

செலவழிக்காத நாள்

செலவழிக்காத நாள்

இந்த வழிமுறையில், வாரத்தின் சில நாட்களைச் 'செலவழிக்காத நாள்' எனத் தேர்வு செய்துகொள்ளலாம். அந்த நாட்களில் குறைந்தபட்ச பணம் அல்லது பணமே செலவழிக்காமலும் இருக்கலாம். இதன் சிறந்த வழியின் மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்.

வாரத்திற்குக் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கும் பழக்கம்

வாரத்திற்குக் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கும் பழக்கம்

இந்தக் குறிப்பிட்ட தொகை உங்களின் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு இருக்கலாம். ஒவ்வொரு வாரமும் ரூ100ஐ சேமிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் துவங்கி அதைப் படிப்படியாக ரூ500 வரை கூட அதிகரிக்கலாம்.

இணையச் செலவுகளைக் குறைத்தல்

இணையச் செலவுகளைக் குறைத்தல்

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் இணையச் சேவைக்கு உங்களின் தேவைக்கு ஏற்றவாறு திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அல்லது இதை முற்றிலும் தவிர்த்து மொபைலில் உள்ள இணையச் சேவையை வீட்டிலும் பயன்படுத்தலாம்.

பணத்தைப் பயன்படுத்துதல்

பணத்தைப் பயன்படுத்துதல்

நீங்கள் தொடர்ந்து கிரெடிட் கார்டுகளை அதிகளவில் பயன்படுத்துபவராக இருந்தால், அதை அடியோடு மறந்துவிட்டு அதற்கு மாற்றாகப் பணத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் தேவையற்ற பொருட்களை வாங்குவது தவிர்க்கப்படுவதுடன் , உங்கள் நிதிநிலைமையையும் கட்டுப்படுத்த முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

15 Tricks to Save Money Save 30% more from your Household Expense

15 Tricks to Save Money Save 30% more from your Household Expense
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X