இன்சூரன்ஸ் இல்லையா? ரமேஷின் நிலை தான் உங்களுக்கும்.. உஷார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    சென்னை: காப்பீட்டுத் திட்டங்கள் குறித்துப் பல்வேறு வகையில் விழிப்புனர்வு அளித்தாலும் மக்கள் பலர் அதனை வங்குவதேயில்லை. இந்நிலையில் பின் வரும் இன்சூரன்ஸ் திட்டங்கள் உங்களிடம் இல்லை என்றால் என்ன மாதிரியான சிக்கல் வரும், அவற்றால் என்ன பயன் என்பதை ரமேஷின் வாழ்க்கையில் இருந்து தெரிந்துகொள்வோம்.

    ஹாய் ரமேஷ் எப்படி இருக்கீங்க? ஏதோ இருக்கிறேன் மகேஷ். என்ன ரமேஷ் நல்லா இருக்கேன்னு சொல்லாமல் ஏதே இருக்கேன்னு சொல்கிறீர்கள். எண்ணத்தைச் சொல்ல சொல்றீங்க மகேஷ்? உங்களுக்கு என்ன ரமேஷ் சொந்த வீடு, போதாக் குறைக்கு 4 வீடு வாடகைக்கு விட்டு இருக்கீங்க. அதுல இருந்தே மாசம் 30 ஆயிரும் வருமானம். என்ன மாதிரியா மாதம் 25,000 ரூபாய் சம்பளத்திற்காக ஒரு நாளுக்கு 8 மணி நேரம் வேலைக்குப் போரீங்க.

    மருத்துவக் காப்பீடு

    இல்லை மகேஷ், சென்ற வாரம் ஏதோ காய்ச்சலா இருக்குனு மருத்துவமனை சென்றேன் 3 நாட்கள் மருத்துவமனையில் இருக்கனும்னு சொல்லிட்டாங்க. கடைசில பில் மட்டும் 40,000 ரூபாய் வந்துடுச்சு. வாடகையை வச்சு தான் குடும்பமே நடந்து வந்துச்சு. ஒரு மாச வாடகை பணம் மட்டும் இல்லாமல் கூடுதலா 10,000 ரூபாய் வேர செலவாகிடுச்சு.

    என்ன சொல்றீங்க ரமேஷ், நீங்க மருத்துவக் காப்பீடு ஏதும் வாங்கலையா? மருத்துவக் காப்பீடா? அது எதற்கு மகேஷ். இப்ப நீங்க உடம்பு சரியில்லாமல் மருத்துவமனைக்கு 40,000 பில் செலுத்தினீர்கள் இல்லையா அதை இன்சூரன்ஸ் நிறுவனத்தைச் செலுத்த வைத்து இருக்கலாம்.

     

    எப்படி ரமேஷ்?

    நீங்க உங்க மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையினைச் செலுத்தி ஜெனரல் காப்பீட்டு நிறுவனங்களில் மருத்துவக் காப்பீடு பெற்று இருந்தால் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழலில் காப்பீடு நிறுவனம் மருத்துவக் கட்டணத்தினைச் செலுத்தும். அடடே இது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே மகேஷ்.

    கிரிட்டிக்கல் இல்னஸ் இன்சூரன்ஸ்

    சரி, ரமேஷ் போன மாதம் உங்க மனைவிக்கு இதய அறுவை சிகிச்சை செய்தீர்களே எப்படி இருக்காங்க. ஆப்ரேஷனுக்கு அப்பறம் நல்ல இருக்கிறார்கள். சரி அதுக்கு எவ்வலோ செலவாச்சு. மொத்தமா 3 லட்சம் ரூபாய் செலவாகிடுச்சு மகேஷ். என்னங்க உங்களுக்குக் கிரிட்டிக்கல் இல்னஸ் இன்சூரன்ஸ் பற்றித் தெரியாதா?

    அது என்ன கிரிட்டிக்கல் இல்னஸ் இன்சூரன்ஸ். அது ஒன்னும் இல்லை ரமேஷ் இந்த இன்சூரன்ஸ் பாலிசியை உங்கள் மனைவி பெயரில் வாங்கியிருந்தால் இதய அறுவை சிகிச்சை என்று ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் போது ஒரே அடியாக மிகப் பெரிய தொகை என 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். அதனை வைத்து மருத்துவச் செலவு மட்டும் இல்லாமல் மாதாந்திர சிகிச்சை செலவுக்கும் உதவும்.

    இந்தக் கிரிட்டிக்கல் இல்னஸ் இன்சூரன்ஸ் பாலிசிகள் கேன்சர், கிட்னி செயல் இழப்பு போன்ற நோய்களுக்கும் கிடைக்கும். ஓ.. இப்படி ஒன்னு இருக்கா?

     

    மகேஷ் அப்பறம் இது போன்று வேறு ஏதாவது உள்ளதா?

    கார் வச்சு இருக்கீங்களா? ஆமாம், மகேஷ். அதற்கு மூன்றாவது நபர் காப்பீடு பெற்றுள்ளீர்களா. இது எதுக்கு? இப்ப நீங்க குடும்பத்தோடா கார்ல போரீங்க. காரை டிரைவர் ஓட்டி வருகிறார். எதிர்பாரா விதமாக விபத்து நேர்ந்தால் காரில் உள்ளவர்கள் மற்றும் ஓட்டுனர் என அனைவருக்கும் இந்த இன்சூரன்ஸ் பாதுகாப்பினை அளிக்கும். அதுவும் வெறும் 800 ரூபாய்க்கு, இந்த மாதம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை காப்பீடாகப் பணம் கிடைக்கும். அட.. இது தெரியாமல் 2 வருஷத்துக்கு முன்னாடி ஒரு எதிர்பாராமல் நடந்த ஆக்சிடண்ட்க்கு 1.5 லட்சம் செலவு செய்துவிட்டனே.

    சரி, ரமேஷ் உங்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் காப்பீடு பற்றித் தெரியுமா?

    இல்லை மகேஷ். சென்னை போன்ற வெள்ளம் பாதிப்பு ஏற்படும் நகரங்களில் சொந்த வீடு உள்ளவர்கள் இதை எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. வெள்ளம், பூகம்பம் போன்ற காலங்களில் கட்டிடம் மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள தங்கம், நகை மற்றும் பிற விலை உயர்ந்து பொருட்களுக்கும் இதன் கீழ் காப்பீடு பெற முடியும். அதிலும் வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் போது அம்ப்ரெல்லா இன்சூரன்ஸ் வாங்கினால் வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கும் காப்பீடு கிடைக்கும். இதில் இவ்வளவு இருக்கிறதா? 2015 வெள்ளத்திற்கு முன்பு இது தெரியாமல் லட்ச கணக்கில் பணத்தைச் செலவு செஞ்சிட்டனே?

    ஆமாம், ரமேஷ் இதெல்லாம் இருக்கட்டும் ஆயுள் காப்பீடு செய்துள்ளீர்களா?

    இல்லை மகேஷ் உயிரோடு இருக்கும் போது எனக்கு உதவாதது எதற்க்குனு வாங்களை. அட என்னங்க, நீங்க இருக்கும் வரை குடும்பத்தைச் சந்தோஷமா பார்த்துக்குவீங்க. அப்பறம் ஒரு நிதி சிக்கல்னா உங்க குடும்பம் யார்கிட்ட போய்க் கையேந்தும். ஆமால, என்ன செய்வார்கள். இதற்கு என்ன செய்ய வேண்டும் மகேஷ்.

    லைப் இன்சூரன்ஸ் எனப்படும் ஆயுள் காப்பீடு இருந்தால் இறந்த பின்பு அது உங்கள் குடும்பத்தின் நிதி சிக்கலை தீர்த்து வைக்கும். அதிலும் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களில் 1 கோடி, 2 கோடி வரையில் எல்லாம் காப்பீடு பெற முடியும். இன்சூரன்ஸில் இவ்வளவு நன்மைகளா? இன்றே சென்று வாங்கிவிடுகிறேன் மகேஷ். சரி, ரமேஷ் ஆபிஸ் செல்ல நேரமாச்சு. மாலை பார்ப்போம். இது போன்று அடிக்கடி டிப்ஸ் கொண்டு வாங்க மகேஷ்.

    ரமேஷ் செய்த தவறுகளை இங்குப் பார்த்தீர்கள் இல்லையா? இந்தத் திடங்கள் அனைத்திற்கும் சேர்த்து ஆண்டுக்கு 30,000 ரூபாய் வரை செலவு செய்தால் போதும். எந்தப் பயமும் இன்றிப் பாதுகாப்பாகக் குடும்பத்தினை வழிநடத்தலாம்

     

    தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

    English summary

    Alert! If You Do Not Have These 5 Types Of Insurance You Are Risking A Lot In Tamil

    Alert! If You Do Not Have These 5 Types Of Insurance You Are Risking A Lot In Tamil
    Company Search
    Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
    இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
    Thousands of Goodreturn readers receive our evening newsletter.
    Have you subscribed?

    Find IFSC

    Get Latest News alerts from Tamil Goodreturns

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more