எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. எஸ்பிஐ, ஆக்ஸிஸ், ஹெச்டிஎஃப்சி? ஸ்மால் பைனான்ஸ்களில் என்ன விகிதம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பிக்ஸட் டெபாசிட் என்பது மிக முக்கியமான வங்கி முதலீடுகளில் ஒன்றாகும்.

இது ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஒரு குறிப்பிட்ட வருவாயினைத் தரும் முக்கிய முதலீடாகும். பெரும்பாலும் முதலீட்டின் கால வரம்பு, வட்டி விகிதம் என்பது பெரும்பாலும் மாறுவதில்லை.

ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் குறையும் போது, இதுபோன்ற முதலீடுகளுக்கும் வட்டி குறைகிறது. ஆனால் இது பாதுக்காப்பான ஒரு முதலீடாக இருப்பதால், இன்றைய காலகட்டத்திலும் வட்டி குறைவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இதனையே நாடி செல்கின்றனர்.

இந்தியாவின் முன்னணி வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்!

பிகஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்
 

பிகஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்

இந்த வட்டி விகிதங்கள் ஒரு வங்கியை விட மற்றொரு வங்கியுடன் ஒப்பிடும்போது சற்று வேறுபடுகின்றன. இதே வங்கி அல்லாத சில நிதி நிறுவனங்களில் வட்டி விகிதம் அதிகமாக கொடுக்கப்படுகிறது. பொதுவாக இந்த பிக்ஸட் டெபாசிட்களுக்காக கால வரம்பு 7 நாள் முதல் 10 வருடங்கள் வரை உள்ளது. அதே போல வங்கிகளில் வட்டி விகிதம் 2.5% முதல் 7.5% வரை வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு சற்று அதிகமாக காணப்படுகிறது.

முன்னணி வங்கிகள்

முன்னணி வங்கிகள்

நாட்டின் முன்னணி வங்கிளான எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள் முதலீட்டு கால வரம்பானது 7 நாள் முதல் 10 வருடங்கள் வரை உள்ளது. அதே போல வங்கிகளில் வட்டி விகிதம் கிட்டதட்ட 7% வரை வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு சற்று அதிகமாக காணப்படுகிறது.

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி

  • 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - 3.50%
  • 15 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் -4.25%
  • 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 5.50%
  • 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 6.00%
  • 181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 6.50%
  • 1 வருடத்திற்கு - 6.90%
  • 1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 7.00%
  • 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 7.50%
  • 3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 7.00%
  • 5 வருடத்திற்கு 7.00%
  • 5 வருடத்திற்கு மேல் - 10 வருடத்திற்குள் -6.50%

2 கோடி ரூபாய் உள்ள டெபாசிட்களுக்கு இந்த விகிதமாகும். மேற்கண்ட இந்த வட்டி விகிதம் ஆகஸ்ட் 11-லிருந்து வழங்கப்படுகிறது. இதிலிருந்து மூத்த குடிமக்களுக்கு 8% வரையில் வழங்கப்படுகிறது.

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
 

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம், சாதாரண குடிமக்களுக்காக வட்டி விகிதத்தினை அதிகமாகும்.

  • 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.00%
  • 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.25%
  • 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 4.00%
  • 181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 6.00%
  • 365 நாட்கள் முதல் 699 நாட்கள் வரையில் - 6.75%
  • 700 நாட்களுக்கு - 7.00%
  • 701 நாட்கள் முதல் 3652 நாட்கள் வரையில் - 6.75%
ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

  • 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.50%
  • 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.70%
  • 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 4.10%
  • 181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 5.30%
  • 12 மாதம் முதல் 15 மாதம் வரையில் - 6.50%
  • 15 மாதம் 1 நாள் முதல் 18 மாதம் வரையில் - 6.50%
  • 18 மாதம் 1 நாள் முதல் 21 மாதம் வரையில் - 6.80%
  • 21 மாதம் 1 நாள் முதல் 24 மாதம் வரையில் - 6.80%
  • 24 மாதம் 1 நாள் முதல் 30 மாதம் வரையில் - 6.80%
  • 30 மாதம் 1 நாள் முதல் 36 மாதம் வரையில் - 6.90%
  • 3 வருடம் 1 நாள் முதல் 42 மாதம் வரையில் - 7.00%
  • 42 மாதம் 1 நாள் முதல் 48 மாதங்கள் வரையில் - 6.50%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks and small banks offers FD rates at 7%, please check here full details

Some banks and small banks offer FD rates at 7% to 8%.. please check here full details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X