டெபிட் கார்டு தொலைந்துவிட்டதா? நீங்களாகவே அதை ப்ளாக் செய்யலாம்..!

By Vivek Sivanandam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறி விட்ட வங்கி டெபிட் கார்டுகள், வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுப்பது , இணையதளம் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்வது போன்ற வங்கிச்சேவைகளை மிக சுலபமாக்கிவிட்டது. ஒருவேளை உங்களது வங்கி டெபிட் கார்டை தொலைக்க நேர்ந்தால், வாழ்க்கையே ஸ்தம்பித்துவிட்டது போல ஆகிவிடும். வங்கியில் இருந்து உங்களது புதிய டெபிட் கார்டை பெறுவதற்கு முன்பு, தொலைந்த அட்டையை தடை(Block) செய்வது என்பது மிகவும் கடினமான செயல். உங்களது டெபிட் கார்டை ப்ளாக் செய்ய வேண்டும் என்றால், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ள வேண்டும். இம்முறையிலும் தொலைபேசியில் காத்திருக்கும் நேரம் மற்றும் வங்கி கணக்கு எண், டெபிட் கார்டு தொலைந்ததற்கான காரணம், முகவரி போன்ற தகவல்களை தருவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் நமக்கு எரிச்சலூட்டும்.

இதற்கு மாற்று வழிமுறையாக, நாமாகவே தொலைந்து போன டெபிட் அட்டையை ப்ளாக் செய்ய, நெட் பேங்கிங் எனப்படும் இணைய வங்கிச்சேவையை பயன்படுத்தலாம். இம்முறையை எப்படி பயன்படுத்துவது என்பதன் படிப்படியான செயல்முறை இதோ..

 படி#1

படி#1

உங்களது பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை (User id and password) பயன்படுத்தி இணையவங்கிக்கணக்கில் உள்நுழையுங்கள்.

 படி#2

படி#2

'இணைய சேவைகள்'(e-services) எனும் பிரிவில்,ஏடிஎம் கார்டு சேவைகள் என்பதற்கு கீழே 'ப்ளாக் ஏடிஎம் கார்டு'(Block ATM card) என்பதை தேர்வு செய்யவும்.

படி#3

படி#3

பின்னர் எந்த வங்கிக்கணக்கிற்கான டெபிட் கார்டை ப்ளாக் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.உங்களின் ஏடிஎம் அட்டை எண்ணின் முதல் மற்றும் கடைசி 4 இலக்க எண்கள் காண்பிக்கப்படும். அத்துடன் செயல்பாட்டில் உள்ள மற்றும் தடை செய்யப்பட்ட அனைத்து டெபிட் கார்டுகளும் காண்பிக்கப்படும்.

படி#4

படி#4

நீங்கள் ப்ளாக் செய்ய விரும்பும் டெபிட் கார்டை தேர்வு செய்து,அதை சரி பார்த்த பின்னர் சமர்பிக்கவும்.

 படி#5

படி#5

அதை உறுதி செய்யும் வகையில், வங்கிகணக்கின் கடவுச்சொல் அல்லது குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி எனும் அங்கீகாரத்தை தேர்வு செய்யவும்.

படி#6

படி#6

வங்கிகணக்கின் கடவுச்சொல் அல்லது குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி-ஐ உள்ளீடு செய்த பின்னர், அதை உறுதி செய்ய(Confirm) வேண்டும்.

படி#7

படி#7

கடைசியாக ஏடிஎம் கார்டை ப்ளாக் செய்யக்கோரும் உங்களின் சேவை கோரிக்கையை வெற்றிகரமாக சமர்பித்த பின்னர் வழங்கப்படும் சேவை எண்ணை, எதிர்கால தேவைக்காகவும் மீண்டும் அதுதொடர்பாக விளக்கங்களை வங்கியில் கோரவும் குறித்து வைத்துக்கொள்ளவும்.

 படி#8

படி#8

டெபிட் கார்டை ப்ளாக் செய்வதற்கான சேவை எண்ணை குறித்து வைத்துக்கொண்டு, வங்கிக்கு சென்று அந்த எண்ணை வழங்கி புதிய டெபிட் கார்டை பெற்றுக்கொள்ளலாம். அந்த சமயத்தில் வங்கிகள் உடனடியாக கையில் டெபிட் கார்டை உங்களுக்கு வழங்கும்.அது உடனடியாக செயல்பாட்டிற்கு வரும் அல்லது அதிகபட்சமாக 2 வேலை நாட்களுக்குள் செயல்பட ஆரம்பிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lost Your Debit Card? Here's How To Block It On Your Own

Lost Your Debit Card? Here's How To Block It On Your Own
Story first published: Monday, November 26, 2018, 12:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X