3 சிறந்த ELSS ஃபண்டுகள்.. 79% வரை வருமானம்.. யாருக்கெல்லாம் உகந்தது.. முழு விவரம் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளில் முக்கியத்துவம் பெறுவது மியூச்சுவல் ஃபண்டுகள் தான். குறிப்பாக பெரியளவிலான இலக்குகளை அடைய நிபுணர்கள் பரிந்துரைப்பது மியூச்சுவல் ஃபண்டுகள் தான்.

 

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ELSS ஃபண்டுகள் பற்றி தான்.

அதென்ன ELSS ஃபண்டுகள்? இதில் என்ன சலுகைகள் உண்டு. ELSS ஃபண்டுகள் என்பது மியூச்சுவல் ஃபண்டில் உள்ள ஒரு வகை ஃபண்டு தான். இது ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டம் எனப்படும் இந்த திட்டத்தில் வரிச் சலுகையும் கிடைக்கும்.

ஏற்ற இறக்கத்தில் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்.. இன்று எப்படியிருக்கும்..!

வரிச் சலுகை கிடைக்கும்

வரிச் சலுகை கிடைக்கும்

இந்த திட்டத்தில் ஒரு தனி நபர் வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 80-சியின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களால் வரிச்சலுகையும் பெற முடியும். இந்த திட்டத்தினை பொருத்த வரையில் லாக் இன் காலக்கட்டம் முடிந்த பின்பே உங்களது கையில் இருக்கும் யூனிட்களை பணமாக்க முடியும். இதில் குரோத் மற்றும் டிவிடெண்ட் உள்ளிட்ட இரண்டு தேர்வுகளையும் இந்த ஃபண்ட் வழங்குகின்றது. இதனை எஸ்ஐபி மூலமாக பெற முடியும்.

குவாண்ட் டேக்ஸ் பிளான் டைரக்ட் குரோத்

குவாண்ட் டேக்ஸ் பிளான் டைரக்ட் குரோத்

இந்த ஃபண்ட் கடந்த 8 ஆண்டுகளாக உள்ளது. 1 வருட வருமானம் 79.62% வரையில் கிடைத்துள்ளது. இந்த ஃபண்ட் தொடக்கப்பட்டத்தில் இருந்து, ஆண்டுக்கு சராசரியாக 21.94% வருமானம் கொடுத்துள்ளது.

இந்த ஃபண்டில் செலவு விகிதம் 0.50% குறைவாக உள்ளது. இதனை எஸ்ஐபி மூலமாக 500 ரூபாய் கொண்டு கூட தொடங்கலாம்.

இந்த ஃபண்டில் நிதித் துறை, கட்டுமானம், எஃப்.எம்.சி.ஜி, உலோகங்கள், எரிசக்தி துறைகளில் பங்குகளை வைத்துள்ளது.

குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வேதாந்தா லிமிடெட், எஸ்பிஐ, ஐடிசி லிமிடெட், ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள், டாப் லிஸ்டில் இந்த ஃபண்டின் ஃபோர்ட்போலியோவில் உள்ளன.

இந்த ஃபண்டின் என்.ஏ.வி செப்டம்பர் 20 நிலவரப்படி, 220.17 ரூபாயாக உள்ளன. இதன் AUM 368.44 கோடி ரூபாயாக உள்ளது.

இதில் வெளியேறும் கட்டணம் கிடையாது. 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரிச் சலுகை உண்டு.

BOI ஆக்சா டேக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் டைரக்ட் குரோத்
 

BOI ஆக்சா டேக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் டைரக்ட் குரோத்

இந்த ஃபண்ட் கடந்த 8 ஆண்டுகளாக உள்ளது. 1 வருட வருமானம் 64.13% வரையில் கிடைத்துள்ளது. இந்த ஃபண்ட் தொடக்கப்பட்டத்தில் இருந்து, ஆண்டுக்கு சராசரியாக 19.70% வருமானம் கொடுத்துள்ளது.

செலவு விகிதம் 1.66% ஆகும்.

இந்த ஃபண்ட் நிதித்துறை, டெக்னாலஜி, கெமிக்கல்ஸ்,ஹெல்த்கேர் மற்றும் சேவைத் துறை உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்துள்ளது.

குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், டிவிஸ் லேபோரட்டீஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்டவை டாப் 5 ஹோல்ங்காக உள்ளன.

செப்டம்பர் 20 நிலவரப்படி இந்த ஃபண்டின் என்.ஏ.வி விகிதம் 112.77 ரூபாயாக உள்ளது. இதன் AUM விகிதம் 512.07 கோடி ரூபாயாகவும் உள்ளது.

ஐடிஎஃப்சி டேக்ஸ் அட்வான்டேஜ் டைரக்ட் பிளான் குரோத்

ஐடிஎஃப்சி டேக்ஸ் அட்வான்டேஜ் டைரக்ட் பிளான் குரோத்

இந்த ஃபண்ட் 2013ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் செலவின விகிதம் 0.85% ஆகும். கடந்த ஆண்டு இதன் வருமானம் 68.05% ஆகும். இதே தொடக்கப்பட்டத்தில் இருந்து ஆண்டுக்கு சராசரி வருமானம் 18.86% ஆகும்.

இந்த ஃபண்ட் நிதித்துறை, டெக்னாலஜி, ஆட்டோமொபைல், உள்கட்டமைப்பு, எஃப்.எம்.சி.ஜி துறைகளில் முதலீடு செய்துள்ளது.

குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, தீபக் நைட்ரைட் உள்ளிட்ட பங்குகளை வைத்துள்ளது.

இதன் என்.ஏ.வ் 101 ரூபாய் என்ற லெவலில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

3 best ELSS funds with returns up to 79%: check details here

quant tax plan direct growth, BOI Axa Tax Advantage Fund Direct Growth and idfc tax advantage funds are gives returns up to 79% in 1 year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X