விரைவில் பணக்காரராக வேண்டுமா? இதோ உங்களுக்கான எளிய வழிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் நினைப்போம். அதற்காக ஆபத்தில்லா ஆனால் அதிக லாபம் தருகின்றன வழிகளைத் தேடுவோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள 4 வழிகளின் மூலம் நீங்கள் உங்களின் லாபமீட்டும் திறனை அதிகரிக்கமுடியும்.

 

பணப் பங்குகள் (Currency derivatives)

பணப் பங்குகள் (Currency derivatives)

எதிர்கால& விருப்ப ஒப்பந்தமான இதை வாங்குபவர்களும் விற்பவர்களும், ஒரு பணத்தில் இருந்து மற்றொன்றுக்கு எதிர்கால விலையின் அடிப்படையில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இது ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளருக்கு இழப்பை தடுக்க இருக்கும் சிறந்த வாய்ப்பாகும். பணமதிப்பில் ஏற்படும் சிறு மாற்றம் கூட மிகப்பெரிய லாபத்தைத் தரும். பணப்பங்குகளில் உள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், இவை முதலீடற்ற லாபகரமான வாய்ப்புகளைத் தருகின்றன. இந்த வாய்ப்புகள் மூலம் வர்த்தகர்கள் ஒரே நேரத்தில் பணப் பங்குகளை வாங்கவும் விற்கவும் அனுமதிப்பதால் , பணமதிப்பில் ஏற்படும் சிறு மாற்றங்களின் மூலம் கூட அதிக லாபத்தைப் பெற முடியும்.

 பரஸ்பர நிதி (Mutual funds)

பரஸ்பர நிதி (Mutual funds)

பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் உங்களின் பொருளாதார நிலையைப் பாதுகாப்பது மட்டுமின்றி, கடன் அடிப்படையிலான நிதி முதல் பங்குகள் அடிப்படையிலான நிதி வரையும், இரண்டும் கலந்து கூட முதலீடு செய்யலாம். இவை எளிதாகவும், சிக்கலான வடிவமைப்பையும் கொண்டிருப்பதால் அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் பொருத்தமானது. மேலும் இதில் உங்களின் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப எந்த வகை நிதியில் எந்த விலையில் முதலீடு செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. பரஸ்பர நிதி மேலாளர்கள் வாடிக்கையாளர்களுக்கென உருவாக்கப்பட்ட பிரத்யோக முதலீட்டுத் தொகுப்பு, அவர்களைக் குறைந்த நேரத்தில் அதிக லாபம் சம்பாதிக்கச் செய்து பணக்காரர்களாக மாற்றுகிறது.

நடப்புநாள் வர்த்தகம் (Intraday trading)
 

நடப்புநாள் வர்த்தகம் (Intraday trading)

குறுகிய காலத்தில் ஒருவர் அதிக வருவாய் ஈட்டுவதற்கான மற்றொரு வழி நடப்புநாள் வர்த்தகம் எனப்படும் ஒரு நாளில் செய்து முடிக்கும் வர்த்தகம். பெயருக்கு ஏற்றாற்போல், இதில் பங்குகளை ஒரே நாளில் வாங்கி விற்க வேண்டும். அதாவது ஒரு நாளின் வர்த்தக நேரத்தில்(இந்தியாவில் காலை 9:30 முதல் 3:30 வரை) வர்த்தகம் செய்ய வேண்டும். இதில் சரியான பங்குகளைத் தேர்வு செய்வதன் மூலம் மிகப்பெரிய அளவில் லாபம் பெறமுடியும். ஆனால் சரியாக ஆராய்ந்து முதலீடு செய்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். மேலும் சரியான பங்குகளைத் தேர்வு செய்யச் சந்தை நிலவரத்தையும் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். வர்த்தகம் செய்யும் போது நிலையில்லா சந்தையில் வர்த்தகம் செய்வதைக் காட்டிலும் நிலையான சந்தையைப் பொருத்தமானது. சரியான ஆய்வுக்குப் பிறகு, ஒரு பங்கு ரூ1000 என்றவிலையில் 100 பங்குகள் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்நாளின் முடிவில் விலை ரூ1100ஆக உயர்கிறது. இதன் மூலம் வர்த்தகர் ரூ10000 லாபம் ஈட்டமுடியும். எனவே இந்த வழிமுறைகளைச் சேர்த்து கடைபிடிப்பதன் மூலம் லாபம் பெறுவது மட்டுமின்றி வர்த்தகம் செய்பவர் எளிதில் பணக்காரராக மாற முடியும்.

 எதிர்கால மற்றும் விருப்ப வர்த்தகம் (Futures and Options)

எதிர்கால மற்றும் விருப்ப வர்த்தகம் (Futures and Options)

எதிர்கால வர்த்தகம் என்பது ஒரு சொத்தை எதிர்காலத்தில் குறிப்பிட்ட நாளில் முன்கூட்டியே முடிவு செய்த விலையில் வாங்கவோ அல்லது விற்கவோ செய்யும் ஒப்பந்தம் ஆகும். ஒப்பந்தம் செய்துள்ள வாங்குபவரும் விற்பவரும் கட்டாயம் முடிவு செய்ய எதிர்காலத் தேதியில் அதை நிறைவேற்ற கடமைப்பட்டவர்கள். எதிர்காலத்தில் பெரும்பாலும் அந்தச் சொத்தின் மதிப்பில் மாற்றங்கள் ஏற்படும். சொத்தின் சந்தை மதிப்பு குறையும் பட்சத்தில், விற்பவர் பலனடைவார். சந்தை மதிப்பு அதிகரித்தால் வாங்குபவர் பலனடைவார்.

இதற்கு நேர்மாறாக விருப்ப வர்த்தகத்தில், சொத்தை வாங்குபவரும் விற்பவரும் முன்கூட்டியே திட்டமிட்ட தேதியில் சொத்தை விற்க வேண்டிய கட்டாயம் இல்லை. எனினும் வர்த்தகம் செய்யும் உரிமை வழங்கப்படுகிறது. விருப்ப வர்த்தகத்தில் சொத்தை வாங்குபவர் தவணைமுறையில் பணம் செலுத்த வேண்டும். ஒப்பந்தம் இரத்து ஆனால் விற்பவர் தவணைத்தொகையை இழக்க நேரிடும். இவ்வகை வர்த்தகத்தை மேற்கொள்வதன் மூலம் வாங்குபவர் அல்லது விற்பவர் பணக்காரராக முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Advanced Investments To Get Rich Quick

Advanced Investments To Get Rich Quick
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X