விவசாயிகளுக்கு வீட்டுக் கடன் வழங்கும் தமிழக நிறுவனம். சல்யூட்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"சார், மீட்டர் போட்டு ஓட்டுறோம் கொஞ்சம் பாத்து குடுங்க" இப்படி அன்றாடம் 10க்கும் 20க்கும் பேரம் பேசி உழைத்து சம்பாதிக்கும் ஆட்டோகாரர் 31 வயது ரஞ்சித் குமார். சென்னையில் அம்பத்தூரில் சொந்த ஆட்டோ ஓட்டுகிறார். ஒரு குட்டி மகனுக்கு அடுத்த வருடம் பள்ளிக் கூட அட்மிஷன். மனைவிக்கு தனியார் நிறுவனத்தில் கேஷியர் வேலை. மொத்த குடும்ப வருமானம் மாதம் ரூ.40,000க்கு மேல். ஆட்டோ ஓடவே இல்லை என்றால் கூட மனைவியின் ரூ.22,000 சம்பளம் வந்துவிடும்.

 

சராசரி சந்தோஷம்

சராசரி சந்தோஷம்

சனிக்கிழமை நைட்டு, பெரம்பூர் சத்தியமில் சினிமா, சண்டே மதியம் சிக்கன் பிரியாணி, சாயங்காலம் ராகவேந்திர மடம். ஏன்னா இவர் ரஜினி ரசிகர். பாட்ஷா படம் பார்த்தே ஆட்டோ ஓட்ட வந்தவர். ஆனால் ஒரே ஒரு குறை.

அந்தக் குறை

அந்தக் குறை

சொந்த வீடு. இவருக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க ஆசை. கல்லூரி முடித்த உடன் பாட்ஷா வேகத்திலேயே அப்பாவிடம் நச்சரித்து சொந்த ஆட்டோ வாங்கி ஓட்டிய போது ரஞ்சித்துக்கு வயது 22. அன்றில் இருந்து சேர்த்து வைத்த பணம் மட்டும் 2,65,000 ரூபாய் இருக்கிறது. கடந்த மூன்று வருடமாக ஒரு சொந்தக்காரரின் வீட்டை வாங்க வங்கிகளுக்கு அலைகிறார். வீட்டின் மதிப்பு 17,00,000 ரூபாய். அப்புறம் என்ன வீட்ட லோன் போட்டு வாங்கிடலாமே என்றால் இல்லை தான் சொல்ல வேண்டும்.

பிரச்னை ஆரம்பம்
 

பிரச்னை ஆரம்பம்

சொந்த ஆட்டோ என்றாலும், எந்த வங்கியும் வீட்டுக் கடன் கொடுக்க மறுக்கிறார்கள். காரணம் நிலையற்ற வருமானம். மனைவி பெயரில் கடன் வாங்கலாம் என்றால் சம்பளம் போதாது. அவர் வாங்கும் சம்பளத்துக்கு அதிகபட்ச கடன் தொகையாக 12 லட்சம் ரூபாய் தான் தர முடியும் என்று பல்வேறு தனியார் மற்றும் அரசு வங்கிகள் கரார் கட்டி விட்டன. 12 + 2.65=14.65. மீதி 2.35 லட்ச ரூபாய்க்கு என்ன செய்வது.

ஏன்

ஏன்

வாங்கும் சம்பளத்தில் 50 - 60%-க்கு மேல் இஎம்ஐ தொகையை வங்கி கணக்கிடாது. அதோடு ரஞ்சித்தோ அவரின் மனைவியோ வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்பதால் வருமானத்துக்கான ஆதாரங்கள் இல்லை. எனவே கடனை ரஞ்சித்தும், அவர் மனைவியும் சேர்ந்தும் (Joint Loan Account) எடுக்க முடியவில்லை. ஆனால் தேவையான தொகை 14,35,000 ரூபாய்.

கைகொடுத்த சாஸ்வதம்

கைகொடுத்த சாஸ்வதம்

சென்னை நந்தனம் ஏரியாவில் தொடங்கப்பட்டிருக்கும் சாஸ்விதா ஹோம் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம். ரஞ்சித் மாதிரி பல பேருக்கு வீட்டுக் கடன் வழங்கி வருகிறது.

 ஏன் இவர்கள்

ஏன் இவர்கள்

இந்தியாவில் அமைப்பு சாரா அல்லது முறை சாரா தொழிலாளர்கள் அதிகம். ஆங்கிலத்தில் unorganised sector தொழிலாளர்கள் என்று சொல்வார்கள். அதில் ரஞ்சித்தும் ஒருவர். இவர்கள் இல்லாமல் இனி வெறும் சம்பளதாரர்களுக்கு சேவை வழங்கி இந்தியாவில் எந்த ஒரு நிதி சார் நிறுவனமும் மேலே வர முடியாது. அதோடு சம்பளதாரர்களுக்கு கடன் கொடுக்க இந்தியாவில் ஏகப்பட்ட நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் ரஞ்சித் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கடன் கொடுக்க தான் யாரும் இல்லை. அந்த வெற்றிடத்தைத் தான் நாங்கள் நிரப்புகிறோம். அதற்கான ரிஸ்குகளும் இருக்கின்றன.

 கடன் தொகைக்கு பாதுகாப்பு

கடன் தொகைக்கு பாதுகாப்பு

இவர்களுக்கு வருமானம் நிலையாக இருக்காது என்பது பெரிய பிரச்னை தான். கடனை கொஞ்சம் முன் பின் தான் செலுத்துவார்கள். ஒருவேளை செலுத்த முடியாமல் கூட போகலாம். அப்படி செலுத்த முடியாமல் போனால், அவர்கள் எங்களுக்கு பிணையாக வைத்திருக்கும் வீடு மற்றும் நிலத்தை விற்று கடன் தொகையை மீட்டு விடலாம். ஆக எங்கள் கடன் தொகைக்கு பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் அவர்களை நம்பி கடன் கொடுக்கத் தான் யாரும் இல்லை. ஆட்டோகாரர்களாவது பரவா இல்லை. விவசாயிகளின் நிலை மிகவும் வருத்தத்துக்குரியது.

 யாருக்கு எல்லாம்

யாருக்கு எல்லாம்

விவசாயிகளுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், மளிகைக் கடைகாரர்கள், தையல் தொழிலாளர்கள், கோவில் குருக்கள் போன்றவர்களுக்கு சொந்த வீடு கனவை நிறைவேற்ற கடன் கொடுக்க எங்களால் முடியும். எங்கள் வாடிக்கையாளர்கள் இவர்கள் தான். இவர்களுக்காக காத்திருக்கிறோம். ஒரே ஒரு விஷயம் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் வழங்கும் வட்டி விகிதத்தை விட கொஞ்சம் அதிகமான வட்டிக்கு தான் கடன் வழங்குகிறோம். ஏன் என்றால்...

தஸ்தாவேஜ்கள்

தஸ்தாவேஜ்கள்

இந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சில நாட்கள் விடுப்பு எடுத்து வங்கிகளுக்கு அலைய முடியாது. ஆகையால் இரண்டு அல்லது மூன்று முறை எங்கள் வங்கிக்கு வந்தால் போதும் மற்ற எல்லா தஸ்தாவேஜ்கள், சரிபார்ப்புகள், பதிவு அலுவலக வேலைகள் என்று அனைத்தையும் முடித்து கடன் தொகையை கொடுத்து விடுவோம்... அதனால் தான் கொஞ்சம் அதிக வட்டிக்கு கடன் கொடுக்கிறோம் தவிர நாங்கள் எடுக்கும் ரிஸ்குகளையும் சரி கட்ட வேண்டி இருக்கிறதே.

பிரதமர் கடன்

பிரதமர் கடன்

pradhan mantri awas yojana திட்டத்தின் கீழ் எங்களைத் தேடி வரும் நபர்களுக்கு கடன் வாங்கித் தர முடியும் என்றால், அதையும் செய்து கொடுக்கிறோம். வீடு தான் சாஸ்வதம், அதை அடைய சாஸ்விதா ஃபைனான்ஸ்-க்கு வாருங்கள் எங்களால் இயன்ற வற்றை நிச்சய்ம் செய்வோம் என்கிறது சாஸ்விதா ஃபைனான்ஸ்.

விரிவாக்கம்

விரிவாக்கம்

அடுத்த நிதி (2019 - 2020) ஆண்டுக்குள் 100 கோடி ரூபாய் வீட்டுக் கடன் அளிக்க இருக்கிறார்கள். அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் 10 கிளைகளை புதிதாக திறக்க இருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 கிளைகளோடு இயங்க இருப்பதாக சாஸ்விதா நிறுவன தலைவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

tamilnadu housing finance company providing housing loan to farmers

tamilnadu housing finance company providing housing loan to farmers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X