சரியும் FD வட்டி..! கண்ணீர் விட்டு கதறும் முதியவர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு கோடி ரூபாய்க்கு FD (ஃபிக்ஸட் டெபாசிட்) இருந்தால் போதும். மொத்த வாழ் நாளையும் சிறப்பாக வாழ்ந்து விடலாம் என ஊர் பக்கத்தில் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ஏன் நம் பெற்றோர்கள் கூட சொல்லி இருப்பார்கள்.

தரணி ஆள வந்திருக்கும் தாசில்தார் தொடங்கி பாமர மக்கள் வரை கொஞ்சம் பெரிய தொகை பணம் வந்தால் கூட முதலில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வட்டி வாங்குவோம் என்று தான் நினைப்பார்கள்.

ஏன் ஃபிக்ஸட் டெபாசிட்..?நம் கண் முன் இருக்கும் வங்கி. வங்கி அதிகாரிகள். இந்திய வங்கிகள் எல்லாம் திவால் ஆகாது என்கிற நம்பிக்கை... அதோடு குறிப்பாக 8 % வட்டி. ஆனால் இப்போது

கணக்கு
 

கணக்கு

உண்மையாகவே ஒரு கோடி ரூபாய் ஒருவரிடம் இருக்கிறது. அதை ஒரு எஸ்பிஐ அல்லது ஹெச் டி எஃப் சி போன்ற வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் கொடுத்தால் சில வருடங்கள் முன்பு வரை 8 % அல்லது அதற்கு மேல் வட்டி கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு கோடி ரூபாய்க்கு 8% என்றால் அது 8 லட்சம் ரூபாய். இந்த எட்டு லட்சம் ரூபாயை வைத்து ஒரு இளைஞரோ, முதியவரோ, ஆணோ, பெண்ணோ நிம்மதியாக ஒரு நல்ல வாழ்கையை வாழ்ந்து விடலாம். ஏறத்தாழ வீட்டு வாடகை தொடங்கி வழக்கமான மருத்துவ செலவுகள் வரை எல்லா குடும்ப செலவுகளையும் இந்த 8 லட்சத்தில் சமாளித்துவிடலாம்.

இன்றைய கதி

இன்றைய கதி

ஆனால் இன்று வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு எஸ்பிஐ அதிகபட்சமாக 6.7 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கிறது. ஹெச் டி எஃப் சி வங்கி 3 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.1 சதவிகிதம் வட்டி கொடுக்கிறது. மற்ற வங்கிகளான பஞ்சாப் நேஷனல் பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 6.6 சதவிகிதமும், பேங்க் ஆஃப் பரோடா 6.6 சதவிகிதமும் வட்டியாகக் கொடுக்கிறார்கள். ஏன் மற்ற கால அளவிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு எல்லாம் அதிக வட்டி கொடுக்க மாட்டார்களா எனக் கேட்கிறீர்களா..?

குறைவான வட்டி தான்

குறைவான வட்டி தான்

பொதுவாக இந்தியாவில் இருக்கும் அரசு பொதுத் துறை வங்கிகளில் ஒரு வருடம் முதல் 3 வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்குத் தான் வழக்கமாக அதிக வட்டியைக் கொடுத்து வருகிறார்கள். இந்த 3 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கே இந்திய அரசு வங்கிகளில் முக்கிய வங்கியான எஸ்பிஐயிலேயே ஆண்டுக்கு 6.7 சதவிகிதம் தான் வட்டி கிடைக்கிறது என்றால், பொதுத் துறை வங்கியில் போட்டு வைத்திருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் வயதானவர்கள், பெண்களின் நிலையை எங்கு சென்று முறையிடுவது எனத் தெரியவில்லை.

தனியார் வங்கிகள்
 

தனியார் வங்கிகள்

அரசுப் பொதுத் துறை வங்கிகளை விட தனியார் வங்கிகள் இப்போது வரை கொஞ்சம் நல்ல வட்டி விகிதங்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தனியார் வங்கிகள், பொதுத் துறை வங்கிகளுக்கு மாறாக 1 முதல் 3 வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி கொடுத்து வருகிறார்கள். உதாரணமாக ஐசிஐசிஐ வங்கி தன் 18 மாதம் முதல் 24 மாதம் வரையான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.10 % வட்டி கொடுக்கிறது. அதே போல ஹெச் டி எஃப் சி வங்கி 2 வருடம் முதல் 3 வருடம் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.10 % வட்டி கொடுக்கிறார்கள்.

ஏன் அரசு வங்கி

ஏன் அரசு வங்கி

மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி, பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி எல்லாமே வந்த பிறகு அரசு வங்கிகளே கதி எனக் கிடக்கும் சாமானிய மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். இன்று வங்கி, கடன், டெபாசிட் என்றாலே எஸ்பிஐ வங்கியை மட்டுமே நாடும் நம் பெற்றோர்கள் எத்தனை பேர் உண்டு என நமக்கே தெரியுமே..! அதனால் தான் அரசு வங்கிகள் டெபாசிட்களுக்கு வட்டியை குறைக்கும் போது டெபாசிட் தாரர்கள் கண்ணீர் விட்டு கதறுகிறார்கள். சரி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு எவ்வளவு வட்டி கொடுக்கிறார்கள் என விரிவாக முக்கிய வங்கிகள் வாரியாகப் பார்ப்போம்.

SBI FD Interest Rates

SBI FD Interest Rates

07 நாள் முதல் 45 நாள் வரை - 4.50%

46 நாள் முதல் 179 நாள் வரை - 5.50%

180 நாள் முதல் 210 நாள் வரை -6.00%

211 நாள் முதல் 1 வருடம் வரை -6.00%

1 வருடம் முதல் 2 வருடம் வரை - 6.70%

2 வருடம் முதல் 3 வருடம் வரை - 6.50%

3 வருடம் முதல் 5 வருடம் வரை - 6.25%

5 வருடம் முதல் 10 வருடம் வரை - 6.25%

ICICI FD Interest Rates

ICICI FD Interest Rates

07 நாள் முதல் 14 நாள் வரை - 4.00%

15 நாள் முதல் 29 நாள் வரை - 4.25%

30 நாள் முதல் 45 நாள் வரை - 5.25%

46 நாள் முதல் 184 நாள் வரை - 5.75%

185 நாள் முதல் 289 நாள் வரை - 6.25%

290 நாள் முதல் 365 நாள் வரை -6.50%

366 நாள் முதல் 389 நாள் வரை - 6.70%

390 நாள் முதல் 18 மாதம் வரை - 6.80%

18 மாதம் முதல் 24 மாதம் வரை - 7.10%

2 வருடம் முதல் 3 வருடம் வரை - 7.10%

3 வருடம் முதல் 5 நாள் வரை - 7.00%

5 வருடம் முதல் 10 நாள் வரை - 7.00%

HDFC FD Interest Rates

HDFC FD Interest Rates

7 முதல் 14 நாள் வரை - 3.50%

15 முதல் 29 நாள் வரை - 4.25%

30 முதல் 45 நாள் வரை - 5.15%

46 முதல் 60 நாள் வரை - 5.65%

61 முதல் 90 நாள் வரை - 5.65%

91 முதல் 6 மாதம் வரை - 5.65%

6 மாதம் முதல் 9 மாதம் வரை - 6.25%

9 மாதம் முதல் 1 வருடம் வரை - 6.35%

1 வருடம் - 6.90%

1 வருடம் முதல் 2 வருடம் வரை - 6.80%

2 வருடம் முதல் 3 வருடம் வரை - 7.10%

3 வருடம் முதல் 5 வருடம் வரை - 7.00%

5 வருடம் முதல் 10 வருடம் வரை - 7.00%

Punjab National Bank FD Interest rates

Punjab National Bank FD Interest rates

7 முதல் 14 நாள் வரை - 4.50%

15 முதல் 45 நாள் வரை -4.50%

46 முதல் 179 நாள் வரை - 5.50%

180 முதல் 270 நாள் வரை - 6.00%

271 நாள் முதல் 1 வருடம் வரை - 6.25%

333 நாள் - 6.30%

1 வருடம் - 6.60%

444 நாள் - 6.60%

555 நாள் - 6.60%

1 வருடம் முதல் 3 வருடம் வரை - 6.50%

3 வருடம் முதல் 5 வருடம் வரை - 6.50%

5 வருடம் முதல் 10 வருடம் வரை - 6.50%

Bank of Baroda FD interest rates

Bank of Baroda FD interest rates

7 முதல் 14 நாள் வரை - 4.50%

15 முதல் 45 நாள் வரை - 4.50%

46 முதல் 90 நாள் வரை - 4.75%

91 முதல் 180 நாள் வரை - 5.50%

181 முதல் 270 நாள் வரை - 6.00%

271 முதல் 365 நாள் வரை -6.00%

1 வருடம் வரை - 6.45%

1 வருடம் முதல் 400 நாள் வரை - 6.60%

400 நாள் முதல் 2 வருடம் வரை - 6.55%

2 வருடம் முதல் 3 வருடம் வரை - 6.45%

3 வருடம் முதல் 5 வருடம் வரை - 6.25%

5 வருடம் முதல் 10 வருடம் வரை - 6.25%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FD Interest rate: Banks started to reduce fd fixed deposit interest rates consecutively

Public sector and private sector Banks started to reduce fixed deposit interest rates consecutively. Now one year fixed deposit in psb is offering only 6.7% interest in SBI. In private banks ICICI & HDFC is offering 7.1% for less than 3 year fixed deposits.
Story first published: Saturday, September 7, 2019, 14:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more