கோக கோலா நிறுவனத்தை மண்டியிட வைத்து ரூ.95 லட்சம் பெற்ற சுஷ்மிதா சென்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரோமன் சால் (Rohman Shawl)-ஐ காதலித்து வெறுப்பேற்றும் அதே சுஷ்மிதா சென் தான். 1994-ல் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற அதே சுஷ்மிதா சென் தான். சரி சரி மேட்டருக்கு வருவோம்

வேலை

வேலை

பிரபஞ்ச அழகி பட்டத்துக்கு பின் சுஷ்மிதாவின் கெரியர் க்ராஃப் ஏறத் தொடங்கியது. தஸ்தக் (Dastak) தான் இவரின் முதல் படம். 1996-ல் வெளியானது. அதன் பின் 2007 வரை பல பாலிவுட் மற்றும் கோலிவுட் திரைப் படங்களில் நடித்தார். ஆனால் அத்தனை பெரிதாக சாதிக்கவில்லை.

கோக கோலா

கோக கோலா

இதற்கு இடையில் 2003-2004 ஆண்டு வாக்கில் உலகின் நம்பர் 1 குளிர்பான பிராண்டான கோக கோலா உடன் ஒரு வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கோக கோலா பானங்களுக்கு விளம்பர தாரராக நடிக்க ஒப்புக் கொண்டார். இதற்கான தொகை 1.5 கோடி ரூபாய்.

#metoo

#metoo

ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருந்த காலத்துக்குள்ளேயே, ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு ஒரு நபரை விளம்பர தாரராக வைத்துவிட்டார்கள் கோக கோலா நிறுவனத்தினர். இது தான் பிரச்னையின் ஆரம்பர்.

கோக கோலா சில்மிஷம்

கோக கோலா சில்மிஷம்

கோக கோலா நிறுவன அதிகாரி ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். தவறான முறையிலேயே என்னிடம் பேசினார். நான் அதற்கு இணங்காததால் என்னை இப்போது இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளி ஏற்றுகிறார்கள். என்று அன்றே பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

சுஷ்மிதா தரப்பு

சுஷ்மிதா தரப்பு

ஒரு உலக பிரம்மாண்ட நிறுவனமே பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான வேலைச் சூழலை தர விலை என பேசத் தொடங்கினர். கோக கோலா நிறுவனத்துக்கு பிராண்ட் முக்கியம் என்பதால் இதை உடனடியாக ஒரு முடிவுக்கு கொண்டு வர விரும்பியது

செட்டில்மெண்ட்

செட்டில்மெண்ட்

கோக கோலா நிறுவனமும் தன் தவறை உணர்ந்து, சுஷ்மிதாவுக்கு விளம்பரங்கள் நடித்தது போக ஒப்பந்தப்படி மீதம் கொடுக்க வேண்டிய தொகையான 50 லட்சத்துடன், இந்த பாலியல் தொல்லை பிரச்னையும் ஒரு முடிவுக்கு கொண்டு வர கூடுதலாக 45 லட்சத்தைக் கொடுத்தது என்று தான் செய்திகள் பரவின. ஆனால் இந்த 95 லட்சமும் ஒப்பந்தப் படி சுஷ்மிதாவுக்கு தர வேண்டியதைத் தான் தந்திருக்கிறோம் என்று கோக கோலா தரப்பில் சில செய்திகள் வெளியாயின. 

 வருமான வரித் துறை

வருமான வரித் துறை

ஆக மொத்தம் சுஷ்மிதா விளம்பரத்தில் நடித்ததற்காக 50 லட்சம் ரூபாயும்... நஷ்ட ஈட்டுத் தொகையாக 95 லட்சம் ரூபாயும் பெற்றார். மொத்தம் 50+95=145 லட்சம். இதில் 50 லட்சத்தை மட்டுமே வருமான வரிச் சட்டப்படி கணக்கு காட்டினார். ஆக வந்த மொத்த வருமானமான 1.45 கோடியில் வெறும் 50 லட்சத்தை மட்டும் கணக்கு காட்டி விட்டு, 95 லட்சம் ரூபாயை மறைத்துவிட்டார் என வருமான வரித் துறை வழக்கு தொடுத்து விசாரித்தது.

 தீர்ப்பு

தீர்ப்பு

கோக கோலா நிறுவனம் 50 லட்சத்தை மட்டும் தான் விளம்பரங்களில் நடித்ததற்கான தொகையாக கொடுத்தது. மீதமுள்ள தொகையான 95 லட்சமும் நஷ்ட ஈட்டுத் தொகையாகத் தான் பெறப்பட்டது. இந்த நஷ்ட ஈட்டுத் தொகையை Capital receipts என்று தான் கணக்கில் காட்டி இருக்கிறார்கள் சுஷ்மிதா தரப்பினர். எனவே இந்த 95 லட்சத்தை வருமானமாக கருத முடியாது. எனவே இந்த 95 லட்சத்துக்கான வருமான வரியாக 35 லட்சத்தையும் வருமான வரித்துறையினர் பெறக் கூடாது என வருமான வரி தீர்ப்பாயம் தீர்ப்பளித்திருக்கிறது.

ஆக கோக கோலா நிறுவனத்திடம் #metoo-க்கு நஷ்ட ஈடு வாங்கியது மட்டும் இல்லாமல், பெற்ற நஷ்ட ஈட்டைக் காப்பாற்ற வருமான வரித்துறையினரிடமும் போராடி வென்ற சுஷ்மிதா சென்-க்கு ஒரு ராயல் சல்யூட்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sushmita sen is not liable to pay tax for compensation by income tax appellate tribunal

sushmita sen is not liable to pay tax for compensation by income tax appellate tribunal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X