தனிநபர் கடன் - தங்க நகை கடன்.. உங்கள் தேவைக்கு எது சிறந்தது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்க கடன் மற்றும் தனிநபர் கடன் இரண்டுக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வட்டி விகிதத்தில் தான் கடன் அளிக்கப்படுகிறது. அது மாட்டும் இல்லாமல் தங்கம் வைத்துள்ளவர்களுக்கு வேகமாகவும், வரம்புகள் ஏதுமின்றியும் கடன் பெற முடியும். அதே நேரம் தனிநபர் கடனில் தங்கம் போன்ற எதையும் நிபந்தனை அல்லது அடைமானமாகப் பெறாமல் கடன் பெற முடியும். இந்தக் கடனை பெற ஒரு சில நாட்கள் தேவைப்படும்.

 

எனவே தனிநபர் கடன் மற்றும் தங்க கடனில் உங்கள் தேவைக்கு எது சிறந்தது என இங்குப் பார்க்கலாம்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

தங்க கடன் பொதுவாக 9.85 முதல் 26 சதவீதத்திற்கு இடையில் அளிக்கப்படுகிறது.

எவ்வளவு கடன் பெற முடியும்?

எவ்வளவு கடன் பெற முடியும்?

தங்கள் கடன் அதிகபட்சம் 1.5 கோடி ரூபாய் வரை அளிக்கப்படும் நிலையில் தனிநபர் கடன் 40 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. உடனடியாகப் பணம் தேவைப்படும் போது தங்க கடனே எளிமையாகக் கிடைக்கும். தங்கள் கடனை 1000 ரூபாய் முதல் பெற முடியும். ஆனால் தனிநபர் கடன் வேண்டும் என்றால் குறைந்தது 5000 ரூபாயினைக் கடனாகப் பெற வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர்
 

கிரெடிட் ஸ்கோர்

தங்க நகர் கடன் வாங்கும் போது அதுவே உத்தரவாதம் என்பதால் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவை பெரியதாகக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இதுவும் குறிப்பிட்ட அளவிலான தொகை வரை கடன் பெறும் போது மட்டுமே ஆகும். அதிக மதிப்புடைய கடன் பெறும் போது கண்டிப்பாகக் கிரெடிட் ஸ்கோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

மறு பக்கம் தனிநபர் கடனுக்குக் கண்டிப்பாகக் கிரெடிட் ஸ்கோர் தேவைப்படும். கிரெடிட் ஸ்கோரினை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதம் மற்றும் கடனை செலுத்தும் கால அளவு மாறும். கடன் பெற முயலும் போது குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் விண்ணப்பம் இரத்தாக வாய்ப்புண்டு இல்லை என்றால் வட்டி விகிதம் உயரும். குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ள போது வங்கிகளிடம் வட்டி விகிதம் போன்றவற்றினைப் பெற எந்தப் பேரமும் செய்ய முடியாது.

 

ஆவணங்கள் மற்றும் திருப்பிச் செலுத்துதல்

ஆவணங்கள் மற்றும் திருப்பிச் செலுத்துதல்

தங்க நகை கடனுக்கு அடையாள மற்றும் முகவரி ஆவணத்தினைச் சமர்ப்பித்தால் போதும் உடனே கடன் கிடைக்கும். இதுவே தனிநபர் கடன் என்றால் முகவரி மற்றும் அடையாள ஆவணம், வருமான சான்றிதழ், வங்கி அறிக்கை போன்றவை சமர்ப்பிக்க வேண்டும்.

தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்த பல்வேறு வகையில் வளைந்து இடம் கொடுப்பார்கள். வட்டி விகிதம், மாதம் போன்றவற்றில் சலுகைகள் கிடைக்கும். இது போன்றவை தனி நபர் கடன் வாங்கும் போது கிடைக்காது.

 

தனிநபர் கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

தனிநபர் கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

தங்க நகை கடன் பெரும்பாலும் 3 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும். இதுவே தனிநபர் கடனை 5 வருடங்களுக்குச் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றார் போல வட்டி விகிதம் உயரும். தங்களது வருவாய் மற்றும் மாத தவணை செலுத்துக் கூடிய திறனைப் பொருத்த கால அளவில் கடனை பெறலாம்.

முக்கியமானவை

முக்கியமானவை

தங்க நகை அடைமான கடன் பெறும் போது தங்கத்தினை நேரடியாக வங்கியில் சமர்ப்பித்து அதன் சுத்தம் மற்றும் மதிப்பினை கணக்கிட்ட பிறகே கடன் பேற முடியும். இதுவே நீங்கள் விரும்பும் வங்கி நிறுவனத்தின் கிளை உங்கள் அருகில் இல்லை என்றால் சிரமம் ஏற்படும்.

ஆனால் இன்றைய ஸ்மார்ட் உலகில் வீட்டில் உட்கார்ந்த படியே தனி நபர் கடனுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வங்கி அதிகாரிகளை வீட்டிற்கு வரை வைத்து நாம் வங்கி கிளைக்குச் செல்லாமல் கடனை பெற முடியும்.

 

எது உங்களுக்கு ஏற்ற கடன்?

எது உங்களுக்கு ஏற்ற கடன்?

தனிநபர் கடன் அல்லது தங்க நகை கடன் இரண்டில் எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியதது கடன் பெற இருப்பவர் தான். கிரெடிட் ஸ்கோர் குறைவாகவும் தங்கம் வைத்துள்ளவர்களாகவும் சில மணி நேரங்களில் கடன் வேண்டும் என்றால் தங்க நகை கடனை தேர்வு செய்யலாம். இதுவே கிரெடிட் ஸ்கோர் அதிகமாகவும் கடனைச் செலுத்துவதற்கான கால அளவு 3 வருடத்திற்கும் அதிகமாக வேண்டும் என்றால் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Personal Loan Vs Gold Loan: Which one should you go for meeting your needs?

Personal Loan Vs Gold Loan: Which one should you go for meeting your needs?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X