நீங்கள் இன்சூரன்ஸ் பிலிசிய ஆன்லைனில் ஏன் வாங்க வேண்டும்..? தெரிந்துகொள்ள வேண்டிய 7 காரணங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்சூரன்ஸ் சந்தை வளர்ச்சி அடைய இன்னும் எட்ட முடியாத தூரம் இருக்கிறது. இந்த இடைவேளியயை மாற்றப் பல காப்பீடு நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஆலைனில் விற்பனை செய்வது மட்டும் இல்லாமல் பாலிசி கவரேஜ் குறித்த விவரங்களை அளித்து வருகின்றனர்.

 

இந்தியாவில் ஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிசிகள் வாங்குவது அன்மை காலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் முன்பு இன்சூரன்ஸ் அலுவலகங்கள் அல்லது இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டுடன் அல்லது புரோக்கர்களுடன் நேரம் ஒதுக்கீடு செய்து மட்டுமே பாலிசியை வாங்க முடியும்.

ஆன்லைன் இன்சூரன்ஸ்

ஆன்லைன் இன்சூரன்ஸ்

இன்றைய சூழலில் மருத்துவம், வாகனம், பயணம் அல்லது லைப் இன்சூரன்ஸ் என அனைத்து தயாரிப்புகளும் ஆனலைனிலேயே கிடைக்கிறது.

சாமியனின் வாழ்க்கையை இணையதளம் எளிமையாக்கியுள்ளது. அன்பானவர்களுடன் பேச, ஷாப்பிங் செய்ய, திரைப்பட டிக்கெட் புக் செய்ய அல்லது கான்சர்ட் டிக்கெட் புக் செய்ய, வங்கி கணக்கு திறக்க, காய்கறிகள் வாங்க எனப் பலதரபட்ட சேவைகள் ஆன்லைனில் கிடைக்கின்றன.

இன்சூரன்ஸ் பாலிசிகளை ஆன்லைனில் வாங்கும் போது எளிதாக ஆவணங்கள் ஏதுமில்லாமல், குறைந்த பிரீமிதத்தில் நிறையக் காப்பீட்டுடன் பாலிசிகளைப் பெற முடியும். எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

 முடிவு உங்கள் கையில்

முடிவு உங்கள் கையில்

டிஜிட்டல் உலகத்தில் அனைத்து விவரங்களையும் எளிதாக உங்கள் கை நுனியில் பெற முடியும் அளவிற்கு வசதிகள் வந்துவிட்டன, எனவே எந்தப் பாலிசி வேண்டும் என்பத தேர்வு செய்து அது குறித்து ஆன்லைனில் ஆய்வு செய்து, தேவைப்பட்டால் ஆலோசனைகளையும் பெற்று உங்களுக்கான இன்சூரன்ஸ்பாலிசியை வங்க கூடிய சேவைகள் கிடைக்கின்றன. அவற்றில் இருந்து முடிவு செய்து பாலிசியை எளிதாக வாங்கலாம். ஆனால் முடிவு உங்கள் கைகளில்.

நேரம் சேமிப்பு
 

நேரம் சேமிப்பு

ஆன்லைனில் பாசியை வாங்கும் போது உங்களது பொன்னான நேரத்தினை மிச்சப்படுத்தலாம். கைமுறையாகச் செய்ய வேண்டும் என்றால் நேரம் கூடுதலாகச் செலவு ஆகும். இணையதளத்தில் எளிதாகத் தேடி, ஒப்பிட்டு, விண்ணப்பித்துப் பாலிசியை உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் வாங்கிவிடலாம்.

எளிதாக ஒப்பிடலாம்

எளிதாக ஒப்பிடலாம்

ஆனலைன் அக்ரிகேட்டர் நிறுவனங்கள் பாலிசி வாங்குபவர்களுக்கு வெவேறு நிறுவனங்களின் பல திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்க கூடிய சேவைகளை வழங்கி வருகின்றன. இந்தச் சேவைகளைப் பயன்படுத்தி உங்கள் தேவை விவரங்களை அளித்து அதற்கு ஏற்ற சிறந்த பாலிசிகளைப் பெற முடியும். பாலிசி நன்மைகள், அம்சங்கள், விலக்குகள், உள்ளடக்குதல், பிரீமியம் போன்றவை ஆன்லைன் ஒப்பீட்டில் கிடைக்கும்.

 பேப்பர் ஆவணங்கள் தேவையில்லை

பேப்பர் ஆவணங்கள் தேவையில்லை

பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இணையதளத்தில் எளிதாகப் பாலிசி வாங்கக் கூடிய சேவை வழங்குகின்றன. அதற்கு ஆன்லைனில் படிவத்தினைப் பூர்த்திச் செய்து, வாடிக்கையாளர்கள் ஆவண விவரங்களை அளித்து வழக்கை முறை பற்றிய சில கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பாலிசிக்கான கட்டணத்தினைச் செலுத்தும் நிமிடத்தில் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கிவிட முடியும். அடையாள ஆவணங்கள், புகைப்படம் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும், கொரிய செய்ய வேண்டும் என்றில்லாமல் பேப்பர் ஏதுமில்லாமல் பாலிசியை வாங்கிவிடலாம்.

24*7 வாடிக்கையாளர் சேவை

24*7 வாடிக்கையாளர் சேவை

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைனில் இன்சூரன்ஸ் வாங்குவதும் மிகவும் எளிமையாகியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற தெரிவுகளை அனுப்புதல், பிரீமிய, செலுத்துவதற்கான விழிப்பூட்டல்களை அனுப்புதல், காப்பிட்டின் பல்வேறு நன்மைகள் குறித்துத் தகவல் அளித்தல் போன்ற சேவைகளும் ஆன்லைனில் பாலிசி வாங்கும் போது அளிக்கப்படுகிறது.

ஒரு வேலை குழப்பம் ஏதுமிருந்தால் 24 மணி நேர சாட்டிங் சேவை, வீடியோ கால் சேவைகளை எல்லாம் காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கின்றன.

அது மட்டுமில்லாமல் ஆட்டோமேட்டட் அமைப்புகள் பாலிசி ரெனிவல் தேதி போன்ற விழிப்பூட்டல்களையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன.

வாடிக்கையாளர்கள் சேவை குழு பாலிசி டெட்டில்மெண்ட் கோரிக்கைகளையும் வேகமாகச் செயல்படுத்த அனுமதிகள் அளிக்கின்றன.

ஆன்லைன் விமர்சனங்கள்

ஆன்லைன் விமர்சனங்கள்

ஆன்லைனில் பாலிசியை வாங்கும் முன்பு முன்பு பாலிசியை வாங்கியவர்களின் விமர்சனங்கள், கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவைகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் காப்பீட்டு நிறுவனந்த்தின் கிளைம் செட்டில்மெட் குறித்தும் தெரிந்துகொள்ள முடியும்.

வெளிப்படைத்தன்மை

வெளிப்படைத்தன்மை

பாலிசி குறித்த விவரங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு ஒளிவு மறைவு ஏதுமில்லாமல் கிடைக்கும். உங்கள் பக்கம் இணையச் சேவை சரியாக வேலை செய்தால் அனைத்து உதவிகளையும் அவர்களால் எந்த ஒரு குறையும் இன்றி வெளிப்படையாக அளிக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவது தவிர்க முடியாத ஒன்றாகிவிட்டுள்ளது, இன்சூரன்ஸ் நிறுவனங்கக்ள் செயற்கை நுண்ணறிவு மற்றும் சாட்பாட்ஸ் மூலம் வெளிப்படையாகப் பாலிசி குறித்த விவரங்களை அளிக்கின்றன. இன்சூரன்ஸ் சேவையில் ஆன்லைனில் வருகையால் வரும் காலங்களில் இன்சூரன்ஸ் விற்பனை என்பதில் இருந்து மாறி வாங்குதல் என்பது மட்டுமே இருக்கும்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why we want to buy insurance online? 7 reasons to know.

Why we want to buy insurance online? 7 reasons to know.
Story first published: Friday, June 1, 2018, 11:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X