“81,250 ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்குபவர், ஒரு ரூபாய் கூட வரி கட்ட வேண்டாம்” வருவாய்த் துறைச் செயலர

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த பிப்ரவரி 01, 2019-ல் சொல்லப்பட்ட உருப்படியான சில விஷயங்களில் ஒன்று இந்த வருமான வரி வரம்பை உயர்த்தியது தான்.

அந்த அறிவிப்பு வெளியான உடனேயே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கீடுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இப்போது மத்திய வருவாய்த் துறைச் செயலர் அஜய் பூஷன் பாண்டேவே ஒரு கணக்கீட்டைச் சொல்லி புல்லரிக்க வைத்திருக்கிறார். இனி அவர் மொழியில் இருந்து.

நீங்களும் செய்யலாம் எதிர்காலத்துக்கு

நீங்களும் செய்யலாம் எதிர்காலத்துக்கு

''ஆண்டுக்கு, எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர் கூட,முறையான முதலீடுகளை செய்திருந்தால், வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது, முதலீடுகள் நல்லது தானே.

நிதிப் பற்றாக்குறை

நிதிப் பற்றாக்குறை

மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், பிப்ரவரி 01, 2019 தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், நடுத்தர குடும்பங்களை சேர்ந்த, மூன்று கோடி பேர் பயன் பெறும் வகையில், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு, 18 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைக் கருதி அரசு தன் நிதிப் பற்றாக்குறையை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. ஆக முதல் விடுதலை 5,00,000 ரூபாய் வரை வரி கிடையாது.

Standard deduction

Standard deduction

ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் பெறுபவர் தன்னுடைய மற்றும் தன்னைச் சர்ந்தவர்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளை மேற் கொள்கிறார்கள். அதற்கு நிலையான கழிவாக ஆண்டுக்கு 40,000 ரூபாய் என இருந்த தொகையை இப்போது 50,000 ரூபாயாக அறிவித்திருக்கிறார்கள். ஆக 5,00,000 + 50,000 = 5,50,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம்.

முதலீடுகள் மற்று பிஎஃப்

முதலீடுகள் மற்று பிஎஃப்

சம்பளம் வாங்குபவர்கள் அனைவருக்குமே பிஎஃப் பிடிக்கப்படும். ஆனால் அதைத் தாண்டியும் லைஃப் இன்ஷூரன்ஸ், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், தேசிய சேமிப்புச் சான்று, அஞ்சலக சேமிப்புத் திட்டம், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் திட்டம் என பல்வேறு திட்டங்களில் கொஞ்சம் யோசித்து முதலீடு செய்தால் முழு 1,50,000 வரை கழிவு பெறலாம். அப்படி முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பமில்லையா. நேரடியாக வீட்டுக்கடன் வாங்கிக் கொள்ளலாம். வீட்டுக் கடனுக்கு திருப்பிச்ச் எலுத்தும் அசல் தொகை இந்த 80சி பிரிவின் கீழ் தான் கழியும். ஆக 5,00,000 + 50,000 + 1,50,000 = 7,00,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம்.

income tax act Section 24

income tax act Section 24

இந்த பிரிவின் கீழ் வீட்டு கடன் தொகைக்குத் திருப்பி செலுத்தும் வட்டித் தொகையாக ஆண்டுக்கு 2,00,000 ரூபாய் வரை வரிக் கழிவு பெறலாம். ஆக வீட்டுக் கடன் அசல் தொகைக்கு 80சி என்றால் வீட்டுக் கடன் வட்டிக்கு இந்த பிரிவு 24. மொத்தமக 5,00,000 + 50,000 + 1,50,000 + 2,00,000 = 9,00,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம்.

இதுவும் ஒரு வருமான வரிச் சட்டம் தான்

இதுவும் ஒரு வருமான வரிச் சட்டம் தான்

இந்த சட்டப் பிரிவின் கீழ் ஆண்டுக்கு 50,000 ரூபாய் வரை என்பிஎஸ் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வரிக் கழிவு பெறலாம். இதுவும் ஒரு விதமான நிலையான வருமானம் தரக் கூடிய முதலீட்டுத் திட்டங்கள் தான். இதை அரசு இயக்கினாலும், நம் பணத்தை நிர்வகிப்பது எஸ்பிஐ, ஐசிஐசிஐ போன்ற தனியார் நிறுவனங்கள் தான். ஆக தனியார் நிறுவனத்தின் சேவை, அரசின் உத்திரவாதத்துடன் இந்த முதலீடுகள் நன்கு செயல்படுகின்றன. இப்போது 5,00,000 + 50,000 + 1,50,000 + 2,00,000 + 50,000 = 9,50,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம்.

80டி

80டி

சம்பளம் வாங்கும் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு எடுக்கிறார் என்றால் ஒரு ஆண்டில் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு இந்த பிரிவின் கீழ் குறைந்தபட்சம் 25,000 ரூபாய் வரை வரிக்கழிவு பெறலாம். ஆக 5,00,000 + 50,000 + 1,50,000 + 2,00,000 + 50,000 + 25,000 = 9,75,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம் என்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

revenue secretary explains the income tax calculation after the interim budget announcement

revenue secretary ajay bhushan explains the income tax calculation after the interim budget relief announcement
Story first published: Sunday, February 3, 2019, 13:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X