கிரெடிட் ஸ்கோர் ரொம்ப குறைவா இருக்கா.. கவலையே படாதீங்க.. ஈஸியா அதிகரிக்கலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு கடன் வழங்கலாமா? வேண்டாமா? என்பதனை உங்களின் சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் தான் நிர்ணயம் செய்யும். ஏனெனில் உங்களின் கிரெடிட் ஸ்கோரை பொறுத்து தான் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதையும், அப்படியே கொடுக்க தீர்மானித்தாலும், வட்டி விகிதம் எவ்வளவு என்பதையும் வங்கிகள் தீர்மானிக்கும்.

 

அப்படிப்பட்ட கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதாலேயே பலரும் வங்கிகள் கடன் வாங்க முடியாத நிலை இருக்கும்.

இனி நான் கடன் வாங்கவே முடியாதா? எனது சிபில் ஸ்கோரினை அதிகரிக்கவே முடியாதா? அதனை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று புலம்புபவர்களுக்கு தான் இந்த பதிவு.

ரூ.4 டூ ரூ.75.. ஒரு வருடத்தில் 1,705% வருமானம்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

முதலில் சிபில் ஸ்கோர் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம். சிபில் ஸ்கோர் என்பது நுகர்வோரின் கடன் பரிவர்த்தனைகளை பொறுத்து அளிக்கப்படும் கடன் மதிப்பெண் ஆகும். இது 300 முதல் 900 வரையில் இருக்கும். இந்த சிபில் ஸ்கோர் பொதுவாக 750 மேல் இருந்தால், உடனடியாக கடன் கொடுக்க ஒப்புதல் அளிக்கின்றன.

இஎம்ஐ சரியான நேரத்தில் செலுத்துங்கள்

இஎம்ஐ சரியான நேரத்தில் செலுத்துங்கள்

உங்களது கடனுக்கான நிலுவை அல்லது மாத தவணை, கிரெடிட் கார்டு பில்களை சரியான நேரத்தில் செலுத்தி விடுங்கள். இது சிபில் ஸ்கோரினை உயர்த்தவும், சிபில் ஸ்கோரினை குறையாமல் பார்த்துக் கொள்ளவும் உதவும். ஒரு சிறு தவணை தள்ளி செலுத்துவது கூட உங்களது சிபில் மதிப்பெண்-ஐ பாதிக்கலாம்.

உங்கள் கிரெடிட் லிமிட்டை தாண்டாதீர்கள்
 

உங்கள் கிரெடிட் லிமிட்டை தாண்டாதீர்கள்

உதாரணத்திற்கு உங்களது கிரெடிட் கார்டில் அத்தியாவசியம் தவிர பயன்படுத்தாதீர்கள். அப்படி பயன்படுத்தினாலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட கிரெடிட் லிமிட்டை தாண்டாதீர்கள். முடிந்த அளவு 30 - 50% கிரெடிட் லிமிட்டினை பயன்படுத்துங்கள். அதிகளவில் பயன்படுத்தாதீர்கள். அதுவும் உங்களது கிரெடிட் ஸ்கோரினை பாதிக்கலாம்.

பல இடங்களில் கடனுக்காக விண்ணபிக்காதீர்

பல இடங்களில் கடனுக்காக விண்ணபிக்காதீர்

பலர் தங்களது அவசர தேவைக்காக கடன் பெற பல இடங்களில் விண்ணபிப்பார்கள். எது விரைவில் கிடைக்கிறதோ அங்கு வாங்கலாம் என நினைப்பார்கள். ஆனால் இத்தகைய சிறிய செயல் கூட, உங்களின் கிரெடிட் ஸ்கோரினை பாதிக்கும். ஆக இதுபோன்ற சிறு சிறு செயல்கள் கூட, உங்கள் சிபில் ஸ்கோரினை பாதிக்கலாம்.

எந்த வகை கடன்

எந்த வகை கடன்

நீங்கள் வாங்கியிருக்கும் கடன் பாதுகாப்பான கடனா அல்லது பாதுகாப்பற்ற கடனா என்பது கூட, உங்களது கடன் மதிப்பெண்னில் எதிரொலிக்கலாம். ஆக இது கலந்து இருப்பதே நல்லது. ஆக இதனையும் கூட சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.

அதிக வட்டி விகிதம்

அதிக வட்டி விகிதம்

உங்களிடம் பல கடன்கள் இருந்தால், அதில் அதிக வட்டி விகிதத்தில் உள்ள கடனை இலக்காக கொள்ளுங்கள். குறிப்பாக பல கிரெடிட் கார்டு கடன் மற்றும் தனி நபர் கடன் இருந்தால் அதனை ஒருங்கிணைத்து கொள்ளலாம். அது மிக பயனுள்ளது. என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சேவையை பல நிறுவனங்களும், வங்கிகளும் வழங்குகின்றன.

சம்பளத்தில் எவ்வளவு இஎம்ஐ

சம்பளத்தில் எவ்வளவு இஎம்ஐ

உங்களது சம்பளத் தொகையில் மாத தவணை தொகையானது 30% வரம்பில் வைத்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவு அதற்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல உங்களது கடனுக்கான கோரிக்கை அதிகளவில் செய்ய வேண்டாம். அது உங்களது கடன் மதிப்பெண்ணில் பிரதிபலிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bad credit score worrying you? Don't worry, it can be easily increased

Bad credit score worrying you? Don't worry, it can be easily increased/ கிரெடிட் ஸ்கோர் ரொம்ப குறைவா இருக்கா.. கவலையே படாதீங்க.. ஈஸியா அதிகரிக்கலாம்!
Story first published: Tuesday, November 9, 2021, 19:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X