சும்மா இருக்கும் பணத்திற்கு 7% வட்டி.. உண்மையிலேயே ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் கிடைக்கும் ஒரு சாதாரணச் சேவை தான் இந்தச் சேமிப்பு கணக்கு. இந்தச் சேமிப்பு கணக்கு வைத்திருப்பதன் மூலம் பணத்தை எப்போது வேண்டுமானாலும் உடனடியாகப் பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் பாதுகாப்பாகவும் வைக்க முடியும். இந்தச் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு வங்கிகள் வட்டி வருமானம் அளிப்பது வழக்கம்.

 

இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, ஆனால் சில வங்கிகள் கிட்டதட்ட வைப்பு நிதிக்கு இணையாகச் சுமார் 7 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்கிறது.

எப்படி எந்த வங்கி சந்தையில் அதிகளவிலான வட்டி வருமானத்தைச் சேமிப்புக் கணக்கில் சும்மா இருக்கும் பணத்திற்கு இவ்வளவு வட்டி கொடுக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு 7 சதவீதம் வரையிலான வட்டி வருமானத்தை அளிக்கிறது. இது கிட்டதட்ட வைப்பு நிதி அதாவது பிக்சட் டெப்பாசிட் திட்டத்திற்கு அளிக்கப்படும் வட்டி அளவீடு. ஆனால் உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 7 சதவீதம் மிகப்பெரிய வட்டியில் வருமானத்தை அளிக்கிறது.

ஸ்மால் பேங்க் பிரிவில் அதிக வட்டி வழங்கும் வங்கிகளில் உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி முதன்மையாக உள்ளது.

ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி

ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி போலவே மற்றொரு ஸ்மால் பேங்க் பிரிவில் ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி தனது சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு 7 சதவீதம் வரையிலான வட்டி வருமானம் அளிக்கிறது.

ஆனால் இந்த வங்கி சேமிப்புக் கணக்கில் 2000 முதல் 5000 ரூபாய் வரையில் எப்போதும் பேலென்ஸ் மெயின்டெயின் செய்ய வேண்டும்.

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்
 

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்

ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி போல் ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் தனது சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு 7 சதவீதம் வரையிலான வட்டி வருமானம் அளிக்கிறது.

ஆனால் இந்த வங்கி சேமிப்புக் கணக்கில் 2000 முதல் 5000 ரூபாய் வரையில் எப்போதும் பேலென்ஸ் மெயின்டெயின் செய்ய வேண்டும். 7 சதவீதம் வட்டி வருமானம் கொடுக்கும் வங்கிகள் 3 மட்டுமே இருக்கும் நிலையில் அடுத்த 2 வங்கிகள் சந்தையில் அதிக வட்டி கொடுக்கும் வங்கிகளாகும்.

டிசிபி வங்கி

டிசிபி வங்கி

7 சதவீதம் வட்டியை அளிக்கவில்லை என்றாலும் டிசிபி வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு 6.75 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்கிறது. இந்த வங்கி சேமிப்புக் கணக்கில் 2500 முதல் 5000 ரூபாய் வரையில் ஒவ்வொரு மாதமும் பேலென்ஸ் மெயின்டெயின் செய்ய வேண்டும்.

சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்

சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்

டிசிபி வங்கியை தொடர்ந்து சந்தையில் சேமிப்பு கணக்கிற்கு அதிக வட்டி வருமானத்தைக் கொடுக்கும் வங்கி சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க். இவ்வங்கி சேமிப்பு கணக்கிற்கு 6.25 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்கிறது. இவ்வங்கி சேமிப்புக் கணக்கில் எப்போதும் குறைந்தபட்சம் 2000 ரூபாய் அளவிலான தொகையைச் சேமிக்க வேண்டும்.

 பிற வங்கிகள்

பிற வங்கிகள்

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் சேமிப்பு கணக்கிற்கு அளிக்கப்படும் வட்டி விகித அளவீடுகள்

ஹெச்டிஎப்சி வங்கி : 3.50%

ஐசிஐசிஐ வங்கி : 3.5% - 4.00%

ஆக்சிஸ் வங்கி : 3.50%

கோட்டக் மஹிந்திரா வங்கி : 4.00% - 6.00%

யெஸ் வங்கி : 5.00% - 6.25%

பந்தன் வங்கி : 4.00% - 7.00%

லட்சுமி விலாஸ் வங்கி : 3.50% - 6.50%

இண்டஸ்இண்ட் வங்கி : 4.00% - 6.00%

ஆர்பிஎல் வங்கி : 5.00% - 6.75%

வைப்பு நிதி வட்டி விகிதம்

வைப்பு நிதி வட்டி விகிதம்

இதேபோல் இந்தியாவின் முன்னணி வங்கிகளில் அளிக்கப்படும் பிக்சட் டெபாசிட் திட்டதிற்காக வட்டி விகிதம். ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தைத் தொடர்ந்து குறைத்து வந்த காரணத்தால் வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் குறைந்துள்ளது

பாரத ஸ்டேட் வங்கி : 2.90% - 5.40%

ஐசிஐசிஐ வங்கி : 2.50% - 5.50%

ஹெச்டிஎப்சி வங்கி : 2.50% - 5.50%

பஞ்சாப் நேஷனல் வங்கி : 2.90% - 5.25%

கனரா வங்கி : 2.90% - 5.25%

ஆக்சிஸ் வங்கி : 2.50% - 5.75%

பேங்க் ஆஃப் பரோடா : 2.80% - 5.25%

IDFC வங்கி : 2.75% - 5.75%

பேங்க் ஆஃப் இந்தியா : 2.85% - 5.05%

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி : 3.00% - 5.30%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Bank offering higher interest rate for savings accounts than Fixed deposit

5 Bank offering higher interest rate for savings accounts than Fixed deposit
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X