ஓய்வூதியத்திற்காகத் திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய மிகமுக்கியமான ஒன்று இது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சதீஷ்க்கு கிட்டத்தட்ட 60 வயது ஆகிறது. இவ்வளவு காலம் ஓடி ஓடி உழைத்தவர் தன்னுடைய ஒய்வு காலத்தை நிம்மதியாகக் கழிக்க விரும்புகின்றார். அதற்காக அவர் மிகவும் திட்டமிட்டு வருங்கால வைப்பு நிதி, பிபிஎஃப், ஈபிஎஃப் மற்றும் சில பங்குச் சந்தை முதலீடுகள், பரஸ்பர நிதிகள் போன்றவற்றில் விடாமுயற்சியுடன் முதலீடு செய்த காரணத்தால் மூலம் அவர் ஒரு கணிசமான நிதியை உருவாக்கியுள்ளார்.

அவர் சேர்த்தது வைத்துள்ள நிதியை நினைத்து பெருமையுடன் இருக்கின்றார். ஏனெனில் அவருடைய முதலீடுகள் அனைத்தும் மிகப் பெரிய ஆராய்ச்சிக்குப் பிறகு செய்யப்பட்ட முதலீடுகள் ஆகும்.

ஓய்வூதியம்

ஓய்வூதியம்

அவர் தன்னுடைய ஓய்வூதியத்திற்காக மிகவும் திட்டமிட்டு சேமித்து வைத்திருப்பதாக நினைத்தபோது, அவருடைய சில கணக்குகள் அவர் சேமித்துள்ள ஓய்வூதிய நிதி வெறும் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்னும் செய்தி அவருக்கு அதிர்ச்சி அளித்தது.

எங்கே தவறு நடந்தது..?

எங்கே தவறு நடந்தது..?

பல ஆண்டுகளாக மிகவும் திட்டமிட்டு, புத்திசாலித்தனமாகத் தன்னுடைய ஓய்வு காலத்திற்காகக் கடினமாக உழைத்துப் பணத்தைச் சேமித்த பொழுதும் அவருக்கு இறுதியில் அதிர்ச்சியே காத்திருந்தது.

அது அவரை மிகவும் மீளாத் துயரத்தில் தள்ளி விட்டது. அவர் எங்கே தவறிழைத்தார். அவருடைய கணக்குகள் எல்லாம் தவறாக முடியாக் காரணம் என்ன? அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோமா.

 

25 வருடங்கள்

25 வருடங்கள்

25 வருடங்களுக்கு முன்னர்த் திருச் சதீஷ், தன்னுடைய ஓய்வூதியத்திற்காகச் சேமிக்க ஆரம்பித்தபோது, அவரது மாதாந்திர செலவு ரூ 25,000. அவர் தன்னுடைய ஓய்வூதியத்திற்காகத் திட்டமிடும் பொழுது, 20-25 ஆண்டுகள் கழித்துத் தன்னுடைய மாதாந்திர செலவுகள் இரண்டு மடங்காக அதாவது சுமார் 50,000 ரூபாயாக இருக்கும் என நினைத்தார். துரதிருஷ்டவசமாக, அவருடைய தற்போதைய மாதாந்திர செலவுகள் ரூ. 70,000 முதல் 80,000 வரை ஆகின்றது.

 பணவீக்கம்

பணவீக்கம்

திருச் சதிஷ் தன்னுடைய ஆரம்பக் காலத்தில் தன்னுடைய ஓய்வூதியத்திற்காக வழக்கமாகச் சேமிப்பதன் மூலம் அனைத்துக் காரியங்களையும் சரியாகச் செய்தார். எனினும் தனக்குத் தேவையான ஓய்வூதிய நிதியைக் கணக்கிடும் பொழுது 7 முதல் 8 சதவீத பணவீக்க விகிதத்தை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

கணக்கீடு

கணக்கீடு

ஒரு 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒரு மாதத்திற்கு 25,000 ரூபாய்ச் செலவழிக்கின்றார் என வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது ஒரு மாதத்திற்கு, 5% என்ற மிதமான பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அவருடைய ஓய்வு காலச் செலவுகளுக்குக் குறைந்தது ரூ 85,000 (மாதத்திற்கு) தேவைப்படும்.

கட்டாயச் செலவுகள்

கட்டாயச் செலவுகள்

இதில் மருத்துவச் செலவுகள், விடுமுறை பயணங்கள் போன்ற பிற கட்டாயச் செலவுகள் அடங்காது. மேலும், 5% பணவீக்கம் என்பது காலத்திற்கு ஒவ்வாது. பணவீக்க வீதத்தில் 1% அதிகரித்தாலும் மாதத்திற்கு ரூ 1.08 லட்சம் ரூபாய்த் தேவைப்படும்.

ஓய்வூதிய திட்டமிடல்

ஓய்வூதிய திட்டமிடல்

பணவீக்கத்தின் கூட்டு விளைவு கடந்த 25 ஆண்டுகளில் கடுமையான விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. ஓய்வூதிய திட்டமிடல் என்பது ஒரு நீண்ட கால இலக்கு என்பதால், சதீஷ் தன்னுடைய ஓய்வூதியத்தைத் திட்டமிடும் பொழுது மிதமான பணவீக்க வீதத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அவர் அதிக வருவாய் கொடுக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Inflation can eat into your retirement corpus

Inflation can eat into your retirement corpus
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X