அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் ‘டெபிட் கார்டு ஈஎம்ஐ’-ல் பொருட்கள் வாங்கும் முன்பு இதைப் படிங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்டவை அன்மை காலமாக டெபிட் கார்டுகள் கீழ் 'இன்ஸ்டண்ட் கிரெடிட்' பெற்றுப் பொருட்களைக் கடனில் வாங்கலாம் என்று விளம்பரம் செய்து வருகின்றன.

 

இந்த முறையின் கீழ் அதிகபட்சம் 60,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களைச் சுலப தவணை முறையில் கடனாக வாங்க முடியும் என்றாலும் அதனைச் செய்யப் பல கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் உள்ளன.

அதிக விலை உள்ள பொருட்களை உங்கள் சக்திக்கு மீறு தவணை முறையில் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் அல்லது ஆசையுடன் டிபிட் கார்டு ஈஎம்ஐ திட்டங்களில் பொருட்களை வாங்கும் முன்பு எப்படித் தவணை வழங்கப்படுகிறது, வட்டி எவ்வளவு, அபராதம் எவ்வளவு போன்றவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

முதலில் செய்ய வேண்டியது?

முதலில் செய்ய வேண்டியது?

கிரெடிட் கார்டு இல்லாமல் இ-காமர்ஸ் நிறுவனங்களின் டெபிட் கார்டு மூலம் தவணை முறையில் பணம் செலுத்த வேண்டும் என்றால் ‘இன்ஸ்டண்ட் கிரெடிட்' என்ற சேவையினைப் பெற வேண்டும். இதற்கு இ-காமர்ஸ் பயனர்கள் தங்களது அடையாள மற்றும் முகவரி சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

முன்பு இதற்கு ஆதார் மற்றும் பான் சரிபார்ப்பு முறை கட்டாயமாக இருந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து ஆதார் மட்டும் இல்லாமல் பிற அரசு ஆவணங்களைச் சமர்ப்பித்தும் வாடிக்கையாளர்கள் விவரங்களைச் சரிபார்க்க முடியும். இந்த ஆவணங்கள் சரிபார்ப்பு முறை முடிந்த பிறகு இன்ஸ்டண்ட் கிரெடிட் சேவை மூலம் வாடிக்கையாளர்களால் இ-காமர்ஸ் தளங்களில் டெபிட் கார்டுகள் மூலம் தவணை முறையில் பொருட்களை வாங்க முடியும்.

ஈஎம்ஐ காலம்

ஈஎம்ஐ காலம்

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் என இரண்டு நிறுவனங்களும் 3, 6, 9 மற்றும் 12 மாதங்கள் என என வகையாகத் தவணை முறையில் பொருட்களை அளிக்கின்றன.

முன்பே முழுத் தவணையையும் அடைக்க முடியுமா?
 

முன்பே முழுத் தவணையையும் அடைக்க முடியுமா?

பிளிப்கார்ட்டின் கேள்வி பக்கத்தின் படி தவணை காலம் முழுவதையும் தொடர்ந்து பணம் செலுத்தியே ஆக வேண்டும், முன்கூடியே முழுத் தவணையும் செலுத்த முடியாது. இதுவே அமேசான் பே-ல் முழுத் தொகையினையும் முன்கூடியே செலுத்த முடியும்.

அமேசான் பே ஈஎம்ஐ தெரிவு

அமேசான் பே ஈஎம்ஐ தெரிவு

இந்தச் சேவை அமேசான் செயலி பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதிலும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சலுகைகள் வழங்கப்படுவதில்லை.

குறைந்தபட்சம் 8,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை மட்டுமே தவணை முறையில் வாங்க முடியும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட பரிவர்த்தனையினைச் செய்ய முடியும். அதே நேரம் எக்ஸ்சேஞ்ச் மற்றும் இன்ஸ்டா வங்கி சலுகைகள் வேண்டும் என்றால் கடன் பெற முடியாது.

தற்போது அமேசான் நிறுவனம் எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கனரா வங்கி, சிட்டி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடாக் மஹிந்தரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் டெபிட் கார்டுகளுக்கு மட்டுமே கடன் சேவையினை வழங்குகிறது. இந்த ஈஎம்ஐ திட்டங்களுக்கு 18 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும். மேலும் நோ காஸ்ட் ஈஎம்ஐ சலுகை போல இந்தத் திட்டம் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 அமேசானில் தவணையினைச் செலுத்தத் தவறினால் என்ன ஆகும்?

அமேசானில் தவணையினைச் செலுத்தத் தவறினால் என்ன ஆகும்?

தவணையினைச் சரியான நேரத்தில் செலுத்தத் தவறினால் பின்வரும் அட்டவணைப்படி அபராதம் விதிக்கப்படும்.

Overdue Amountதாமதமாக செலுத்தப்படும் நாட்கள் 1 டூ 15தாமதமாக செலுத்தப்படும் நாட்கள் 16 டூ 30தாமதமாக செலுத்தப்படும் நாட்கள் 31+
ரூ.3000 வரை ரூ 50 ரூ 150 ரூ 150
ரூ 3,001 - ரூ 6,000 ரூ 75 ரூ 150 ரூ 300
ரூ 6,001 - ரூ 9,000 ரூ 100 ரூ 250 ரூ 450
ரூ 9,001-க்கும் கூடுதலாக கடன் பெற்றால் ரூ 150 ரூ 300 ரூ 600

பிளிப்கார்ட்டின் ‘கார்ட்லஸ் கிரெடிட்’ தெரிவு

பிளிப்கார்ட்டின் ‘கார்ட்லஸ் கிரெடிட்’ தெரிவு

தேர்வுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிளிப்கார்ட் இந்தக் கார்ட்லஸ் கிரெடிட் சேவையினை வழங்குகிறது. இதற்கும் KYC விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். இங்கும் தங்கம் மற்றும் அப்பரணங்களைத் தவணை முறையில் வாங்க முடியாது.

பிளிப்கார்ட்டில் தவணையினைச் செலுத்தத் தவறினால் அபராதம் எவ்வளவு?

பிளிப்கார்ட்டில் தவணையினைச் செலுத்தத் தவறினால் அபராதம் எவ்வளவு?

ரூ.3000-க்கும் அதிகமான விலை கொண்ட பொருட்களை வாங்கும் போது பிளிப்கார்ட் இந்தத் தவணை சேவையினை வழங்குகிறது. 14 முதல் 25 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டி வரும். தவணையினைச் செலுத்தத் தவறினால் 200 ரூபாய் அல்லது 3 சதவீதம் தவணை தொகை என இவற்றில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படும்.

குறிப்பு

குறிப்பு

இது போன்று தவணை முறையில் பொருட்களை வாங்கும் போது ஆன்லைன் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள கடைகளிலும் என்ன விலை, குறைவாக இருந்தால் தவணையில் பொருட்களை அளிப்பார்களா என்ற விவரங்களைக் கேட்டுவிட்டு எங்குக் குறைவாக உள்ளதோ அங்கு வாங்குவது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Things To Check Before Purchase A Products In Flipkart, Amazon's Cardless Credit Offers

Things To Check Before Purchase A Products In Flipkart, Amazon's Cardless Credit Offers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X