தேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? முதலீடு எப்படிச் செய்வது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக மக்களின் சராசரி வாழ்நாள் தற்போது 65 ஆண்டுகளாக உள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்களின் சராசரி வாழ்நாள் 75 ஆண்டுகளாக உயரும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகைப் பிரிவு கூறுகிறது. சுகாதாரம், மருத்துவம் ஆகியவற்றின் வளர்ச்சியால் இந்தியர்களின் சராசரி வாழ்நாளும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக இந்தியர்களின் ஓய்வு வயதுக்குப் பிந்தைய வாழ்நாட்கள் அதிகரித்துள்ளன.

வாழும் நாட்கள் மட்டும் அல்லாமல் வாழ்க்கைக்கான செலவுகளும் கூடிவிட்ட சூழ்நிலையில், ஓய்வு வயதுக்குப் பிந்தைய வாழ்வுக்குத் திட்டமிடுவது முக்கியமாகிறது. எனவே, இந்திய அரசாங்கம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஓய்வூதிய நிதி முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் கீழ் (Pension Fund Regulatory and Development Authority (PFRDA)) இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டம்- சுருக்கமாக NPS எனப்படும் இத்திட்டம், செலவு குறைவானதாகவும், வரிச் சலுகைக்கு உட்பட்டதாகவுகம், எளிமையானதாகவும் உள்ளது. வேலை செய்வோர் மற்றும் வேலை கொடுப்போர் ஆகிய இருவரும் இத்திட்டத்திற்கான தொகையைச் செலுத்த வேண்டும். முதலீடுகளின் வளர்ச்சியைப் பொறுத்து இத்திட்டத்தின் ஆதாயம் அமைகிறது. அதனைப் போலவே, பங்களிப்பு அதிகமாக இருந்தால் முதலீடும் அதிகமாக இருக்கும்.

 

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) மூன்று வகையான கணக்குகள் உள்ளன.

படி -1

படி -1

இது திரும்பப்பெற முடியாத ஓய்வூதியக் கணக்கு ஆகும். தேசிய ஓய்வூதிய திட்ட விதி முறைகளுக்கு உட்பட்டு வெளியேறும் பொழுது மட்டுமே இக்கணக்கைத் திரும்பப் பெற முடியும். இக்கணக்கில் சேர்ந்துள்ள சந்தாதாரர்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தது 6000 ரூபாய் செலுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த ஓய்வூதியக் கணக்கு முடங்கிவிடும்.

படி –2

படி –2

இப்பிரிவில் கணக்குத் தொடங்கிய சந்தாதாரர்கள் தங்களுடைய வசதிக்கு ஏற்ப முதலீடு செய்யவும் அதனைத் திருப்பப் பெறவும் முடியும். இந்தக் கணக்கினை முதல் வகையான கணக்கிற்கான கூடுதல் இணைப்புக் கணக்காகவும் எடுத்துக் கொள்ளலாம். சந்தாதாரர்கள் அடுக்கு -1 ல் ஓய்வூதியக் கணக்குத் தொடங்கியிருந்தால் மட்டுமே அடுக்கு - 2ல் கணக்குத் தொடங்க முடியும். இவ்வகையான கணக்கில் ஒரு நிதி ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 2000 ரூபாய் பங்களிப்பாகச் செலுத்த வேண்டும்.

ஸ்வவலம்பன் கணக்கு (Swavalamban Account)
 

ஸ்வவலம்பன் கணக்கு (Swavalamban Account)

இந்த ஓய்வூதியக் கணக்கில் சேர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 1000 என முதல் நான்கு ஆண்டுகளுக்கு இந்திய அரசாங்கம் தன்னுடைய பங்களிப்பாகச் செலுத்தும்.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைபவர்கள் தங்களுடைய நாமினியாக (Nominee) ஒருவரை நியமிக்க வேண்டும். தேசிய ஓய்வூதியத் திட்ட அடுக்கு- 1 மற்றும் அடுக்கு -2 வகைச் சார்ந்த கணக்குகளில் ஒரு சந்தாதாரர் தன்னுடைய நாமினியாக மூன்று பேர் வரை நியமித்துக் கொள்ளலாம். தேசிய ஓய்வூதியத் திட்டக் கணக்கில் நீங்கள் ஏற்கனவே நியமித்த நாமினியை மாற்ற விரும்பினால் நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண் பெற்றவுடன் (PRAN) மாற்றிக் கொள்ளலாம். நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண் (PRAN) பன்னிரண்டு இலக்கம் கொண்ட எண்ணாகும்.

யாரெல்லாம் இத்திட்டத்தில் இணையலாம் ?

யாரெல்லாம் இத்திட்டத்தில் இணையலாம் ?

இந்தியக் குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து பயன் அடையலாம். அவர்கள் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் இத் திட்டத்தில் இணையலாம். இத்திட்டத்தில் தனி நபராகவும் இணையலாம். பணிபுரிபவர் பணி வழங்குபவர் என்னும் குழுவின் அடிப்படையிலும் இணையலாம். இந்தியாவில் வசிக்காத வெளிநாடு வாழ் இந்தியர்களும் (NRI) இத்திட்டத்தில் இணையலாம். ஆனால், இவர்கள் இத்திட்டத்தில் செலுத்தும் பங்களிப்புத் தொகை, ரிசர்வ் வங்கி மற்றும் அன்னியச் செலாவணி மேலாண்மை சட்ட விதி முறைகளுக்கு உட்பட்டதாகும். வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் பங்களிப்பு செலுத்துபவர்களும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையலாம்.

எங்கு? எப்படி? கணக்குத் தொடங்குவது?

எங்கு? எப்படி? கணக்குத் தொடங்குவது?

அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் மூலமாக தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையலாம். இதனை முன்னிலை முனையம் (Point of Presence (POPs)) என அழைக்கலாம். பெரும்பாலான வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான முன்னிலை முனையங்களாகச் (POPs)) செயல்படுகின்றன. இந்த அமைப்புகள் சந்தாதார்கள் ஓய்வூதியக் கணக்குத் தொடங்குவதற்குத் தேவையான உதவிகளையும், அதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்வதற்கான உதவிகளையும் செய்கின்றன. இது போன்ற முன்னிலை முனையங்கள் (POPs) எங்கு அமைந்துள்ளன என்பதை இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். ஒரு சந்தாதார் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் தொடங்க முடியாது.

தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையத் தேவையான ஆவணங்கள்

1) அடையாளச் சான்றிதழ்

2) முகவரிச் சான்று

3) பிறந்த தேதிக்கான சான்றிதழ்

4) சந்தாதார் பதிவுப் படிவம்

ஆகிய ஆவணங்கள் ஓய்வூதியத் திட்டத்தில் இணையத் தேவையானவையாகும்.

NPS திட்டத்தை மாற்றிக் கொள்வது எவ்வாறு?

NPS திட்டத்தை மாற்றிக் கொள்வது எவ்வாறு?

தேசிய ஓய்வூதியத் திட்டக் கணக்கினை இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வேண்டுமானாலும் இயக்கலாம். நீங்கள் தனியார் துறையில் இருந்து அரசுத் துறைக்குச் சென்றாலும், மாநில அரசுத் துறையில் இருந்து மத்திய அரசுத் துறைக்கு மாறினாலும் உங்களுடைய கணக்கிற்கு எந்தப் பாதிப்பும் வராது. நீங்கள் ஓய்வதியக் கணக்கினை மாற்றாமல் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம். அதே போல ஒரு சந்தாதார் ஒரு முன்னிலை முனையத்திலிருந்து (POP) வேறொரு முன்னிலை முனையத்திற்கும் மாறிக் கொள்ளலாம். ஒரு சந்தாதார் சுய தொழில் செய்பவராக இருந்து பிறகு அந்தத் தொழிலை விட்டு விலகி விட்டாலும் ஏற்கனவே தொடங்கிய ஓய்வூதியக் கணக்கு மாற்றமடையாது.

பங்களிப்பு நிதி எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகிறது?

பங்களிப்பு நிதி எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகிறது?

சந்தாதார்களின் பங்களிப்பு நிதியை மேலாண்மை செய்ய 8 வகையான மேலாளர்கள் உள்ளனர். நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப அவற்றுள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

1) ICICI Prudential Pension Fund

2) LIC Pension Fund

3) Kotak Mahindra Pension Fund

4) Reliance Capital pension Fund

5) SBI pension Fund

6) UTI Retirement solutions Pension fund

7) HDFC pension management company

8) DSP Blackrock Pension Fund managers

ஆகிய ஓய்வூதிய நிதி மேலாண்மை நிறுவனங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து நம்முடைய ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்கலாம். நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப சந்தாதார்களின் ஓய்வுக்கால நிதியும் வளரும். நிறுவனங்களைப் பொறுத்து இதில் சாதகமும் உள்ளது பாதகமும் உள்ளது என்பதைச் சந்தாதார்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் !

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Is National Pension Scheme? How To Invest In IT?

What Is National Pension Scheme? How To Invest In IT?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more