Mudra திட்டத்தின் கீழ் மதுரை இட்லி வண்டிகள்..! கலக்கும் மாவட்ட தொழில் வளர்ச்சி சங்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன், மல்லிகைப் பூக்குப் பின் முக்கூடல் நகர் மதுரைக்கு புகழ் சேர்ப்பது என்றால் அது மதுரை மல்லி இட்லி தான். இன்று உலகம் முழுக்க மதுரை மல்லிப் பூ இட்லிக்கு என்று தனி டிமாண்ட் உண்டு. அப்படிப்பட்ட இட்லி கடைகளுக்கு இப்போது mudra திட்டம் மூலம் உதவ மதுரை தொழிற்சங்கம் ஒரு யோசனையை முன் வைத்திருக்கிறார்கள்

 

சிறு கிராமம் தொடங்கி பெரிய நகரங்கள், மெட்ரோபாலிட்டன் சிட்டிக்கள் வரை மதுரை மல்லி இட்லிக்கு கிராக்கி வந்துவிட்டது. ஏகப்பட்ட தனியார் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இந்த மதுரை மல்லிப் பூ இட்லிக்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் மதுரை மாநகரிலேயே சாலை அருகில் கடை போட்டு, சுட சுட ஆவி பறக்க இட்லியை அவித்து எடுத்து வியாபாரம் செய்பவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான். மதுரை மாநகரில் கூட பெரிதாக சம்பாதிக்க முடியாதவர்களை அரவணைத்து பசி ஆத்தும் மீனாட்சி அம்மனே இந்த ரோட்டுக் கடை மல்லிப் பூ மதுரை இட்லிகள் தான்.

Trade War: உங்க மேல புது வரி போட மாட்டோம்! வாங்க பேசுவோம் சீனாக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா!

சுத்தம் பயம்

சுத்தம் பயம்

ரோட்டுக் கடை இட்லிகளுக்கு அளப்பரிய கூட்டமும், வழக்கமான வாடிக்கையாளர்களும் எப்போதும் உண்டு. அதற்கு முதல் காரணம் விலை. அடுத்து நாலு இட்லி இரண்டு வகை சட்னியும், ஒரு சாம்பாரும் கொடுக்கும் கூடுதல் ருசி. மதுரைக்கு சென்று ஒரு பிடி பிடித்தவர்களுக்கு அந்த சுவை தெரியும். சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ரோட்டுக் கடையில் புழுதிக்கு நடுவில் பரப்பிக் கிடக்கும் இட்லியை எப்படி சுவைப்பது...? என யோசித்துக் கொண்டிருக்கும் நடுத்தர மக்களும், வெளியூர் பயணிகள் நிறைய உண்டு. சுகாதாரத்துக்கு பயந்து இட்லியை கண்களால் மட்டும் சாப்பிட்டுக் கடக்கும் கூட்டமும் அதிகம் தான்.

ஒரு திட்டம்

ஒரு திட்டம்

மேலே சொன்ன விஷயத்தை கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட சிறு குறு தொழிற் சங்கத் தலைவர் கே பி முருகன் சில விஷயங்களை முன் வைக்கிறார் "சாலை அருகில் கடை போட்டிருப்பவர்களுக்கு, இந்திய அரசு விதித்திருக்கும் உணவுக் கட்டுப்பாடு விதிகள் எதுவும் இவர்களுக்கு தெரியாது. அதே போல அதில் சொல்லப்பட்டிருக்கும் சுகாதாரம் மற்றும் சுத்தம் பற்றிய விவரங்களும் வழிகாட்டுதல்களும் நிச்சயம் தெரிந்திருக்காது. ஆகையால் அவர்கள் எப்படி தொழில் செய்கிறார்கள் என புரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவ ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்" என பிரேக் விடுகிறார்.

தள்ளு வண்டி
 

தள்ளு வண்டி

2 லட்சம் ரூபாய்க்கு ஒரு தள்ளு வண்டி திட்டத்தைக் கொண்டு வருகிறார் கே பி முருகன். இந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தள்ளுவண்டிக்கு வெறும் 10,000 ரூபாயை (5 சதவிகிதம்) சாலை அருகில் கடை போடுபவர்கள் முதலாக கொடுத்தால் போதும். இன்னொரு 50,000 ரூபாயை (25 சதவிகிதம்) மதுரை மாவட்ட தொழிற்சாலை மையம் மானியமாகக் கொடுக்கும். மீதமுள்ள 1.4 லட்சம் ரூபாயை (70 சதவிகிதம்) Mudra கடன் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்து கொடுக்கப் போவதாகச் சொல்கிறார் முருகன்.

என்ன வசதிகள்

என்ன வசதிகள்

பொதுவாக சுத்தம், சுகாதாரம் சொல்லி சாலைக்கு அருகில் இருக்கும் கடைகளில் சாப்பிடாமல் கடப்பவர்கள் முகம் சுளிக்காத வண்ணம் இந்த வாகன திட்டத்தை வடிவமைத்திருக்கிறார்களாம். இந்த தள்ளு வண்டியில்

சோலார் பவர் கொண்ட கூரை,

முறையாக கை கழுவ குழாய்கள்,

கை கழுவும் தண்ணீரை சேமிக்க தனி தொட்டி வசதி,

இந்த கழிவு நீரை வெளியேற்ற முறையான வசதி,

சாப்பிட்ட பின் இலைகளை போடும் குப்பைத் தொட்டி வசதி,

உணவுகள் திறந்த வெளியில் இல்லாமல் மூடிய நிலையில் இருக்கும் வசதி...

என ஒட்டு மொத்த சாலையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள இந்த வாகனத்தில் வசதி செய்திருக்கிறார்களாம்.

எல்லோரும் சாப்பிடலாம்

எல்லோரும் சாப்பிடலாம்

எனவே இனி மதுரை கையேந்தி பவன்களின் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும். அவர்களுக்கு இனி கொஞ்சம் வியாபாரமும் கூடும். இனி எல்லோரும் நிம்மதியாக நம்பி வந்து மதுரை கையேந்தி பவன்களின் மல்லிப் பூ இட்லியை சாப்பிடுவார்கள். நாமும் சாப்பிடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mudra loan is going to help madurai malli idly shops too

mudra loan is going to help madurai malli idly shops too
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X