உங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் சிறுக சேமித்து அதனைச் சில ஆண்டுகளில் மிகப் பெரிய தொகையாகப் பார்க்க வேண்டியது என்பதாகவே இருக்கும். அது மட்டும் இல்லாமல் மனதில் எப்படியாவது பணக்காரன் ஆக முடியாதா என்ற கேள்வியும் இருக்கும். அல்லது தன்னிடம் உள்ள பணத்தினை இரட்டிப்பாக்க முடியுமா என்ற சிந்தனையாவது இருக்கும்.

 

எதாவது ஒரு வகையில் தாம் சம்பாதித்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையினைச் சேமித்து வர முயறிச்சித்தாலும் பலரால் அதனைத் தொடர்ந்து செய்ய முடிவதில்லை. ஆனால் சிறுக சேமித்தால் கண்டிப்பாக அது ஒரு நாள் மிகப் பெரிய தொகையாக உருவாகி உங்களுக்குப் பயன் அளிக்கும் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

 வாரன் பஃபெட்

வாரன் பஃபெட்

சம்பாதித்த பணத்தினைச் சேமிக்கத் தொடங்கும் ஒவ்வொருவரும் வாரன் பஃபெட்டின் ‘செலவு செய்த மிஞ்சிய பணத்தினைச் சேமிக்காமல், சேமித்த பிறகு மிஞ்சும் பணத்தினைச் செலவு செய்ய வேண்டும்' என்ற சூத்திரத்தினைக் கடைப்பிடித்தால் கோடீஸ்வரன் ஆகலாம்.

மேலும் ‘தூங்கும் போதும் பணத்தினைச் சமாதிக்கக் கூடிய வழியை நீங்கள் கண்டுப்பிடிக்காவிட்டல், சாங்கும் வரை நீங்கள் உழைத்துக்கொண்டே தான் இருக்க வேண்டும்' என்றும் வாரன் பஃபெட்டின் கூற்று மிகவும் பிரபலமானது.

ரிஸ்க் இல்லா முதலீடு

ரிஸ்க் இல்லா முதலீடு

பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டு போன்ற முதலீட்டில் தங்களிடம் உள்ள பணத்தினை வேகமாக இரட்டிப்பாக்க முடியும் என்றாலும் ரிஸ்க் உள்ளது. எனவே இது போன்று ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தினை எப்படிப் பிக்சட் டெபாசிட் மூலம் 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது என்று இங்குப் பார்ப்போம்.

முதலீடு
 

முதலீடு

உங்களிடம் 1 லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனை ஆண்டுக்கு 8% லாபம் அளிக்கக் கூடிய ஒரு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடத்திற்கு முதலீடு செய்யுங்கள்.

வட்டி

வட்டி

இப்படிச் செய்யும் போது நீங்கள் முதலீடு செய்த 1 லட்சம் ரூபாய் ஒரு வருடத்திற்குப் பிறகு 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக லாபம் கிடைக்கும். இதுவே இரண்டாம் வருடம் முடியும் போது 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் 8% கூட்டு வட்டி கிடைக்கும். இப்படியே தொடர்ந்து 10 வருடம் செய்திருக்கும் போது உங்கள் பணம் இரட்டிப்பாகி 2,15,892.50 ரூபாயாக இருக்கும்*.

ஆனால் தற்போது பெரும்பாலான வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 6.8 சதவீத வட்டி விகித லாபங்கள் மட்டுமே அளிக்கின்றன. எனவே 8 சதவீதத்திற்கும் அதிகமான லாபம் அளிக்கும் வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் உங்கள் பணத்தினை முதலீடு செய்யும் போது எளிமையாக 10 வருடத்தில் இரட்டிப்பாக்க முடியும்.

வீடு அல்லது கார்

வீடு அல்லது கார்

வீடு, கார் அல்லது இது போன்ற பிறவற்றை நீங்கள் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும் போது பணத்தினை இப்படிச் சேமிக்கும் போது எளிதாக ரிஸ்க் ஏதும் இல்லாமல் பயம் ஏதுமில்லாமல் முதலீட்டினை பெருக்கலாம்.

மொத்தமாகப் பெறும் தொகையினை முதலீடு செய்ய முடியாதவர்கள் என்ன செய்வது?

மொத்தமாகப் பெறும் தொகையினை முதலீடு செய்ய முடியாதவர்கள் என்ன செய்வது?

இங்குக் கிளிக் செய்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Make Money Double In 10 Years Without Risk?

How To Make Money Double In 10 Years Without Risk?
Story first published: Saturday, October 27, 2018, 16:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X