காலை வாரும் கவர்மெண்ட் வங்கிகள், தட்டித் தூக்கும் தனியார் fixed deposit

பேங்கு அக்கவுண்ட்ல போடலாம்ன்னா பஞ்சாப் நேஷனல் பேங்க் நியாபகத்துக்கு வருது. பாதுகாப்பில்லை. சரி எஃப்.டியாக போட்டுடலாம்-ன்னா Deposit Insurance and Credit Guarantee Corporation DICGC நினைவுக்கு வருது

By மு.சா.கெளதமன்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்போ மக்கள் கிட்ட இருக்குற ஒரே கேள்வி என் பணத்தை எங்க பத்திரமா போடுறது. பேங்கு அக்கவுண்ட்ல போடலாம்ன்னா பஞ்சாப் நேஷனல் பேங்க் தான் நியாபகத்துக்கு வருது. பாதுகாப்பில்லை. சரி எஃப்.டியாக (Fixed deposit) போட்டுடலாம்-ன்னா Deposit Insurance and Credit Guarantee Corporation - DICGC நினைவுக்கு வந்து தொலைக்கிது. "இந்த சட்டப்படி ஒரு வங்கி திவால் ஆனால், அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் முழு தொகை அல்லது ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பித் தரப்படும்." இது சட்டம்

DICGC ஒரு உதாரணம்

DICGC ஒரு உதாரணம்

ஒருவர் திவாலான வங்கியில் ரூ.25,000 வைத்திருக்கிறார் என்றால் இந்த DICGC மூலம் அவருக்கு ரூ.25,000 திரும்ப வழங்கப்படும். ஒருவேளை அவர் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்திருந்தார் என்றால் கூட அவருக்கு அதிகபட்ச காப்பீட்டுத் தொகையான ஒரு லட்சம் ரூபாய் தான் திருப்பித் தரப்படும். எப்படி நம்மூர் நியாயம்.

சரமாரியாகச் சரியும் சந்தை

சரமாரியாகச் சரியும் சந்தை

சரி வங்கிப் பிரச்னை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், பங்குச் சந்தையில காசப் போடலாம்ன்னா சந்தை சரமாரி சரிஞ்சிக்கிட்டு இருக்கு. மியூச்சுவல் ஃபண்டும் அதே கதி தான். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், பணத்தை தங்கள் பக்கம் திருப்பி, தக்க வைத்துக் கொள்ளத் தனியார் நிறுவனம் தூள் கிளப்பும் அதிரடித் திட்டத்துடன் களம் இறங்கி இருக்கிறது.

கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்.

கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்.

இது என்னங்க ஐட்டம் புதுசா இருக்கு. இதுவும் மார்க்கெட் மாதிரி ரிஸ்கா இருக்கும் போல இருக்கே. கார்ப்பரேட் டெபாசிட்ன்னா என்ன? என்று ஆச்சர்யப்படுகிறார்கள் மக்கள். அப்படி கேளுங்க முதல்ல. ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, ரிஸ்கு, மார்க்கெட்டுன்னு நீங்க பயப்படுறது இல்லாம, கேக்குறவங்களையும் பயமுறுத்துனா எப்படிங்க பணம் பண்ண முடியும்.

கார்ப்பரேட் எஃப்.டி விளக்கம்

கார்ப்பரேட் எஃப்.டி விளக்கம்

ஒரு பெரிய கம்பெனிக்கு அவசரமா பிசினஸ் நடத்த 500 கோடி ரூபாய் தேவைப்படுது. அவங்க வங்கிகள் கிட்ட கடன் திட்டங்கள கேக்குறாங்க. கடனுக்கான வட்டி விகிதங்கள் 10 %க்கு கீழ வரல. ஆக நாமளே ஒரு டெபாசிட் திட்டத்த அறிவிச்சி ஒரு நல்ல வட்டிக்கு மக்கள் கிட்டயே கடன் வாங்குவோம்-ன்னு வாங்குனா அதுக்கு பெயர் தான் கார்ப்பரேட் எஃப்.டி. இதனால் கம்பெனிக்கு ஒரு சில % வட்டி லாபம். அதுவே அவர்களுக்கு கோடிக்கணக்கில் காசை மிச்சப்படுத்தும். இதுக்கு பல அரசு அமைப்புகள் கிட்ட முறையா அனுமதி வாங்கனும்.

ஏங்க நமக்கு தெரிஞ்ச பேங்குலேயே நம்மல ஏமாத்திடறான், இதெல்லாம் எப்படி உறுதிப்படுத்தி, டெபாசிட் பண்ணி, பணத்தை பெருக்கி... இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்குங்க.

கம்பெனிய கன்ஃபார்ம் பண்ணு.

கம்பெனிய கன்ஃபார்ம் பண்ணு.

ஏங்க, எதச் சொன்னாலும் சுத்தி வளச்சி பயமுறுத்திகிட்டே தான் இருப்பீங்களா? இப்ப இந்த டெபாசிட் எல்லாம் உங்களுக்கு செக் பண்ணனும் அவ்வளவு தான.

ஆமாங்க.

http://www.iepf.gov.in/IEPF/pdf/GNL2_Filings.pdf இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க. இதுல எந்த கம்பெனிக்கு சட்டப்படி டெபாசிட் வாங்க அனுமதி கொடுத்திருக்காகங்களோ அந்த கம்பெனிங்க பேர் மட்டும் தான் இருக்கும். இத பாத்துட்டு, அந்த கம்பெனி பேர போட்டு இணையத்துல தேடுனாலே அவங்களோடு எஃப்.டிக்கான விளம்பரம் மற்ற விவரங்கள் எல்லாமே கெடச்சிடும்.

என்னங்க, எந்த பேங்கோட பேரும் இதுல இல்ல.

வங்கிகள் எங்கே?

வங்கிகள் எங்கே?

இருங்க சார். ஒரே அடியா அவசரப்பட்டா எப்புடி
வங்கிகள், NBFC-ன்னு சொல்லப்படுற வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனிங்க எல்லாம், இது மாதிரி டெபாசிட் வாங்குறப்ப எல்லாம் அனுமதி வாங்கத் தேவை இல்ல. அவங்க கம்பெனிய பதிவு பண்றப்பவே டெபாசிட் வாங்குறதுக்கு ஆர்பிஐ அனுமதி கொடுத்துடும்.

அதெப்புடிங்க செக் பண்றது.

நல்ல கேள்வி. இப்ப தான் சார் பதப்பட்டப் படாம கேக்குறீங்க.

1. மத்திய ரிசர்வ் வங்கியோட வலைதளத்துல ஒவ்வொரு வங்கி சார்ந்த கம்பெனியோட விவரங்களும் இருக்கும்.

https://rbidocs.rbi.org.in/rdocs/Publications/PDFs/59260.pdf நேரா இந்த லிங்குக்கு போய், நாமே பாக்க வேண்டிய கம்பெனிய பாருங்க. இந்த லிஸ்ட்ல இருக்குறவங்க மக்கள்கிட்ட இருந்து டெபாசிட் வாங்குறப்போ ரிசர்வ் வங்கி கிட்டயோ மற்ற எந்த அரசு அமைப்பு கிட்டயோ அனுமதி வாங்க அவசியமில்ல.

ஹவுசிங் ஃபைனான்ஸ் இங்கே

ஹவுசிங் ஃபைனான்ஸ் இங்கே

ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எல்லாமே நேஷனல் ஹவுசிங் பேங்க் அமைப்பின் கீழ தான் நிர்வகிக்கப்படுது. இந்த அமைப்புக்குக் கீழ பதிவு செஞ்சிருக்கிற ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களோடு பட்டியல் இது. https://test.nhb.org.in/List-of-HFCs-Registered-with-NHB-19-02-2016.pdf இதுல பிப்ரவரி 2016 வரையான லிஸ்ட் தான் அப்டேட் செஞ்சிருக்காகங்க. இந்த பட்டியல்ல என்.ஹெச்.பி ஒரு மதிப்பீடும் கொடுத்திருக்கு பாத்தீங்களா. அந்த மதிப்பீடு 1-ன்னா நல்ல கம்பெனின்னு அர்த்தம், 2-ன்னா ஜாக்கிரதையா இருக்கணூம்ன்னு அர்த்தம், 3-ன்னா அந்த கம்பெனி ஆபத்தான நிலைமைல இருக்குன்னு அர்த்தம்.

என்னங்க கலுக்குறீங்க. இது நல்லா இருக்கே, நமக்கே பணத்தப் போடலாமுன்னு தோணுதே. இந்த மாதிரி நல்ல கம்பெனி ஏதாவது நல்ல வட்டி விகிதத்தோட ஸ்கீம் ஏதாவது அறிவிச்சிருக்காங்களா...? இருந்தா அதையும் அப்புடியே சொல்லுங்க தம்பி.

இருங்க சார் ஒன்னு பயப்படுறீங்க, இல்லன்னா அவசரப் படுறீங்க. இது தான் நம்ம நாட்டுல இருக்குற முதலீட்டாளர்களோட பிரச்னையே.

அப்புறம் வேறென்ன பண்ணச் சொல்றீங்க.

ரேட்டிங்

ரேட்டிங்

இந்த திட்டங்கள்ள பெஸ்டான டெபாசிட் திட்டத்தை கொடுத்தா என்ன சொல்லுவீங்க, கண்டிப்பா அதுல தான பணத்தப் போடுவீங்க. அப்போ கொஞ்சம் காத்திருங்க சார், பெஸ்ட் ஆஃப் த பெஸ்ட கண்டுபிடிக்க ரேட்டிங் பாப்போம்.
ரேட்டிங்ன்னா சினிமாவுக்கு 10 ஸ்டாருக்கு இவ்வளவு ஸ்டாருன்னு மார்க் போடுவாங்களே அந்த மாதிரியா...?

ஐயா, அதே தான். ஒரு நிறுவனத்தோட நிதி நிலைமை, கடந்த காலங்கள்ள அந்த கம்பெனி பத்தி வந்த நல்ல செய்தி, கெட்ட செய்தி, புதிய பெறுப்பேற்பு, பதவி விலகல்கள், புதிய கண்டுபிடிப்புகள், நிர்வாக ரீதியான முடிவுகள், சந்தை சறுக்கல்கள்-ன்னு பல விஷயங்கள அலசி ஆராய்ஞ்சி பாத்து ரேட்டிங் கொடுப்பாங்க.

ரேட்டிங் கம்பெனிகள்:

ரேட்டிங் கம்பெனிகள்:

இப்படி யார் வேணும்னாலும் சினிமாவுக்கு மார்க் போடுற மாதிரி போட்டுக்கலாம். ஆனா ஒரு சில கம்பெனியோடு ரேட்டிங் வாங்குறது அவ்வளவு ஈஸி இல்ல. அப்படிப்பட்ட நல்ல கம்பெனியோட ரேட்டிங் வாங்க பல சர்வதேச கம்பெனிகளே மாசக் கணக்குல வாசல்ல காத்திருக்க வேண்டி இருக்கு. அப்படிப்பட்ட ஒரு நல்ல கம்பெனி தான் க்ரிசில் (CRISIL). இந்த கம்பெனியோட செயல்பாடுகளும் வெளிப்படைத் தன்மையும் எவ்வளவு நல்லா இருந்தா இந்தியாவோட பெரும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களான ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலா, டாலி கன்னா, ராஜீவ் கன்னா மாதிரியான ஆட்கள் இந்த கம்பெனி பங்குகளை வாங்கி இருப்பாங்கன்னு பாத்துக்கங்க. சரி இனி ரேட்டிங்குக்கு போவோம்.

CRISIL-D

CRISIL-D

இருக்குறதுலேயே கடைசி ரேங்க் இது தான். இவங்ககிட்ட பணத்த போடுறதுக்கு நாம பாலுங்கெணத்துல காச எறிஞ்சிடலாம். இவங்களப் பாத்தாலே சொல்லிடலாம் இவனுங்க நஷ்டத்துல தான் கடய நடத்துறானுங்கன்னு. ஆக இவனுங்க எப்ப கடைய மூடப் போறானுங்கன்னு மட்டும் தான் தேதி சொல்லல. இப்படி ஒரு கம்பெனியில இருந்து மாசத்துக்கு 50% வட்டிக்கு ஃபிக்ஸட் டெபாசிட் போடச் சொன்னாலும், தலைய திருப்பிக்கிட்டு பொய்க்கிட்டே இருக்கனும். புரிஞ்சிதா. ஏன்னா வாங்குற டெபாசிட் கடைய மூடுறதுக்கான செலவ உங்க கிட்ட உஷார் பண்றதாக் கூட இருக்கலாம்.

Crisil - C

Crisil - C

இது செகண்ட் லாஸ்ட். இவன்கிட்ட பணத்தை கொடுத்தீங்கன்னா தருவானா மாட்டானான்னு, அவனுக்கே தெரியாது. நம்ம ஃப்ரெண்டுங்க பென் டிரைவ் கடன் வாங்குற மாதிரி தான் இந்த கம்பெனிங்க எல்லாம். சில யோக்கியமான ஃப்ரெண்டுங்க மட்டும் தான் ரோஷமா வாங்குன பெண்டிரைவ தருவானுங்க. அந்த மாதிரி தான் இவங்களும். அந்த அளவுக்கு தத்தளிச்சிக்கிட்டு இருக்குற கம்பெனிங்க. இவங்களுக்கு சிம்பிளா நோ சொன்னாத் தான் நீங்க பிழைப்பீங்க.

CRISIL- BBB முதல் B வரை:

CRISIL- BBB முதல் B வரை:

இவங்க யோக்கியங்க தான். வாழ்ந்து கெட்ட குடும்பம் மாதிரி நல்ல ரேட்டிங்ல இருந்த கம்பெனிங்களோ, அல்லது புதுசா பிசினஸ் பண்ண வந்தவங்களோ இந்த ரேட்டிங்ல ஈசியா ஸ்டிக் ஆவாங்க. பெரும்பாலும் எம்.எஸ்.எம்.இ என்கிற சிறு குறு தொழில் செய்றவங்க, செஞ்சி மேல வந்த கம்பெனிங்க எல்லாம் இதுல தான் ரேங்க் ஆகுறாங்க. இவங்கள நம்புறதும், நம்பாததும் உங்க சொந்த கணிப்பைப் பொறுத்தது. இவங்கள்ள நல்ல பிசினஸ் பண்ணி ரேட்டிங் மேல வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கு, சொதப்பி கீழ விழறத்துக்கும் வாய்ப்பிருக்கு. "இதில் முதலீடு செய்யத் தனி மனவலிமை தேவை என்பதை மட்டும் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்". ஏன்னா கண்டிப்பா தருவேங்குறவன் கிட்ட காச கொடுத்துட்டு தைரியமா இருந்திடலாம். நான் தரவே மாட்டேங்க, கொஞ்சம் காசு வேணுங்குறவன் கிட்ட காச கொடுத்துட்ட மறந்துடலாம். ஆனா இந்த ரெண்டும் கெட்டான் கிட்ட ஒரு தீர்வான பதிலே வராது. ஆக 12 ராசிக்காரர்களும் பார்த்து முதலீடு பண்ணவும்.

CRISIL -A: This rating is adequate security.

CRISIL -A: This rating is adequate security.

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா இதுக்கு ஒரு நல்ல உதாரணம். இந்த வங்கிக்குன்னு ஒரு நல்ல பொடென்ஷியல் இருக்கு. கடந்த ரெண்டு வருஷமா இந்தப் நிறுவனத்தோட நிகர லாபம் மைனஸில தான் இருக்கு. இருந்தாலும் இந்த கம்பெனியோட நிர்வாகத் திறன், செய்யும் பிசினஸ், அடுத்த ஐந்து வருஷத்துக்கு இவன் கடையை மூட மாட்டான்... இந்த மாதிரி சில பலமான அடிப்படைக் காரணங்களை முன்வெச்சித் தான், இந்த வங்கியை நம்பி பணம் போடலாம்ன்னு க்ரிச்ல் A கொடுத்திருக்கு. "எப்டியோ பணத்தைத் திருப்பித் தந்துடுவான்யா பாத்துக்குவோம்" என்கிற மனநிலையில் இருப்பவர்கள் மட்டும் இதில் முதலீடு செய்யலாம்.

CRISIL-AA: This rating is high safety.

CRISIL-AA: This rating is high safety.

அப்பொல்லோ ஹாஸ்பிட்டல்ஸை எடுத்துக் கொள்வோம். ஆண்டுக்கு ஆண்டு லாபத்தைப் பார்க்கும் நிறுவனம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக லாபம் அதிகரித்துக் கொண்டே வருகிறதா என்றால் இல்லை. மார்ச் 2016 -ல் 369 கோடி ரூபாய், மார்ச் 2017-ல் 285 கோடி ரூபாய், மார்ச் 2018-ல் 233.20 கோடி ரூபாய் என்று நிகர லாபத்தில் நஷ்டம் காணூம் நிறுவனம். இந்த கம்பெனியின் செயல்பாட்டு லாப வரம்பு 8.7%, பார்மா மற்றும் ஹாஸ்பிட்டல் செக்டார் இனிமே மனித இனம் அழியுற வரைக்கும் இருக்கப்போற இண்டஸ்ட்ரீ... இதெல்லாம் தான் ஒரு அப்பொல்லோ கம்பெனிக்கு AA ரேட்டிங் கொடுக்க வெச்சிருக்கு. இப்படிப்பட்ட நிறுவனங்களில் நம்பி முதலீடு செய்யலாம். அதையும் மீறி பிரச்னை வெளிவரும் போது நாம் உஷாராக கொஞ்சம் நேரமும் இருக்கும்.

CRISIL-AAA: this rating is the highest safety.

CRISIL-AAA: this rating is the highest safety.

இவன் ரொம்ப யோக்கியன் வகையரா. இதற்கு இன்ஃபோசிஸ் ஒரு எடுத்துக்காட்டு. இவனிடம் கொடுத்த காசை எப்போது கேட்டாலும் திரும்பக் கொடுத்துவிடுவான். ஆண்டுக்கு ஆண்டு லாபம் மேல் நோக்கியே உயரும் நிறுவனம். நிஃப்டி50-ல் இருக்கும் 50 பங்குகளில் ஒரு நிறுவனம். அசாதாரணமான வளர்ச்சி, நல்ல நிர்வாகம், நிதானமான முடிவுகள், தன்னை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ளும் ஃப்ளெக்ஸிபிளிட்டி என்று பல்வேறு பாசிட்டிவ் காரணங்கள் இந்த நிறுவனத்துக்கு க்ரிசிலின் அதிகபட்ச ரேட்டிங்கான AAA கொடுக்க வைத்திருக்கிறது. இந்த மாதிரி நிறுவனங்கள் பொதுவாக மக்களிடம் டெபாசிட் கேட்டு வராது.

வந்தா நல்லா இருக்குமே தம்பி. எப்ப வரும்னு சொல்லுங்க நாமலும் கொஞ்சம் காசு போட்டு நம்ம பொலப்ப ஓட்டலாம். இருக்கு சார். கேட்டிருக்காங்க. ஐந்து கம்பெனிகளுமே AAA ரேட்டட் வேற. அப்புறம் என்ன கலக்குங்க.

1. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபனான்ஸ்:

1. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபனான்ஸ்:

நிறுவனம் - NBFC
டெபாசிட் காலம் - 15 - 40 மாதங்கள்
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை - ரூ.5,000
வட்டி விகிதம் - 8.25% முதல் 8.75% வரை
மூத்த குடிமக்களுக்கு - கூடுதல் வட்டி உண்டு
கூட்டு வட்டி விகிதம் - 9.67% முதல் 9.71% (வரும் வட்டியை 40 மாதம் வரை எடுக்காமல் இருந்தால் வட்டிக்கு குட்டி போட்டு வரும் தொகை)
மேலும் விவரங்களுக்கு - https://www.mahindrafinance.com/fixed-deposit-interest-rates.aspx

2. பஜாஜ் ஃபைனான்ஸ்

2. பஜாஜ் ஃபைனான்ஸ்

நிறுவனம் - NBFC
டெபாசிட் காலம் - 12 முதல் 60 மாதங்கள் வரை
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை - ரூ.25,000
வட்டி விகிதம் - 7.60% முதல் 8.40%
மூத்த குடிமக்களுக்கு - கூடுதல் வட்டி உண்டு
கூட்டு வட்டி விகிதம் - 10.19% முதல் 11.60% வரை (வரும் வட்டியை 60 மாதம் வரை எடுக்காமல் இருந்தால் வட்டிக்கு குட்டி போட்டு வரும் தொகை)
மேலும் விவரங்களுக்கு - https://www.bajajfinserv.in/fixed-deposit

3. பஎன்பி ஹவுசிங்

3. பஎன்பி ஹவுசிங்

நிறுவனம் - ஹவுசிங் ஃபைனான்ஸ்
டெபாசிட் காலம் - 12% முதல் 120% மாதங்கள் வரை
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை - குறிப்பிடவில்லை
அதிகபட்ச முதலீட்டுத் தொகை - 5 கோடி ரூபாய்
வட்டி விகிதம் - 7.95% முதல் 8.25%
மூத்த குடிமக்களுக்கு - கூடுதல் வட்டி உண்டு
கூட்டு வட்டி விகிதம் - 7.95% முதல் 12.09% வரை
மேலும் விவரங்களுக்கு - https://www.pnbhousing.com/fixed-deposit/interests-rates/

4. ஹெச்.டி.எஃப்.சி

4. ஹெச்.டி.எஃப்.சி

நிறுவனம் - ஹவுசிங் ஃபைனான்ஸ்
டெபாசிட் காலம் - 91 நாட்கள் முதல் 60 மாதங்கள் வரை
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை - ரூ. 20,000 - 40,000
அதிகபட்ச முதலீட்டுத் தொகை - 2 கோடி ரூபாய்
வட்டி விகிதம் - 7.15% முதல் 7.40%
மூத்த குடிமக்களுக்கு - கூடுதல் வட்டி உண்டு
கூட்டு வட்டி விகிதம் - வேலும் விவரங்களைப் பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு - https://www.moneycontrol.com/fixed-income/company-deposits/housing-development-finance-corporation-HD01.html

5. க்ருஹ் ஃபைனான்ஸ்

5. க்ருஹ் ஃபைனான்ஸ்

நிறுவனம் - ஹவுசிங் ஃபைனான்ஸ்
டெபாசிட் காலம் - 12 முதல் 60 மாதங்கள் வரை
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை - ரூ. 2000 முதல் ரூ.20,000 வரை
அதிகபட்ச முதலீட்டுத் தொகை - தரப்படவில்லை
வட்டி விகிதம் - 7.25%-ல் இருந்து தரப்படுகிறது
மூத்த குடிமக்களுக்கு - கூடுதல் வட்டி உண்டு
கூட்டு வட்டி விகிதம் - வேலும் விவரங்களைப் பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு - https://www.gruh.com/annual-income/

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best Fixed Deposit in India

There are many options to invest and to grow your wealth. But right now, due to instability in stock market, Fixed deposit is a good option to nurture your wealth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X