பிஃபா உலகக் கோப்பையில் இருந்து பங்கு சந்தை டிரேடிங் குறித்துக் கற்றுக்கொள்ளுங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் கால்பந்து விளையாட்டின் மீது பார்வையாளர்கள் இவ்வளவு பைத்தியமாக இருக்கின்றனர் என்று எப்போதாவது நீங்கள் ஆச்சரியப்பட்டது உண்டா? அதுவும் ஒரு சிறிய இடைவேளையுடன் ஒரு 90நிமிட விளையாட்டு இது. வேண்டுமானால் சில சூழ்நிலைகளில் மற்றொரு 30 நிமிடம் நீளும். அதிலும் 4 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் பிஃபா கோப்பைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. 2014ல் நடந்த இந்த உலகக் கோப்பை விளையாட்டை உலக மக்கள்தொகையில் 25% பேர் பார்த்துள்ளனர். 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்று வரும் நடப்புப் போட்டியில் அந்தச் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. காலங்காலமாகக் கிரிக்கெட்டில் ஆர்வமாக உள்ள இந்தியாவில் கூடக் கால்பந்து விளையாட்டைப் பார்ப்பவர்கள் படிப்படியாக அதிகரிக்கின்றனர்.

கால்பந்து விளையாட்டிற்கும் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வதற்கும் ஆச்சரியமூட்டக்கூடிய சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டிற்கும் ஒரே மாதிரியாகக் குறைந்த கால அளவு, சில கடினமான நிகழ்வுகளில் வெற்றி அல்லது தோல்வி. இரண்டும் நட்சத்திரங்களால் நடத்தப்படுகிறது, கூட்டு முயற்சியைச் சார்ந்துள்ளது போன்ற ஒற்றுமைகளைக் கூறலாம். இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லலாம். ஆனால் இதன் உள்ளர்த்தம் என்னவெனில், கால்பந்து விளையாட்டிற்கான 90 நிமிடங்கள் மற்றும் பங்கு சந்தைக்கான 400 நிமிடங்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமை தான். பிஃபா உலகக் கோப்பையில் இருந்து பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில அட்டகாசமான பாடங்களை இங்கே காணலாம்.

ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்

ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்

விளையாட்டுகளில் சில சமயம் அணிகள் மிக நெருக்கமான வெற்றியைப் பெறுவதை நீங்கள் அடிக்கடி காணமுடியும். அதற்கு ஜெர்மனி மிகச்சரியான உதாரணம். ஏனெனில் அவர்கள் ஒரு குழுவாக ஒவ்வொரு நிமிடமும் 60 நொடிகளின் தொகுப்பு என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர் மற்றும் பந்தை ஒரு முனையில் இருந்து மற்றொன்றுக்கு மாற்ற வெறும் 10 நொடிகளே தேவை. இதே வழிமுறையைத் தான் வர்த்தகத்திலும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வர்த்தகத்திற்கு 400 நிமிடங்கள் உங்களுக்கு உள்ளது மற்றும் அதன் மூலம் லட்சக்கணக்கான வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன. எனவே உங்கள் அட்டவணையைப் படியுங்கள், தரவுகளை ஆராயுங்கள் பின்னர் ஐடியாக்கள் தானாகவே வரும். 30நிமிடங்கள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற போது, உங்களின் 400 நிமிடங்களில் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்துங்கள்.

எப்போதும் சிறப்பாகச் செயல்படுங்கள்

எப்போதும் சிறப்பாகச் செயல்படுங்கள்

ஸ்பெயின்-போர்ச்சுகல் விளையாட்டின் போது ந உங்களுக்கு எப்போதும் மறக்கவே முடியாத ஒன்று, உலகமே வியக்கும் வகையில் சாத்தியமே இல்லாத கோணத்தில் ரொனால்டோ அடித்த 3வது கோல் தான்.ஆனாலும் அந்த ஆட்டம் நடுநிலையாக முடிந்தது. உண்மையில் போர்ச்சுகல் அணியின் தேவைக்கு ஏற்ப தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரொனால்டோ. ஒவ்வொரு வர்த்தகரும் சந்தையில் இதே வழிமுறையைக் கடைபிடிக்க வேண்டும்.சந்தை நிலையாக இருக்கும் போதும், நிலவரம் கணிக்கக் கூடிய வகையில் இருக்கும் போதும், முடிவுகள் உங்களுக்கு எதிராக இருக்கும் போதும் நின்று சிறப்பாகச் செயல்படுங்கள்.

கடினமான காலத்திலும் எதிர்நீச்சல் போடுங்கள்

கடினமான காலத்திலும் எதிர்நீச்சல் போடுங்கள்

ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் பெனால்டியை தவறவிட்டு ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் நிச்சயம் லியோனில் மெஸ்ஸி மனமுடைந்துதான் போயிருப்பார். ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் 3 கோல் அடித்தும் போர்ச்சுகல் ஆட்டத்தைச் சமநிலையில் முடித்ததால் ரெனால்டோ கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பார். ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை போலவே மீண்டு எழுந்து "நாங்கள் தான் எப்போதும் சிறப்பானவர்கள்" எனச் சொல்வதைப் போல நீங்களும் வர்த்தகத்தில் கூறவேண்டும். உங்களுக்கும் வர்த்தகத்தில் கடினமான நாட்கள் வரலாம். எதுவும் மாறப்போவதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொண்டு தூசியைத் தட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டும்.

90 நிமிட விளையாட்டிற்கு 90மணி நேர திட்டமிடல் அவசியம்

90 நிமிட விளையாட்டிற்கு 90மணி நேர திட்டமிடல் அவசியம்

கால்பந்து அணி உடல்வாகு,தந்திரங்களுக்குக் கடினமாகப் பயிற்சி, எதிரணியின் தந்திரங்களை எதிர்கொள்ளுதல், முக்கிய ஆட்டக்காரர்களைக் கண்டறிதல், அவர்களின் பலவீனங்களை அறிதல் மற்றும் மாற்றுத் திட்டத்தை வகுத்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். 90நிமிட விளையாட்டிற்கு 90 மணி நேர திட்டமிடல் என்ற விகிதாசார அடிப்படையில் செயல்பட வேண்டும். பங்கு வர்த்தகத்தில் அதே போலப் பங்குகளைத் தேர்ந்தெடுத்தல், உங்களின் வழிமுறை, தொழில்நுட்ப விசயங்கள், செய்திகள், உள்வரும் மற்றும் வெளியேறும் வழிமுறைகள், ஆபத்தை எதிர்கொள்தல் எனத் தயாராக இருக்க வேண்டும். 400நிமிட வர்த்தகத்திற்குக் கடினமாகத் தயார்செய்தல் அவசியம்.

எப்போதும் உங்கள் பலத்துடன் விளையாடுங்கள்

எப்போதும் உங்கள் பலத்துடன் விளையாடுங்கள்

கால்பந்து விளையாட்டில் பிரேசில் எப்போதாவது எதிர்கொள்ளும் ஆட்டத்தை ஆடி பார்த்ததுண்டா. பீலே, ரொமாரியோ, ரிவால்டோ,பீபிட்டோ, ரொனால்டோ காலத்தில் இருந்து நெய்மர், ஜிசஸ் போன்றவர்களின் நவீன காலம் வரை எப்போதும் தாக்குதல் ஆட்டத்தில் தான் நோக்கம் செலுத்துவர். இது தான் பிரேசில் அணியின் பலம். 2014ல் ஜெர்மனிக்கு எதிரான காலிறுதி போட்டியில் தங்களின் வழிமுறையை மாற்றிப் பேரழிவான முடிவை பெற்றனர். வர்த்தகத்தாலும் இதனை மனதில் வைத்து, உங்களுக்கு ஏற்ற வழிமுறையில் வர்த்தகம் செய்யுங்கள்.பங்குகளைக் கண்டறிதல், ஏற்ற இறக்கங்களைக் கையாளுதல், மூலதனத்தை முடிவு செய்தல் போன்றவற்றில் உங்களின் பலத்தை விட்டு கொடுக்காதீர்கள். நீங்கள் எதில் சிறப்பாக இருக்கிறீர்களோ அதையே உங்களின் முக்கிய வழிமுறையாக மாற்றுங்கள்.

 உங்களைப் புத்துணர்ச்சியாக்க இடைவேளைகளைப் பயன்படுத்துதல்

உங்களைப் புத்துணர்ச்சியாக்க இடைவேளைகளைப் பயன்படுத்துதல்

90நிமிட சர்வதேச விளையாட்டில் ஒரு கால்பந்து வீரர் சராசரியாக 13 முதல் 16 கிலோமீட்டர் ஓடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?. 45 நிமிடத்திற்குப் பிறகு வழங்கப்படும் இடைவேளை அவர்கள் புத்துணர்ச்சி அடைவதற்கும், அடுத்த 45 நிமிடத்தைத் திட்டமிடவும் கிடைப்பது. இதையே வர்த்தகத்தில் கடைப்பிடித்து, எப்போதெல்லாம் இடைவேளை தேவையோ எடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் செயல்பாடுகளைத் திரும்பப் பார்த்து ,அதில் மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் புத்துணர்வுடன் திரும்ப வந்து, வர்த்தகத்தைப் புதிய கண்ணோட்டத்தில் அணுக முடியும்.

தவறுக்கு கொடுக்கும் விலை மிகஅதிகம்

தவறுக்கு கொடுக்கும் விலை மிகஅதிகம்

மிகவும் விலை மதிப்புள்ள தவறுக்கு/ஃபவுலுக்கு உதாரணம், 2006 உலகக் கோப்பையில் மார்கோ மேட்ராசியை ஜிடானே தலையால் இடித்துத் தள்ளிவிட்டது தான். அதனால் பிரான்ஸ் ஜிடானேவை இழந்தது, இத்தாலி உலகக் கோப்பையை வென்றது. கால்பந்தில் நடந்த இந்தத் தவறை போல, வர்த்தகத்தில் செய்தால் அதிக விலை கொடுக்க நேரிடும். நஷ்டத்தைத் தடுக்காதது, உங்கள் நிலையைச் சராசரிபடுத்துதல், தீவிரமாகச் செயல்படுதல் போன்றவை ஜிடானே தலையால் தாக்குவதற்கு இணையானது. வர்த்தகத்தில் இது போன்ற தவறுகளைச் செய்தால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே ரெட் கார்டு வேண்டாம்!!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Share trading lessons from FIFA World Cup

Share trading lessons from FIFA World Cup
Story first published: Monday, June 25, 2018, 11:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X